Sunday, September 11, 2011

அழகும் அசிங்கமும்



தலைவன் ரசிக்கும் அழகை 
ஆடையின் அளவு குறைத்து 
காட்சியாக வீதி விழிகளுக்கு

தலைக்கு நீராடும் வேளைகளில் 
கூரையில் காகத்தை துரத்தி 
 அங்கம்மறைக்கும் நாணம் அழகு 



பெய்யும்  சிறு மழையினில்
கதிரவனின் இளம் சூட்டிலின் 
கலைந்தொழுகும் இரவல் சாயங்கள் 


விடாது கொட்டும் அடைமழையிலும் 
தொப்பலாய் நனைந்தும் கலைவதில்லை 
கமழும் மண்வாசனை அழகு 

நகரத்தின் உடுப்பின் வநாகரிகம் 
 வீதிவெளியில் எட்டிப் பார்க்கிறது 
பெண்மையின் மார்பகக்  கண்கள் 

போர்த்தும் மேலாடை அழகிற்கு
ஆயிரம் கவி தளிரிடுகிறது
கவிஞர்களின் சிந்தை கருவறையில் 



நித்தம் உடுத்தும் ஆடையாய்
 நவநாகரீகத்தின் பந்த உறவுகள் 
கழிப்பறையாகும் வெட்கத் தலங்கள் 


உள்ளம் கவர்ந்த கள்வனுக்கும் 
கொடிவேலிக்கு பிறகே முந்தி 
கோடுகளில் பந்த  உறவுமுறை 


அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு 
பெண்மையின் தூய்மை அழகுக்கு 
இறைவன் போர்த்திய ஆடைகள் 


 வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள் 


-செய்தாலி 

5 comments:

  1. பெய்யும் சிறு மழையினில்
    கதிரவனின் இளம் சூட்டிலின்
    கலைந்தொழுகும் இரவல் சாயங்கள்



    இந்த வரிகளில் உங்களின் கவித்துவம் மிளிர்கிறது. பாராட்டுகள் அன்பரே.

    Kaa.Na.Kalyanasundaram
    www.kavithaivaasal.blogpost.com

    ReplyDelete
  2. //கா ந கல்யாணசுந்தரம் கூறியது...
    பெய்யும் சிறு மழையினில்
    கதிரவனின் இளம் சூட்டிலின்
    கலைந்தொழுகும் இரவல் சாயங்கள்



    இந்த வரிகளில் உங்களின் கவித்துவம் மிளிர்கிறது. பாராட்டுகள் அன்பரே.//

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  3. //MANO நாஞ்சில் மனோ கூறியது...
    கவிதை கலக்கல்...!//

    உங்கள் முதல் வருகைக்கும்
    கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  4. கவித்துவம் நிறைந்த கலக்கள் வரிகள் செய்தாலி. பாராட்டுக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...