Monday, August 1, 2011

இது நவ உலகம்





வீட்டிலிருந்து துரத்தப்படும் ஈன்றவர்கள் 
நித்தம் அறுந்துவிழும் மணபந்தங்கள் 
குடுப்ம உறவில்துலையும் புனிதங்கள்



மூடும் முலையும் திறந்திட்டு 

ஆடை பஞ்சங்களில் பெண்மைகள் 
வீதியில் திரியும் அநாகரிகம் 


விற்பனைப் பொருளாய் கருவறைகள் 
வீதிக்கு வெளியில் விபச்சாரம் 
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்



வலியவர்களின் கோரமான  ஆதிக்கம் 
எளியவர்களின் முகத்திலும் அகத்திலும் 
துலைந்து விட்டது புன்னகை

தானம் மறந்துபோன கரங்கள் 

கருணை தொலைந்துபோன மனங்கள் 
நஞ்சை கக்கும் பொய்கள் 


நானே இவ்வுலகின் இறைவன்
கடவுளின் அவதராமாய் ஈனமனிதர்கள் 
மனிதனை துதிக்கும் மடையர்கூட்டங்கள் 


பணத்தை வஞ்சனை கொண்டும் 
பதவியை பணம் கொண்டும் 
அற்ப உழைப்பில் நேடுபவர்கள்



நாசங்களுக்கு வித்து விதைக்கும் 
ஈன நெரிகட்ட வஞ்சகர்கள் 
மனித புகழ்ச்சியின் உச்சத்தில்

தகுதியற்ற கேடுகேட்டவர்களிடம் 
நாடாளும் நன் பதவிகள் 
பல்லாக்கு தூக்கும் மதியற்றவர்கள் 


பச்சிளம் சிசுக்களிலும் காமம் 
தன்பயிரை  மேயும் வேலிகள்
நித்தம் களவாடப்படும் கற்பு 



உடலில் உதிர்க்கப்படும் உயிர்கள்
மாற்றான் உழைப்பைக் களவாடல் 

வாக்குறுதிகளில் வஞ்சனை செய்தல் 


பச்சை குருதியின் கொச்சைவாசம் 
உப்பாய்  உறையும் கண்ணீர்கள் 
கதறலும் ஏளனமும் சாபக்குரலும்


சாத்தானின் கூடாரமாகிய மண்ணுகலம்
மதியும் நெறியுமற்ற  ஈனமனிதர்கள்
வாநோளம் குவியும் பாவங்கள் 


நண்மை மனிதர்களின் நிழலில் 
வாழுகிறார்கள் நயவஞ்ச மனிதர்கள் 
இரண்டையும் சுமந்து சுழல்கிறது 
 பாவ அனலில் எரியும்பூமி 

3 comments:

  1. சாத்தானின் கூடாரமாகிய மண்ணுகலம்
    மதியும் நெறியுமற்ற ஈனமனிதர்கள்
    வாநோளம் குவியும் பாவங்கள் // அனல் வீசும் வரிகள்..

    ReplyDelete
  2. அனல் பறக்கிறது தோழா..
    சமூகத்தின் அன்றாட அவலங்கள்.. சிறப்பாய் இருக்கிறது தோழா...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...