Monday, December 26, 2011

மீண்டும் ...மீண்டும்...



இன்பங்களில் 
மலரும் புன்னகையும் 
துன்பங்களில் 
உதிரும் கண்ணீரும் 
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது 
வாழ்வின் அர்த்தங்களை 

ஒரு முறை 
உயிர்த்தெழுந்து 
மனித ஜீவனை உயிரூட்டி 
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு 
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின் 
உன்னத தருணங்கள் 

அகம் 
யாசித்த அந்த தருணங்கள் 
மீளாதென்று அறிந்த பின்பும் 
அதன்அழகிய  நினைவுகளோடு  
வாழ முற்படுகிறார்கள் 
இங்கே சில மனிதர்கள் 

அந்த 
மனிதர்களின் வரிசையில் 
இதோ நானும்

2 comments:

  1. அகம்
    யாசித்த அந்த தருணங்கள்
    மீளாதென்று அறிந்த பின்பும்
    அதன்அழகிய நினைவுகளோடு
    வாழ முற்படுகிறார்கள்
    இங்கே சில மனிதர்கள்....

    nice to read ... thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

    ReplyDelete
  2. அருமையான கவிதை பகிர்வுக்கு மிக்க
    நன்றி வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...