Thursday, September 8, 2011

அவளின் அந்த நாட்கள்




இன்று உறவுக்கு தீட்டாம் 
அவளின் வீடுதேடி வந்தவர்கள் 
திரும்பினார்கள்  வாசப்ப்படியிலேயே

வாடிக்கையாளர்களின் அழைப்பு 
 வருடல் இன்றி அழுதது 
மேசையில்  துடிக்கும் கைபேசி

 வலியில் துவளும் நொடியில் 
விழிசிந்திய நீர்த் துளியில் 
இடையே ஆனந்தத் துளிகள் 

உடைபட்டு சிதறிய குருதியில் 
வாழ விருப்பமற்று வெளியேறியது 
தலையெழுத்து தெரியாத கரு 

சீண்டல் சலனங்கள் இன்றி 
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்   
அவளின் அந்த நாட்களில் 

-செய்தாலி 

4 comments:

  1. //# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
    பெண்மையின் துயரங்கள்...//

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    நன்றி கவிஞரே

    ReplyDelete
  2. சமூக அக்கறை உங்களின் கவிதையில் தெரிகிறது ..
    வலியையும் அதன் அடி மாறாமல் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //அரசன் கூறியது...
    சமூக அக்கறை உங்களின் கவிதையில் தெரிகிறது ..
    வலியையும் அதன் அடி மாறாமல் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி தோழரே

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...