Tuesday, September 6, 2011

புகழ் தேடும் நவதலமுறை





உயரும் ஊடக மேடைகளில் 
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம் 

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும் 
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள் 

பக்குமற்ற பிஞ்சு மனங்களில் 
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும் 
புகழுக்கான  நவநாகரீக கலைகள் 

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை 
நாணம் மானம் முற்றும்துறந்து 
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள் 

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும் 
புகழுக்கான விடா நெட்டோட்டம் 
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள் 

நவநாகரிக வாழ்க்கை வீதியில் 
கண்கட்டி  மனிதர்களின் பயணம் 
வாசலை திறந்துவைத்து பாதாளம் 

எட்டாக் கனியின் ஆசைகள் 
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது 
அதை தேடியவர்களின் வாழ்க்கை 

 உடலின்  வக்கிரங்களை ரசிபவர்கள் 
அதீத பணத்தாசை உள்ளவர்கள் 
 இவர்களுக்கு கூடாரமாய்  கலை



நஞ்சாய் படரும் புகழாசை 

அணியாய் திரளும் குடும்பங்கள் 

தொலையும்  பச்சை மனிதர்கள் 



உலக அரங்கக் கலைகளில் 
மகுடம் சூட இயலாமல் 
கோடி மக்களை பெற்றதாய் 



கலைகள் கற்பது தவறில்லை

திறனை எழுப்புவது சிறந்ததே 
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ 
அறிஞர்களும் வீரர்களுமே தேவை 
வெறுமொரு 
கூத்தாடியல்ல 

-செய்தாலி 

2 comments:

  1. இன்றைய அவலத்தை அடிச்சி கூறிய உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள் நண்பரே ..
    சில இடங்களில் எழுத்து பிழைகள் உள்ளது அதை மட்டும் சரி செய்யுங்கள்

    ReplyDelete
  2. //அரசன் கூறியது

    இன்றைய அவலத்தை அடிச்சி கூறிய உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள் நண்பரே ..
    சில இடங்களில் எழுத்து பிழைகள் உள்ளது அதை மட்டும் சரி செய்யுங்கள்//

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி தோழரே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...