Thursday, October 6, 2011

வீதிக்கு வந்த இறைவன்



ஓர்நாள் 
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன் 
அவசர அவசரமாய் 
ஓடும் மனிதர்களுக்கு இடியில் 
மெல்ல நடந்தான் 
இறைவன் 

வீதியின் ஓரங்களில் 
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள் 
இறைவனை நோக்கி 
புன்னகைத்தது 

வீதி நெடுக
குவிந்துகிடந்த  துக்கங்கள் 
இறைவனை நோக்கி 
கண்ணீர் சிந்தியது 
வீதியில் அங்காங்கே 
 படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது 
இறைவனை  


நஞ்சும் 
காழ்ப்பும் 
வஞ்சமும் 
குரோதமும் 
வீதியில் பின்னிப்பிசைந்து 
அகம் கொட்டிய குப்பைகள் 

அன்பும் 
கருணையும் 
நன்மையையும் 
சில மனங்களில் மட்டும் 
இரவலாய் 

தேங்கி நிற்கும்  கண்ணீர் 
படிந்து கிடக்கும் ரத்தம் 
வீதியெங்கும் கொச்சை வாசம் 
மூக்கை பொத்தியபடி இறைவன் 

மெல்லிய அழுகைகள் 
தெறிக்கும் அலறல்கள் 
மௌனமான சபித்தல்கள் 
வீதியில் உலவும் சப்தங்கள் 

சில நாழிகை பயணத்திலே 
திக்குத்திணறி சுவாசமுட்டி 
நிலைகுலைந்து ஓடினான் 
வீதிக்கு வந்த இறைவன் 


6 comments:

  1. அருமையான கற்பனைஅழகான படைப்பு
    உண்மையில் இறைவன் வந்தால்
    இப்படித்தான் ஆகும்
    அதனால்தான் வராமலே தவிர்த்து விடுகிறான்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சில நாழிகை பயணத்திலே
    திக்குத்திணறி சுவாசமுட்டி
    நிலைகுலைந்து ஓடினான்
    வீதிக்கு வந்த இறைவன்


    பாவம் கடவுள்!

    ReplyDelete
  3. நிஜமாகவே கடவுள் பூமிக்கு வந்தால் என நடக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தேங்கி நிற்கும் கண்ணீர்
    படிந்து கிடக்கும் ரத்தம்
    வீதியெங்கும் கொச்சை வாசம்
    மூக்கை பொத்தியபடி இறைவன்

    மெல்லிய அழுகைகள்
    தெறிக்கும் அலறல்கள்
    மௌனமான சபித்தல்கள்
    வீதியில் உலவும் சப்தங்கள்

    சில நாழிகை பயணத்திலே
    திக்குத்திணறி சுவாசமுட்டி
    நிலைகுலைந்து ஓடினான்
    வீதிக்கு வந்த இறைவன்

    அருமையான உணர்வைத் தட்டி எழுப்பும் கவிதை வரிகள் வாழ்த்துக்கள் .இன்று என் தளத்தில் அன்னையின் அன்பினால் உருவான பக்திப் பாடல்வரிகள் காத்திருக்கின்றது.....

    ReplyDelete
  5. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_13.html

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...