Thursday, September 29, 2011

மனதை ஆளும் துக்கம்




வாழ்வியலில் 
நீளும் புன்னகைகள் 
இடைவெளிகளில் 
வந்துபோகும் துக்கங்கள் 

அகம் 
சிந்தும் புன்னகையில் 
 உதிர்ந்து விழுகிறது 
நோயும் ,துக்கமும் 

புன்னகை 
அகத்தை குளிரூட்டி 
இதழ்கள்  வழியே 
காற்றில் கரைகிறது 

சோகங்களில் 
விழிகள்  கண்ணீர் 
உதிர்த்த  பின்னும் 
அகத்தில் தேங்குகிறது 
துக்கக் கறைகள்

சிந்தை 
அவ்வப்போது எழுப்புகிறது 
அகத்தை கீறிய 
துக்கங்களை   மட்டும் 

புன்னகைத்த 
இனிய  நாழிகைகளை 
தூக்கில் ஏற்றுகிறது 
துக்கங்கள் 

வாழ்நாளின் 
புன்னகை நாழிகைகள் 
நாதியற்று நிற்கிறது 
வாழும் மனிதர்களில் 

3 comments:

  1. உணர்வுகளின் வெளிப்பாடு அழகிய கவி வரிகளில் ./.

    ReplyDelete
  2. புன்னகைத்த
    இனிய நாழிகைகளை
    தூக்கில் ஏற்றுகிறது
    துக்கங்கள்


    அருமை..

    ReplyDelete
  3. சோகங்களில்
    விழிகள் கண்ணீர்
    உதிர்த்த பின்னும்
    அகத்தில் தேங்குகிறது
    துக்கக் கறைகள்

    அகலாத சோகத்தில் ஆறாக
    ஓடிடும் கவிதை வரிகள் .
    வாருங்கள் என் தளத்திலும்
    இன்று இதன் கோலம் காண
    மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...