Sunday, August 7, 2011

அவன் தேடாத காதல்



அவர்கள் காதல் செய்கிறார்கள் 
எனக்கும் வேண்டும் ஒருகாதல் 
மீசைதளிர்ந்த விடலைப் பருவம் 


 சீவி சிங்கார அலங்கரித்து 
ஒரு கூத்தாடிக் கோமாளியாய் 
பெண்கள் திரியும் வீதியில் 


நித்தம் அரங்கேறிய வீதிநாடகத்தில் 
கடந்துசென்ற பெண்மை கூட்டத்தில் 
சல்லடையிட்டு அறித்தான் அழகை 


மேனியில் வெள்ளைத்தோல் பொதிந்து 
அழகிய வடிவுடைய பெண்மைகள் 
விழிகள் தேடிய காதலிகள் 


ஓரப்பார்வை  விதைக்காத பெண்மைகள் 
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான் 
வடிவும் அழகும் தேடியவன் 


காலம் கடந்த தேடல்கள் 
இதுவரை கிடைக்காத காதலி 
சலிப்பில் துவண்டான் அவன் 


உள்ளத்தை தேட மறந்தவன் 
 விலக்கப்பட்ட உணர்வாய்  காதல் 
காலம் உணர்த்திய போதனை 


பறந்து விரிந்த இத்தரணியில் 
நிறைய மனிதர்களிடம் காதல்கள் 
 அகத்தில் வேதனையுமாய்  இவன் 


என்றோ ஒரு தருணத்தில் 
அவன் அகத்திலிருந்து தொலைந்தது 
நேற்றுவரை தேடிய காதல் 


அவனை விரும்பும் ஓரிதயம் 
புற அழகிலும் வடிவிலும் குன்றி 
அகத்தில் அழகுடன் அவ்வீதியில் 


அவனைசுற்றி காதல் இருந்தும் 
வழிமாறிய காதல் தேடலால் 
இன்னும் வந்துச் சேரவில்லை 
அவன் தேடாத காதல் 


4 comments:

  1. இதைவிட அழுத்தமாக கூறிட இயலாது நண்பரே ..
    வாழ்த்துக்கள

    ReplyDelete
  2. வார்த்தைகள் விளையாடுகிறது தோழா.. அருமை அருமை.. தொடருங்கள்.

    ReplyDelete
  3. அருமையான வரிக்கோர்ப்பு...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

    ReplyDelete
  4. வழிமாறித் தேடி வந்து சேராத காதலின் முன்
    வலிசுமந்து நிற்கும் புனிதமான காதலை உணரமறுத்தான்
    இவன்.....// அதை உணர்த்திய விதம் அருமை !............இதன்
    இன்னொருவகைக் கவிதை தங்கள் வரவுக்காகக் காத்து
    நிற்கின்றது .வாருங்கள் வந்து கூறுங்கள் உங்கள் பொன்னான
    கருத்தினை .மிக்க நன்றி பகிர்வுக்கு ..............

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...