Monday, August 29, 2011

உறவு முறித்த உறவு



நாளத்தில் ஓடிய குருதியினை 
ஒருகணம் நிற்கச் செய்தது 
அலைபேசியில் வந்த சேதி 

செவியினை நிரப்பிய சேதி 
அகத்தினில் இடியும் மின்னலும் 
 விழிகளில் சொட்டியது கண்ணீர் 

சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க 
நிலை தடுமாறிய தருணம் 
உடைந்தது வலிமையிழந்து உடல் 

 அகம் தெகுட்டும் ஒவ்வாமை 
மண்ணில் விழுந்த அமிலம்போல் 
வேதனையை கக்கியது மனம் 

 அகத்தில் எரியும் அனலில் 
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல் 

ஊர் உறவுகளின் ஏளனம் 
கீறும் சொல் ஆயுதங்கள் 
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள் 

தெளிவற்று கலங்கிய மதியில்  
அவ்வோப்போது தெளிந்து ஓடியது 
ஒரு சுருக்கினில் சுயமரணம் 

மண பந்த உறவறுத்து 
படிதாண்டிய கட்டில் உறவு 
வீதியில் தொட்டில் உறவு 

அக்கரை வாழ்கையில் அவன் 
இக்கரை தனிமைகளில் அவள் 
அத்திப் பூவாய் கட்டில்பந்தம் 

திரவியம் தேடுதலின் வழியில் 
சலவைத் தாளின் போதையில் 
வாழ்கைவீதில் தொலைத்தான்  உறவை 

3 comments:

  1. உங்கள் கவிதையைப் படிக்கும் போது நண்பனிடம் தன் மனைவி குழந்தையை தாரை வாத்துக் கொடுத்த செய்தி நினைவுக்கு வருகிறது
    திரவியம் தேடுதலின் வழியில்
    சலவைத் தாளின் போதையில்
    வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

    வலிகள் நிறம்பிய வரிகள் நன்றி செய்தாலி

    ReplyDelete
  2. மண பந்த உறவறுத்து
    படிதாண்டிய கட்டில் உறவு
    வீதியில் தொட்டில் உறவு

    அக்கரை வாழ்கையில் அவன்
    இக்கரை தனிமைகளில் அவள்
    அத்திப் பூவாய் கட்டில்பந்தம்

    திரவியம் தேடுதலின் வழியில்
    சலவைத் தாளின் போதையில்
    வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

    இன்றைய நிலை கவியாய் சொன்னவிதம் சோகமானாலும்,
    எண்ணத்திற்கும்,வார்த்தைக்கும் ஒரு சபாஷ்.தொடருங்கள் தோழரே

    ReplyDelete
  3. உணர்வுகளை இதை விட சிறப்பாக அழுத்தமாக கூறிட இயலாது என்றே எண்ணுகிறேன் ..
    அவ்வளவு பொருத்தம் ..
    படிக்கும் பொது ஒரு நிமிடம் நின்றுதான் துடிக்கிறது இதயம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...