Thursday, September 22, 2011

இடைவெளி உதிர்வுகள்



கருவில் சிதையும்   சிசு 
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில்  உதிரும் மனிதன் 


உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள் 


எதிர் நோக்கா ஒர்நாழிகையில் 
இளமையில் வாழ்நாளை  உதிர்ப்பவர்கள் 

நெடுந்தூர வாழ்க்கை பாதையில் 
முதுமையால்  உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை 
எழுதப்பட்ட விதியா 

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும் 
 இடைவெளி மரணங்கள் 

 மனிதர்களை நேசிப்பதாக சொல்லும் 
பரம்பொருளை நோக்கி ஒர்வினா 

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும் 
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம் 

பிறகு ஏனோ  
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

1 comment:

  1. மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
    பரம்பொருளை நோக்கி ஒர்வினா

    நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
    வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

    பிறகு ஏனோ
    வயது எல்லைக் கோட்பாடுக்குள்
    இந்த மனித வாழ்க்கை

    சிந்தனை வெள்ளம் சிறப்பாக ஓடியுள்ளது வாழ்த்துக்கள் சகோ நன்றி பகிர்வுக்கு ..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...