Monday, August 29, 2011

உறவு முறித்த உறவுநாளத்தில் ஓடிய குருதியினை 
ஒருகணம் நிற்கச் செய்தது 
அலைபேசியில் வந்த சேதி 

செவியினை நிரப்பிய சேதி 
அகத்தினில் இடியும் மின்னலும் 
 விழிகளில் சொட்டியது கண்ணீர் 

சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க 
நிலை தடுமாறிய தருணம் 
உடைந்தது வலிமையிழந்து உடல் 

 அகம் தெகுட்டும் ஒவ்வாமை 
மண்ணில் விழுந்த அமிலம்போல் 
வேதனையை கக்கியது மனம் 

 அகத்தில் எரியும் அனலில் 
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல் 

ஊர் உறவுகளின் ஏளனம் 
கீறும் சொல் ஆயுதங்கள் 
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள் 

தெளிவற்று கலங்கிய மதியில்  
அவ்வோப்போது தெளிந்து ஓடியது 
ஒரு சுருக்கினில் சுயமரணம் 

மண பந்த உறவறுத்து 
படிதாண்டிய கட்டில் உறவு 
வீதியில் தொட்டில் உறவு 

அக்கரை வாழ்கையில் அவன் 
இக்கரை தனிமைகளில் அவள் 
அத்திப் பூவாய் கட்டில்பந்தம் 

திரவியம் தேடுதலின் வழியில் 
சலவைத் தாளின் போதையில் 
வாழ்கைவீதில் தொலைத்தான்  உறவை 

Sunday, August 21, 2011

வேனல் துளிகள்


உறக்கம் கலைத்தான் கதிரவன் 
இரவு விழித்த களைப்பில் 
உறங்கச் சென்றது நிலவு


மெல்ல விழிதிறந்தான் கதிரவன் 
இளஞ் சூட்டிற்கு இரையானது 
புற்களில் உறங்கிய பனித்துளிகள்

இளஞ்சூடு தட்டி எழுப்ப 
உறக்க சோம்பலை  களைந்து 
விருட்டெழுந்தது மரமும் செடிகளும் 


கொக்கரகோ கொக்கரக்கோ ....
கதிரவன் எழுந்து வருகிறான் 
ஊரை எழுப்பியது சேவல்கோழி 


குஞ்சுகளின் அன்றைய உணவிற்காக  
கூட்டிலிருந்து இறகை விரித்து 
புறப்பட்டது தாய்ப் பறவைகள்  

உறங்கும் வீட்டை உணர்த்துகிறது 
சன்னல் கதவு இடுக்குகளில்
 ஊடுருவி நுழைந்த வெளிச்சம் 


நல்லா விடிந்து விட்டது 
எண்ண உறக்கம் வேண்டியிருக்கு 
பிள்ளைகளை எழுப்பும் அம்மா 


காலையிலேயே சுளீர்ன்னு வெயில் 
எங்கோ பயணம் போவதற்காக 
வீட்டில் இருந்து புறப்படுபவர் 


 ஈரத்தை களவு கொடுத்து 
கொடியில் புன்னகை செய்கிறது 
உலர்ந்த உடுதுணிகள் 


மார்பில் கொதிக்கும் அனல் 
கதிரவன் மேல் கோபம் 
வெற்றுப்பாதங்களை சுட்டது மணல்வீதி 


நீண்ட தார் சாலையில் 
அங்காங்கே தேங்கி நிற்கிற்கும் 
கானல் நீர்த் துளிகள் 


வறண்டு தொண்டயுமாய் 

தண்ணீரின் அடையாளம் தேடி 
வீதியில் துவளும்  பாதகாணிகள்


இங்கே வந்து அமருங்கள் 
 மடியில் நிழலை விரித்து 
வழிபோக்கர்களை அழைக்கும் மரங்கள் 

உழைக்காத மனிதர்களுக்கும் 
உடலில் இருந்து உதிர்கிறது 
வியர்வைத் துளிகள் 


கருணை அற்ற கதிரவன் 
மார்பு வெடித்து பரிதபமாய் 
நீர் வற்றிய குளம்


சிதறிவிழும் அனல் வேட்கை 
நட்டு நடு உச்சியில் 
பூமியை முறைத்தபடி கதிரவன் 

Sunday, August 14, 2011

முனங்கல் மந்திரம்நிசப்தங்களை கிழித்துக் கொண்டு 
இருளின் காதை அடைக்கிறது 
அந்த முனங்கல் சத்தம் 

விசை அசைவுப் புணர்வில் 
தத்தம் உணர்ச்சிகளை கொட்டும் 
ஆயத்தத்தில் இரு பாலினங்கள் 

முனங்கலில் வழியும் போதை 
சுயத்தை நனைத்து நீத்திட 
விசைவில் நகரும் பொம்மையாய் மதி 

நாளத்தில் ஊருடுவி கலந்தது 
சலனங்களற்ற நிசப்த இரவில் 
காதில் ஓதப்பட்ட மந்திரம்

தொப்புள்கொடி உறவை வேர்பிரித்து 
வேதனையின்றி  மெருதுவாய் கீறுகிறது 
குழைந்த மெல்லிய குரலொலி 

