Thursday, September 15, 2011

அந்த ஊர் வீதி


சொல்லாமல் சென்ற கதிரவன்  
 நீலமேகத்திற்குமுகம் சிவக்க 
மெல்லிய புன்னகையிட்டு நிலவு 

தன் மடியில் இருப்பவர்களுக்கு 
மெல்ல கிளைகளால் விசிறியது 
வீதியின் முச்சந்திலுள்ள மரம் 

மரியாதை நிமித்தமாய் நின்றபடி 
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள் 
 நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள் 

சற்றுநேரமுன்  நடந்த வீதியில் 
தரையினை உற்றுப் பார்த்தபடி  
வீதியில் பணத்தை தொலைத்தவன் 

வீதியின் ஆரம்பப் பகுதியில் 
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி 

வாசலில் வழியனுப்பும் உறவுகள் 
திருபி பார்த்தபடி செல்கிறார்கள் 
வெளியூருக்கு  பயணம் புறப்பட்டவர்கள் 

வழிப்போக்கர்களை வழி மறித்து 
அடையாள முகவரி கேட்கிறான் 
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன் 

எதிரெதிர் வீட்டு மாடிகளில் 
சைகையால் பேசிக் கொண்டனர் 
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள் 

மும்மரமாக  எதைப்  பற்றியோ 
 வாயிச் சண்டை இடுகிறார்கள 
வாசலில் சில அண்டைவாசிகள் 

எங்கிருந்தோ வந்த அழைப்பு 
விடாது அழுதது  அலைபேசி 
ஆள் இல்லாத வீடு 

அன்னப் பாத்திரமேந்தி 
வீடுகள் தோறும் ஏறியிறங்கும் 
 மாலைநேர  வாடிக்கைப் பிச்சைக்காரன்  

வீதியில் விளையாடும் குழந்தைகள் 
அரட்டை அடிக்கும் காளையர்கள் 
வேடிக்கை பார்க்கும் பெருசுகள் 

ஆயிரம் காரண காரியங்கள் 
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள் 
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய்  வீதி
14 comments:

 1. உங்கள் கவிதையுடன் ஒரு வீதியில் நானும் நின்று அனைத்தையும் ரசித்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். அட்டகாசம்.

  ReplyDelete
 2. வாடிக்கைப் பிச்சைக் காரனின்...என மாற்றிவிடுங்கள்.அவதானித்து அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள.

  ReplyDelete
 3. வீதியின் யதார்த்த நிகழ்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் செயதாலி அவர்களே.
  கவிதைகள் தமிழ் கவிதை உலகில் தடம் பதிப்பணவாய் உள்ளது. பாராட்டுகள்.

  ReplyDelete
 4. அய்யம் பெருமாள்September 17, 2011 at 8:47 AM

  நீங்கள் உங்கள் ஊரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். செய்தாலி. பொது பிரச்சனைகளையும், காதலையும் ஒதுக்கிவிட்டு மற்ற கவிதைகள் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலை.

  இந்த வரியை எழுதுவதற்க்கு நீங்கள் எத்தனை நாள் அமைதியாய் வேடிக்கை பார்த்தீர்கள் என்று யூகிக்க முடியவில்லை.

  ஆனாலும் உங்கள் கவிதைகளில் .. இதெல்லாம் இன்று இழந்துவிட்டோம் என்கிற சோகம் ஆங்காங்கே இழையோடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி !!

  ReplyDelete
 5. செய்தாலியின் கவிதையைப் போன்றே அவர் தேர்வு செய்யும் சித்திரமும் அழகு..

  ReplyDelete
 6. செய்தாலியின் இந்தக் கவிதையும் வழக்கம் போலவே...
  அருமை. சிலர் நமது பாராட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். செய்தாலியும் அப்படித்தான்

  ReplyDelete
 7. இளமாறன்September 17, 2011 at 8:50 AM

  நீங்கள் பார்த்து ரசித்த வீதியை நானும் உங்களைபோலவே கவிதையின் மூலம் ரசித்தேன்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வீதியின் விதியை சொன்ன அழகு அருமை .
  உள்ளதை உள்ளபடி உண்மையை உவமையோடு சொல்லும் கவிதை!

  தோழரே !நடத்துங்கள் வீதியோட்டத்தை

  ReplyDelete
 9. அப்துல்லாஹ்September 17, 2011 at 8:51 AM

  சொல் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்ட கவிஞனின் இந்தக் கவிதை வீதியும் உயிருடைத்து எனச் சத்தியப் பிரமாணம் செய்கிறதோ...

  என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை.

  ReplyDelete
 10. யாதுமானவள்September 17, 2011 at 8:53 AM

  அப்படியே வீதியின் நடுவில் நான் நின்று அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்று உணரவைத்து விட்டீர்கள்... சாதாரணமாகப் பார்க்கும்போது சும்மா பார்த்துக்கொண்டு நகர்ந்துவிடுவோம்.. ஆனால் அத்தனை நிகழ்வுகளும் தங்கள் கவிதையில் சுவாரசியமாக கொண்டு செல்கிறீர்கள்... இதோ இக்கவிதையைப் படிக்கும்போது பால்கனி வழியாக வீதியை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்....

  ஆனால் இங்கு வெறும் கார்கள் மட்டுமே போகிறது... கருப்பு மெர்சிடிஸ், வெள்ளை பஜெரோ.... மரூன் ஜிஎம்சி... இப்படி...

  கவிதை அழகை ரசித்துக்கொண்டே... நம் நாட்டு வீதிகளை ஏக்கத்துடன் மனக்கண்ணில் பார்க்கிறேன்....


  எப்போதும்போல் எழுதும் பொருளின் ஆழத்தை உணர்ந்து.... அப்படியே அதைவிட அழகாகக் கவிதையாக்கும் செய்தாலிக்கு நிகர் செய்தாலியே...

  நன்றி... அருமையான கவிதையை இங்கு எம்முடன் பகிர்ந்தமைக்கு! வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் மெருகு கூட்டுவதற்

  ReplyDelete
 11. இக்கவிதையின் இட்டபோதே படித்தேன் காரியாலயத்தில் இருந்தபோது பதிலெழுத அவகாசமற்று விட்டுச்சென்றேன்

  மிகவும் அருமையான நினைவுகளைத் தொகுத்த வரிகள் வேலைகள் முடித்து விட்டு வீடு வரும் பெருசுகள் எப்ப வீதிக்கடைக்கு செல்லலாம் என்றுதான் காத்திருப்பர் அதையும் நிதர்சனமாக்கி வீதியின் நிகள்வுகளை நிழலாக்கிய கவிதை பாராட்டுகள்

  ReplyDelete
 12. சூப்பரா எழுதுறீங்க நண்பா? ஒரு கவிதை மூலமா ஒரு தெரு வில் நடக்கும் சம்பவங்களை வ்டித்து விட்டீர்கள்..

  ReplyDelete
 13. மிகவும் அருமை உணர்வு பூர்வமான வரிகள்.. எப்படி பாராட்ட என்றே தெரியல.. கலக்குறீங்க

  ReplyDelete
 14. மிக எளிமையாக அழகாக இந்த வீதியின் வழியில் கவிதை வரிகளால் எங்கோ அழைத்துச் சென்றீர்கள் வாசகர் இதயங்களையும் அருமை .....அருமை ...அருமை சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...