Thursday, December 29, 2011

வாடகை நண்பன்


நகருக்கு 
ஒதுக்குபுறத்தில் அலுவலகம் 
அதன் சிறு தூரத்தில் 
தங்கும் சிறு விடுதி 

அன்று 
முதல்நாள் பட்ட பகலிலும் 
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது 
 மூனேமுக்கால் சுவருகளும் கதவும் 

அன்றைய இரவில் 
தனித்து உறங்க முயற்ச்சித்து 
பயத்தில் அயர்ந்து தூங்கினேன் 
நன்றாய் விடிந்த பிறகு 

சில 
நாட்களின் ஓட்டத்தில் 
நல்ல நண்பர்களாய் இணைந்தோம் 
தொடர்கிறது இன்றுவரையிலும் 

உன்சுவற்றை 
ஆணியால் துளை இட்டபோதும் 
சமையல் தருணத்தின் வெப்பத்திலும் 
 எனக்காய் சகித்தாய் வேதனைகளை 

நான் 
சிந்திய புன்னகையும் கண்ணீரையும் 
உன் சுவற்று இடுக்குகளில் 
ஒழித்து வைத்து இருக்கிறாய் 

என் 
நன்மை தீமை செய்கைகளை 
உன் சுவற்றுக்குள் மூடிவைத்தாய் 
அதற்கு நீயே சாட்சியானாய் 

விடுமுறைகளில் 
விடியலில் வெளியே சென்றாலும் 
இரவினில் தலையசைக்க 
உன்மடியை   நாடிவருகிறேன் 

என் 
உணர்வுகளை உணர்ந்த 
பந்த உறவுகளின் வரிசையில் 
நீயும் ஓர் உறவு 

இது 
காலத்தின் கட்டாயம் 
ஆறாண்டு உறவை முறித்து 
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன் 


உன் 
ஓசையற்ற மௌனப் புன்னகையில் 
உன்னுடனான நினைவுகளுடன் 
படி இறங்குகிறேன் 


4 comments:

  1. வரிகளில் ஒரு வசீகரம் ...
    என்ன ஆச்சு நண்பா ..
    நெடு நாட்களா ஆளையே காணலை ..
    எங்கு சென்று விட்டிர்கள் .. வேலைப்பளு ..அதிகமோ?
    வீடு மாற்ற போகிறிர்களா .?
    கவிதை கலக்கல் .. வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  2. 50 நாள் விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்தேன்
    போன வெள்ளியன்று தான் அமீரகம் வந்தேன்

    இங்கு அலுவலகம் இடம் மாறுவதால்
    தங்கும் இடத்தையும் மாற்றவேண்டிய சூழ்நிலை

    நீங்கள் நல்ல நலம் என்று கருதுகிறேன்

    கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  3. அப்படியா நண்பரே ...
    ஊருக்கு வந்திருந்திங்களா ... என்ன நண்பரே சொல்லவே இல்லை ..
    சரி விடுங்க வீட்ல அனைவரும் நலமா ? உங்க மனைவியை அழைத்துக்கொண்டு தானே இப்போ அமீரகம் சென்று உள்ளீர்கள் ...

    ReplyDelete
  4. நல்ல கவிதை நண்பரே...!

    நீங்க நலமா...?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...