Sunday, September 18, 2011

ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்


மணமாலை சூடலுக்குப் பின் 
மங்கள கரமாக அரங்கேறுகிறது 
கடமையான கட்டில் சடங்குகள் 

உறவுகள் தாம்பத்யம் உணரும்முன் 
நடுவீட்டில் அவிழ்க்கப் படுகிறது 
சில தொட்டில் கயிறுகள் 

மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம் 
தொடரும் நெட்டோட்ட முடிவில் 
உதிர்கிறது நல்ல பருவங்கள் 

காலச் சக்கரத்தில் விழுந்து 
செல்லரித்துச் சிதைந்து விடுகிறது 
அந்த நாட்களின் நிகழ்வுகள்

தலை தூக்கும் வாரிசுகள் 
உறவுக் கடமைகள் குறைந்து 
சற்று இளைப்பாறும் தருணங்கள் 

பழுத்து நரைத்த பருவம் 
தனிமைகளில் எட்டிப் பார்க்கிறது 
அகத்தில் புதைந்த ஆசைகள் 

பருவம் மறந்த ஆசைகள் 
ஒத்துழைக்க மறுக்கும் உடல் 
காலம் போர்த்திய நோய்கள் 

ஒவ்வொரு இரவுக்கும் காரணங்கள் 
உறவுகளில் விழும் இடைவெளிகள் 
காலங்கடக்கும் கட்டில் பந்தம் 

இருளை இம்சை செய்யும் 
வெட்டங்களை அணைத்த பின்னும் 
அணையாமல் கட்டில் ஏக்கம் 

அகத்தில் சுவாசமுட்டும் ஆசைகள் 
நாளத்தில் ஸ்தம்பிக்கும் குருதி 
மௌனமாகிறது துடிக்கும் இதயங்கள் 

உறவில் கிட்டா உறவுத் தேடல் 
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்

உறவு விலக்கப் படுகையில் 
வாழ்நாளின் ஆயுள் குறைகிறது 
நவ மருத்துவ குறிப்புக்கள் 

உறவில் உறவை நீட்டுங்கள் 
உடலில் நோயை துரத்துங்கள் 
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
 


4 comments:

 1. இது… ஒரு புதிய ஹைக்கூ தொடர் வடிவம் (நான் அந்த வடிவத்தின் பெயர் மறந்து விட்டேன். மீண்டும் ஒரு முறை புத்தகங்களைப் புரட்டி பெயரைக் கண்டு பிடித்து சொல்கிறேன்.) உங்களுக்குக் கை வரப்பெற்றுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. செய்தாலி அவர்களே உங்களுக்கு இந்த வடிவ வகையின் பெயர் தெரிந்தால் சொல்லவும். அல்லது நீங்கள் அந்தத் தொடர் ஹைக்கூ வடிவத்தைத்தான் கருத்தில் கொண்டு எழுதினீர்களா? நான் பல வடிவங்களை எழுதி வந்தாலும் இந்த வடிவத்தை (நீங்கள் பயன்படுத்திய இந்த வடிவம்) எழுத முயன்று விட்டுவிட்டேன். கவிஞரே உங்களுக்கு அந்தத் தொடர் ஹைக்கூ வடிவத்தின் பெயர் உள்ளடக்கம் தெரிந்து கவிதை புனைந்தீரா? அல்லது புதுக்கவிதைபோல் கவிதை புனைந்தீரா?
  -- "புக்கவிதை ,ஹைக்கூ இரண்டையும் சேர்த்து எழுதுவதால் என் எழுத்தை கிறுக்கல் என்று அழைக்கிறேன்"
  --என்று சொல்கிறீர்கள். அது கிறுக்கல்கள் அல்ல. மிகச் சிறந்த கவிதை வடிவத்திற்கு நீங்கள் இப்பெயரைச் சூட்டி இருக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

  "அதற்கு புதுக்கவிதை சரியானதாக இருக்கும் என்று எண்ணினேன்
  அதன் பிறகு புத்துக் கவிதையில் ஹைக்கூவை சிறு பங்களிப்பை புகுத்திப் பார்த்தேன்.

  ஒன்பது சொற்கள் மூன்று வரிகள் அதில் நின்றுகொண்டு
  ஒரு விஷயத்தை சொல்லலாமா என்ற என் சிறு முயற்சி"

  --என்று நீங்கள் கூறுவதால் அவ்வடிவத்தின் பெயரைத் தாங்கள் அறிய வில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நான் அந்தக் கவிதையின் வடிவத்தை 2007ல் படித்திருக்கிறேன். பெயர்தான் நினைவில் இல்லை. விரைவில் அப்பெயரை தெரிவிக்கிறேன். வேண்டுமானால் அப்பெயரிலேயே நீங்கள் இதுபோன்ற உங்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடலாம். அப்படி வேண்டாம் என்றால் கிறுக்கல் என்ற தலைப்பை மாற்றி புதிய பெயரிடுங்கள்.

  ReplyDelete
 2. உறவு விலக்கப் படுகையில்
  வாழ்நாளின் ஆயுள் குறைகிறது
  நவ மருத்துவ குறிப்புக்கள்

  உறவில் உறவை நீட்டுங்கள்
  உடலில் நோயை துரத்துங்கள்
  ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
  முதலில் பாலியல் பற்றி " பா " கவர்ச்சியாக கூறினாலும் பின்னர் தனது கருத்தை அழகாக அதே சமயம் சிறப்பாக பதிவு செய்கிறது அதாவது ஐய்ம்பது அகவை என்பது முதிர்ந்த நிலை என எண்ணி விடுகிறனர் இது பிழையானதே இனி அவர்களையும் வாழவிட கூர்வது சிறப்பான வரிகள் பாராட்டுகள்..

  ReplyDelete
 3. இன்றைய வாழ்வியலை மிக அழகாத் தத்துரூபமாகப் படம் பிடித்துள்ளது இக் கவிதை வரிகள் அருமை ......
  வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

  ReplyDelete
 4. பொருளீட்ட வெளிநாடு செல்லும் ஆன்மாக்களின் கதை இளமையை தொலைத்து ...சோகத்தை வாங்கும் நிலை .....

  .....அழகாய் சொல்லப்பட்டு இருக்கிறது .

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...