Tuesday, October 11, 2011

தாய் பசித்திருக்கிறாள்





















அழும் குழந்தை 
வெட்டவெளியில் திறந்த மார்பை 
முந்தானைக்குள் மூடி 
 பாலூட்டும் தாய் 

தன்மடியில்   
பால் வற்றும் தருவாயில் 
கன்றிற்காக  கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு 

கண்தெரியாத குட்டியை 
வாயில் கவ்வி எடுத்து 
 பால் மடியினை காட்டுகிறது 
தாய்ப் பூனை 

தன் வாயில் 
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை 
குஞ்சுகளுக்கு ஊட்டியது 
தாய்க் காகம் 

கிளறிய குப்பையில் 
உணவைக் கண்டவுடன் 
தன் குஞ்சுகளை அழைத்தது 
தாய்க் கோழி 

தம் 
குழந்தைகளின் பசியும் 
தாயின் மனசும் 
தாய்மையின் மாசற்ற  உன்னதம் 

வீட்டுக்கு 
இந்தக் கிழம் வேண்டாம் 
முதியோர் இல்லத்திற்கு துரத்தும் 
நவநாகரீக பெண்மைகள் 

தன்மக்களின் 
வீடுகளுக்கு இடையே 
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும் 
தாய்மார்கள் 

கழுத்து வரை 
தின்ற களைப்பில்  
மனைவியுடன் வீட்டில் உறங்கும் 
பிள்ளைகள்

தாய் அவள் 
பசித்திருக்கையில் 
உணவுண்ணும் பிள்ளைகள் 
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் 

7 comments:

  1. தாய் அவள்
    பசித்திருக்கையில்
    உணவுண்ணும் பிள்ளைகள்
    இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் //

    உண்மை.....!!!

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே, அந்த ஈனப் பிறவிகள் இறைவனால் சபிக்கப் பட்டவர்கள்..

    ReplyDelete
  3. மனதை நெகிழச் செய்த கவிதை,

    ReplyDelete
  4. அருமை அன்னையரின் அன்பு மனதை அழகாய் படம்பிடித்து மனிதன் ,பறவை ,மிருகம் என்று தோற்றத்தால் மாறுபட்ட ஒரே உணர்வுடைய இந்த யீவன்களைவைத்து உணர்த்தப்பட கவிதை வரிகள் நெஞ்சை நெகிழ வைத்தது.மிக்க நன்றி பகிர்வுக்கு ..வாழ்த்துக்கள்............

    ReplyDelete
  5. தாய் அவள்
    பசித்திருக்கையில்
    உணவுண்ணும் பிள்ளைகள்
    இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்

    நெகிழ வைத்த கவிதை வரிகள்

    ReplyDelete
  6. பெற்ற தாய் தந்தை யை புறக்கணிப்பது பாஷன் ஆகி விட்டது

    ReplyDelete
  7. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...