நொடிகளின் ஆயுள் நிகழ்வு 
உறவு  பேரம்பேசும் கீழ்பாலினம் 
வாக்குறுதி  அடியரையில்  மேல்பாலினம் 

 உறவு உயிர் ஓடிய 
வெட்டப்பட்ட தொப்புள் கொடியில்
பதியப்பட்டது முதல் விரிசல்

Sunday, August 7, 2011

அவன் தேடாத காதல்அவர்கள் காதல் செய்கிறார்கள் 
எனக்கும் வேண்டும் ஒருகாதல் 
மீசைதளிர்ந்த விடலைப் பருவம் 


 சீவி சிங்கார அலங்கரித்து 
ஒரு கூத்தாடிக் கோமாளியாய் 
பெண்கள் திரியும் வீதியில் 


நித்தம் அரங்கேறிய வீதிநாடகத்தில் 
கடந்துசென்ற பெண்மை கூட்டத்தில் 
சல்லடையிட்டு அறித்தான் அழகை 


மேனியில் வெள்ளைத்தோல் பொதிந்து 
அழகிய வடிவுடைய பெண்மைகள் 
விழிகள் தேடிய காதலிகள் 


ஓரப்பார்வை  விதைக்காத பெண்மைகள் 
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான் 
வடிவும் அழகும் தேடியவன் 


காலம் கடந்த தேடல்கள் 
இதுவரை கிடைக்காத காதலி 
சலிப்பில் துவண்டான் அவன் 


உள்ளத்தை தேட மறந்தவன் 
 விலக்கப்பட்ட உணர்வாய்  காதல் 
காலம் உணர்த்திய போதனை 


பறந்து விரிந்த இத்தரணியில் 
நிறைய மனிதர்களிடம் காதல்கள் 
 அகத்தில் வேதனையுமாய்  இவன் 


என்றோ ஒரு தருணத்தில் 
அவன் அகத்திலிருந்து தொலைந்தது 
நேற்றுவரை தேடிய காதல் 


அவனை விரும்பும் ஓரிதயம் 
புற அழகிலும் வடிவிலும் குன்றி 
அகத்தில் அழகுடன் அவ்வீதியில் 


அவனைசுற்றி காதல் இருந்தும் 
வழிமாறிய காதல் தேடலால் 
இன்னும் வந்துச் சேரவில்லை 
அவன் தேடாத காதல் 


Monday, August 1, 2011

இது நவ உலகம்

வீட்டிலிருந்து துரத்தப்படும் ஈன்றவர்கள் 
நித்தம் அறுந்துவிழும் மணபந்தங்கள் 
குடுப்ம உறவில்துலையும் புனிதங்கள்மூடும் முலையும் திறந்திட்டு 

ஆடை பஞ்சங்களில் பெண்மைகள் 
வீதியில் திரியும் அநாகரிகம் 


விற்பனைப் பொருளாய் கருவறைகள் 
வீதிக்கு வெளியில் விபச்சாரம் 
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்வலியவர்களின் கோரமான  ஆதிக்கம் 
எளியவர்களின் முகத்திலும் அகத்திலும் 
துலைந்து விட்டது புன்னகை

தானம் மறந்துபோன கரங்கள் 

கருணை தொலைந்துபோன மனங்கள் 
நஞ்சை கக்கும் பொய்கள் 


நானே இவ்வுலகின் இறைவன்
கடவுளின் அவதராமாய் ஈனமனிதர்கள் 
மனிதனை துதிக்கும் மடையர்கூட்டங்கள் 


பணத்தை வஞ்சனை கொண்டும் 
பதவியை பணம் கொண்டும் 
அற்ப உழைப்பில் நேடுபவர்கள்நாசங்களுக்கு வித்து விதைக்கும் 
ஈன நெரிகட்ட வஞ்சகர்கள் 
மனித புகழ்ச்சியின் உச்சத்தில்

தகுதியற்ற கேடுகேட்டவர்களிடம் 
நாடாளும் நன் பதவிகள் 
பல்லாக்கு தூக்கும் மதியற்றவர்கள் 


பச்சிளம் சிசுக்களிலும் காமம் 
தன்பயிரை  மேயும் வேலிகள்
நித்தம் களவாடப்படும் கற்பு உடலில் உதிர்க்கப்படும் உயிர்கள்
மாற்றான் உழைப்பைக் களவாடல் 

வாக்குறுதிகளில் வஞ்சனை செய்தல் 


பச்சை குருதியின் கொச்சைவாசம் 
உப்பாய்  உறையும் கண்ணீர்கள் 
கதறலும் ஏளனமும் சாபக்குரலும்


சாத்தானின் கூடாரமாகிய மண்ணுகலம்
மதியும் நெறியுமற்ற  ஈனமனிதர்கள்
வாநோளம் குவியும் பாவங்கள் 


நண்மை மனிதர்களின் நிழலில் 
வாழுகிறார்கள் நயவஞ்ச மனிதர்கள் 
இரண்டையும் சுமந்து சுழல்கிறது 
 பாவ அனலில் எரியும்பூமி 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...