Saturday, October 29, 2011

முந்நூறு கிறுக்கல்கள்



 முந்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள் 
கிறுக்கியது என்  கரமாயினும் 
கிறுக்கச் சொன்னது 
சமூகம் 

இவர் 
இவர்கள் என் குருநாதர் 
அடையாள பொய் சொல்லுகையில் 
என்னோக்கி முகம் சுளிக்கும் 
சமூக ஆசான் 

படைப்பு 
இறைவனால் ஆக்கப்பட்டது 
மனிதர்களின்  தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது 

அறிவு 
கற்பவனுக்கும் 
கற்றுத் தேர்ந்தவனுக்கும் 
கற்றுக் கொடுப்பவன் 
இறைவன் 

சொல்படலம் 
மெய்யா பொய்மையா 
மனிதர்கள் தர்க்கிக்கலாம் 
இறைவன் கையில் தான் 
தீர்ப்பு 

கையளவு 
கற்றவனும் கற்காதவனும் 
வாழ்கிறார்கள் மடிகிறார்கள் 
கற்றதில் வாதம் கொள்பவர்கள் 
வாழப் பயப்படுகிறார்கள் 

வாழ்வின் 
ஒவ்வொரு அசைவுகளிலும் 
 இறைவன் பதிந்து செல்கிறான் 
அவன் இருப்பை

வாழ்க்கை 
இறைவன் எழுதிய கவிதை 
அதன் அதன் தருணங்களில் 
வாசிக்கபடுகிறது 

ஒரு 
கவிதை வாசிப்பின் முடிவில் 
மறுகவி பிறப்பெடுக்கும் 
இது இயற்கை கூற்று 


 ஒன்றை 
எழுதுகிறவன் எழுதும் முன் 
தன் சிந்தைத் திரையில் 
வாசிக்கிறான் 

சிந்தையில் 
எழுதும் வல்லமையுடைவன் 
இறைவன் மட்டுமே 
இது என்னதென்று மார்தட்டுவது 
மடமை 


எழுதத் 
தெரியாதவன் கையில் 
எழுதுகோல் கிட்டியதன் வினை 
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்  
கிறுக்கல்கள் 

-செய்தாலி


11 comments:

  1. எழுதத்
    தெரியாதவன் கையில்
    எழுதுகோல் கிட்டியதன் வினை
    மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
    கிறுக்கல்கள்// இந்த வரிகள் சான்சே இல்லை சூப்பர்,

    ReplyDelete
  2. கவிதை அருமை...! 300 பதிவுகளுக்கு வாழ்த்துகள் நண்பரே...!!

    ReplyDelete
  3. //எழுதத்
    தெரியாதவன் கையில்
    எழுதுகோல் கிட்டியதன் வினை
    மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
    கிறுக்கலள்//

    இது எல்லா இடத்திற்கும் பொருந்துகின்ற உண்மை..

    வாழ்த்துக்கள் கவிதைக்கு..

    ReplyDelete
  4. ///வாழ்க்கை
    இறைவன் எழுதிய கவிதை
    அதன் அதன் தருணங்களில்
    வாசிக்கபடுகிறது ///

    யதார்த்தம்!! தத்துவம்..!! அனைத்தும் ஒருங்கே இணைந்திருக்கிறது உமது கவிதையில்..!!

    ReplyDelete
  5. செய்கூலி, சேதாரம் இல்லாமலேயே முழுநகையையும் முழுதாக எங்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள் செய்தாலி..!!!

    நன்றி...! வாழ்த்துக்கள்..

    இன்று என் வலையில்


    "தமிழ்நாடு உருவான வரலாறு"

    ReplyDelete
  6. உங்கள் வலையில் பின்தொடர்பவராகியிருக்கிறேன்.

    ReplyDelete
  7. 300-க்கு வாழ்த்துக்கள்!இவ்வளவு நாள் உங்கள் தளத்திற்கு வரும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
    சுவாரஸ்யமாக இருக்கிறது.தொடருங்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பா.....!

    ReplyDelete
  9. அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. முந்நூறு
    எழுத்துக் கிறுக்கல்கள்
    கிறுக்கியது என் கரமாயினும்
    கிறுக்கச் சொன்னது
    சமூகம்

    ..... அருமை அருமை....! என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியாத தொடக்கம்.... அம்மா உணவு சமைத்து மேடைமேல் வைக்க அதைச் சாப்பிடும் நாம்... என்உணவை நான் சாப்பிட்டேன் என்று சொல்லுவது சமைத்தவளை அடையாளம் காட்டாமல் அது என் உணவு என்று சொல்வதுபோல்தான் உள்ளது... சபாஷ்! செய்தாலி

    இவர்
    இவர்கள் என் குருநாதர்
    அடையாள பொய் சொல்லுகையில்
    என்னோக்கி முகம் சுளிக்கும்
    சமூக ஆசான்

    -
    அடடா... வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கற்றுக்கொடுக்கும் சமூக ஆசானை விடுத்து நானும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் இன்றுவரை... இவர்கள் என் ஆசான்கள் என்று... (அச்சச்சோ...இனி எப்படி சொல்வது செய்தாலி?)

    ஒன்றை
    எழுதுகிறவன் எழுதும் முன்
    தன் சிந்தைத் திரையில்
    வாசிக்கிறான்

    சிந்தையில்
    எழுதும் வல்லமையுடைவன்
    இறைவன் மட்டுமே
    இது என்னதென்று மார்தட்டுவது
    மடமை


    எழுதத்
    தெரியாதவன் கையில்
    எழுதுகோல் கிட்டியதன் வினை
    மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
    கிறுக்கல்கள்

    இந்த தங்களின் கிறுக்கலில் ஒரு புதிய எழுச்சியே இருக்கிறது செய்தாலி.... தங்களின் முன்னூறாவது கவிதை எப்போதும்போல் கருத்தில் முன்னிற்கிறது செய்தாலி. வாழ்த்துக்கள்.... எங்களுக்குத் தாங்கள் தொடர்ந்து கொடுக்கும் அந்தந்த நேரத்திற்கான சிந்தனைத் தீனிக்கு நன்றிகள்.... ஆயிரமாயிரமாகக் கவிதைகளை அள்ளிக்கொடுங்கள் இச்சமூகத்திற்கு....!

    எங்கிருப்பினும் இந்த யாதுமானவளின் ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்பர்ப்பும்... எதிர்பாற்ப்ற தங்கள் கவிதைக்கு என் வாழ்த்தும் எப்போதும் இருக்கும்...! வாழ்க வளமுடன்!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...