Monday, October 31, 2011

உழைப்பு ஒரு தேடல்



உழைப்பு 
மனிதன் வாழ்வதற்காக 
இறைவன் அருளிய அற்புத 
பொக்கிஷம் 

இவன் 
உயிருள்ள மனிதன் 
உடல் உறுப்புக்களின் உழைப்பின் 
உயிர்வெளிச்சம் 

மண் 
பொருள் உயிர்கள் உருவங்களில் 
உழைப்பின் சில அடையாளம் 
இரவல் உறவு 

மனிதன் 
மயானம் செய்கையில் 
அவனில் உதிர்ந்து விழும் 
அற்பங்கள் 

உணர்வும் 
உணர்ச்சிகளும் மனிதனின் 
உழைப்பின் உருவமற்ற 
ஆன்மா 

மனிதனை 
ஆட்டி வைப்பவர்கள் 
அவன் ஆளவேண்டியவர்கள் 
மனக் கோட்பாடு 

எண்ணமும் செயலும் 
நாளைய இறைசன்னதியின் 
நன்மை தீமைகளின் 
சாட்ச்சியாளர்கள் 

உழைப்பில் 
அகத்திலும் புறத்திலும் 
நடுநிலையை பேணும் மனிதன் 
உயர்கிறான் இறை அகத்தில் 

அன்பு 
காதல் 
நட்பு 
உறவுகள் 
இவை மனித உழைப்பால் 
மனிதன் தேட வேண்டியவைகள் 

புன்னகையை 
செலவு செய்து 
உறவுகளை சேமிப்பவன் 
உழைப்பில் உயர்ந்தவன் 

  

8 comments:

  1. ஆம் , நண்பரே உழைப்பு ஒரு தேடல்தான்,,

    ReplyDelete
  2. அன்பு
    காதல்
    நட்பு
    உறவுகள்
    இவை மனித உழைப்பால்
    மனிதன் தேட வேண்டியவைகள் // அட வித்தியாசமான சிந்தனை..

    ReplyDelete
  3. //புன்னகையை
    செலவு செய்து
    உறவுகளை சேமிப்பவன்
    உழைப்பில் உயர்ந்தவன் //
    இந்த வரிகளை ரசித்தேன்...! அருமை நண்பரே !!

    ReplyDelete
  4. அன்பு
    காதல்
    நட்பு
    உறவுகள்
    இவை மனித உழைப்பால்
    மனிதன் தேட வேண்டியவைகள்

    புன்னகையை
    செலவு செய்து
    உறவுகளை சேமிப்பவன்
    உழைப்பில் உயர்ந்தவன்
    அருமையானக சொன்னீர்கள் சகோ .இவ் உழைப்பால் உயர்வோம்
    நல் உறவுகளையும் சேர்ப்போம் !...வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .உங்கள் விடுமுறை சிறப்பாக அமைய இன்னொரு வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  5. புன்னகையை
    செலவு செய்து
    உறவுகளை சேமிப்பவன்
    உழைப்பில் உயர்ந்தவன்

    உண்மை..
    அருமையான கவிதை செய்தாலி...

    ReplyDelete
  6. அன்பு
    காதல்
    நட்பு
    உறவுகள்
    இவை மனித உழைப்பால்
    மனிதன் தேட வேண்டியவைகள்//

    அழகிய சிந்தனையோடு வெளிப்பட்டிருக்கும் வரிகள் அனைத்தும் அருமை சகோ.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...