Tuesday, October 25, 2011

காதல் ஒரு அடையாளமா ?



காதலிக்கிறேன் 
அவனும் அவளும் பரிமாறும் 
சொல்லின் முடிவில் இறக்கிறது 
அவர்களின் காதல் 

அவர்கள் 
காதல் செய்கிறார்கள் 
செய்கை பதியும் அடையாளம் 
அவர்களின் அபிநயங்கள் 

பருவங்களில் 
காதல் தளிர்கிரதாம் 
வயதுக்குள் சிறைவைக்கிரார்கள் 
காதல் ஞானமற்றவர்கள் 

 பிஞ்சுக் காதல் 
பருவக் காதல் 
கள்ளக் காதல் 
வயோதிகக் காதல் 
பெயர் அடையாள சுமையில் 
மௌனமாக அழுகிறது காதல் 

மனிதன் 
தத்தம் உறவாடுவதர்காக 
இறைவன் இட்ட பந்தமுடுச்சு 
உறவுகள் 

இறைவனின் 
ஒருதுளிக் கருணைதான் 
 இந்த பூமியின் புன்னகையும் 
மனித நேசமும் 

உருவமற்ற 
இறை அன்பினை 
வயதுகளிலும் பெயரிலும் 
அடையாள படுத்துதல் சரியோ ?



-செய்தாலி 


எல்லா அன்பு உள்ளங்களுக்கும் என் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 

9 comments:

  1. பிஞ்சுக் காதல்
    பருவக் காதல்
    கள்ளக் காதல்
    வயோதிகக் காதல்
    பெயர் அடையாள சுமையில்
    மௌனமாக அழுகிறது காதல் // காதல் என்றாலே அங்கு அறிவீனத்திர்க்கு குறை இருக்காமல் போகாது காரணம் உண்மையான காதல் என்பது பெரும்பாலும் புரிவதில்லை உடல் கவர்ச்சியை காதல் என கற்பிதம் செய்து கொள்ளுகிறது இந்த உலகம் .

    இடுகைக்கு பாராட்டுகள் .

    ReplyDelete
  2. //
    பிஞ்சுக் காதல்
    பருவக் காதல்
    கள்ளக் காதல்
    வயோதிகக் காதல்
    பெயர் அடையாள சுமையில்
    மௌனமாக அழுகிறது காதல்
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. வித்தியாசப்படுத்துகையில் இருக்கிறது எல்லாம்...

    படைத்தலின் நியதி இதுவே...

    ReplyDelete
  4. தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  5. //உருவமற்ற
    இறை அன்பினை
    வயதுகளிலும் பெயரிலும்
    அடையாள படுத்துதல் சரியோ ?/

    எனக்கும் காதலை அடையாளப்படுத்துவது சரியில்லை என்றே தோன்றும். காதலில் எது கள்ளம்?
    சிந்திக்க.. வகைப்படுத்தும் பெயர்களை தந்தவர்களை நிந்திக்க, காதலை வந்திக்க அழகான கவிதையைத் தந்துள்ளீர்கள்..

    ReplyDelete
  6. //வயதுக்குள் சிறைவைக்கிறார்கள்
    காதல் ஞானமற்றவர்கள் //

    இந்த வரிகளே போதும் இறுதி வரிகளை உயிர்ப்பிக்க.

    அருமை செய்யது.

    ReplyDelete
  7. எனக்கு பிடித்திருந்ததால், எனது வலைப்பூவிலும் இக்கவிதையை இணைத்திருக்கிறேன் அன்பு நண்பா!

    ReplyDelete
  8. காதல் என்பது உள்ளத்தின் உணர்வுகளுடன் பின்னிப்
    பிணையும் ஓர் உயிர் ஓட்டம் .இது எவ்வாறு வயசுக் காட்டுப்பாட்டில்
    அடங்கும் .காதல்: அன்பு ,கருணை ,நேசம் ,பாசம் என்று எம்
    ஆன்மாவை இந்த உலகத்தில் உள்ளவரை ஆளவந்த அற்புதமான
    சக்தி .இதற்கு வயசு எல்லை கிடையவே கிடையாது சகோ .
    மிக்க நன்றி அழகிய கவிதை வரிகளிற்கு ................

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...