Monday, September 26, 2011

கருணை தர்மங்கள்




தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய் 
கட்டில் படுக்கையில் தந்தை 

அன்னம் உண்ணா தாய் 
பால் வற்றிய மார்பு 
பசியில் அழும் தம்பி 

அம்மா பிச்சை போடுங்கள் 
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி 
பசியில்  துவளும் சிறுவன் 

உயிர்போர்த்திய நான்கு  ஜீவன்கள் 
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு 

இது வறுமைக் காகிதத்தில் 
இறைவனின் கைவண்ணத்தில்  
எழுதப்பட்ட  துக்கக் கவிதை 

விழிகளால் வாசித்த மனிதர்கள் 
 அகம்   இளகி  விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை 

ஆலயம் கோவில் மசூதி 
காணாத தெய்வ சன்னதிகளில் 
நிரம்பி வழிகிறது காணிக்கைகள் 

சிறு கருணையை எதிர்நோக்கி 
வறுமைக் கோட்டின் கீழ் 
எத்தனை எத்தனை மனிதர்கள் 

உண்டியல் நிறைய காணிக்கைகள் 
உண்ண உணவின்றி பக்தகோடிகள் 
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள் 

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை 
கருணையில் உதிரும் தர்மங்கள் 
எளியவர்களின் உயிர் காக்குகிறது 

3 comments:

  1. இது வறுமைக் காகிதத்தில்
    இறைவனின் கைவண்ணத்தில்
    எழுதப்பட்ட துக்கக் கவிதை


    சிறப்பான வரிகள். நிதர்சனமான உண்மையின் அரங்கேற்றம்

    ReplyDelete
  2. நம்ம சைட்டுக்கு வாங்க!
    தளத்துல இணைச்சுகிடுங்க!
    உங்க கருத்த சொல்லுங்க!
    நல்லா பழகுவோம்!...

    ReplyDelete
  3. உண்டியல் நிறைய காணிக்கைகள்
    உண்ண உணவின்றி பக்தகோடிகள்
    சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

    அருமையான கவிதை வரிகள் சகோ
    அதிலும் இந்தவரி மனதை நெகிழ வைக்கின்றது மிக்க நன்றி பகிர்வுக்கு ....................

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...