Wednesday, November 7, 2012

மீண்டும் சந்ததிக்கும் வரை
பயணங்களில் 
சொல்லிவிட்டு செல்லல் 
பாரதியரின் இல்லை தமிழரின் நல்பண்பு  
கடிகார ஓட்டத்திலிருந்து 
கொஞ்சமாய் இளைப்பாறல் 
மீண்டும் நாளையும் துரத்தும் 
ஓடித்தீர்த்தாகவேண்டி இருக்கு ஓட்டம்  முடியும்வரை 
நிரந்தரமாய் ஏதும் இல்லை 
சுழலும் இந்த வாழ்க்கை சக்கரத்தில் 
உறவுக்காக 
இல்லை அப்படி சொன்னால் அது பெரும் பொய் 
ஆம் சில பொய்களை சொல்லி 
அகத்தின் ஒரு பக்கத்தை இருட்டாக்குகிறோம் 
இது எல்லா மனிதர்களிடமும் தொடர்கிறது 
சிறை மீளும் போதுதான் 
அடிமையை தொலைந்த பருவத்தை உணர்கிறோம் 
இது திரை கடல் ஓடுபவர்களின் 
தலைமேல் சுற்றும் சாபம் 
அன்பு 
காதல்
நட்பு 
விரோதி 
விருப்பு ,வெறுப்பு 
புன்னகை, கண்ணீர் 
எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம் 
ஆம் இதில் எதிலும் அளவு கடந்தால் 
அது உயிரோடு மரணத்தை ருசிப்பதாகும் 
விடுபடல் ,சுதந்திரம் 
அப்படி சொல்ல இயலாது இளைப்பாறல் ஆம் இதுதான் மெய் 

பசியில் அழுது 
முலைகுடிக்கும்  குழந்தை முகத்தில் 
கட்டிய சுருக்கு அவிழ்க்கையில் 
தாய் மடி தேடி ஒருவரும் கன்றின் முகத்தில் 
மாலை பள்ளி விட்டதும் 
மடைவெள்ளமாய் வீட்டுக்கு  ஓடும் குழந்தைகளின் முகத்தில் 
மண்ணை முத்தமிடும் மழையில் 
கரையை முத்தமிடும் அலைகளில் 
 இவைகளில் ஒரு பிம்பம் ஒளிரும் 
அது நான்தான் 

மீண்டும் சந்ததிக்கும் வரை 
என் அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வணக்கங்கள் 

-செய்தாலி 

Tuesday, November 6, 2012

கிளைகளின் துக்கம்
வழக்கத்துக்கு மாறாக 
மும்மராமாய் சண்டையிட்டது 
காற்றுடன் அம்மரக் கிளைகள் 
எப்போதும் கொஞ்சி குளைபவர்கள் 
அதிசமாய் சண்டை போடுவதை 
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது 
அடுத்த மரத்திலுள்ள  கிளைகள் 
அக் கிளையோரக் கூட்டிற்கு திரும்பிய 
தாய்ப் பறவை ஒன்று சத்தமிட்டுக் கொண்டிருக்க 
 அடிச்ச காத்துல கீழ வ்ழுந்து உடைந்சிருச்சே 
உடைந்த முட்டையை நோக்கி  பரிதாபத்துடன்  ஒரு வழிப்போக்கன் 
குற்ற மனதோடு 
கெஞ்சிக் கொண்டிருந்தது காற்று 
சமாதானம் இன்றி இரவுவரை சலசலத்துக்   கொண்டே இருந்தது 
அம்மரத்தின் கிளைகள் 

Monday, November 5, 2012

புலப்படாத மாயை
அன்று 
யாருக்காகவோ வந்தவர்கள் 
என்னைப் பார்த்தது சிரித்தார்கள் ,கொஞ்சினார்கள் 
விழி திறந்த நானும் அழுதேன் சிரித்தேன் 
புலப்படவில்லை 
வந்தவர்களின்  உறவும் முகவும் 
அன்றுதான் பிறந்திருந்தேன் 
பிந்திய நாட்களில்
இடைவெளியிட்டு  
யார் யாருக்காகவோ 
வந்தார்கள் பார்த்தார்கள் சென்றார்கள் 
அதில் எனக்காக சிலரும் 
அப்போதும் சிரித்தேன் அழுதேன் 
ஆம் வந்தவர்களின் உறவும் அடையாளமும்  தெரிந்ததால் 
பின்னொரு நாளில் 
எனாக்காக மட்டுமே வருகிறது ஒரு பெரும் கூட்டம் 
இம்முறை சிரிப்பு ஒரு சிலரில் மட்டும் 
அதுவும் மௌனமாக 
ஆம் அவர்கள் என் மரணத்தை விரும்பி இருக்கலாம் 
ஒரு கூக்குரல் அழுகை சத்தங்கள் 
இங்கே உறவென்று சொல்லி  ஒரு கூட்டம் அழுகிறது 
எனக்கு நிச்சம் இல்லை  
எந்த விழிகளின் கண்ணீரில் 
என் பிரிவின் வலி இருக்கும் என்பதில் 
எனக்காக வந்தவர்கள் 
என்னோக்கி  சத்தாமாய் மௌனமாய் அழுகிறார்கள் 
அவர்களை நோக்கி 
சிரிக்கவும் அழவும் முடியாமல் 
ஆணவத்துடன் உறகுகிறேன் நான் 
இல்லை இல்லை உறக்குகிறான் அவன் 

Wednesday, October 31, 2012

திரைமறை உரையாடல்முன்தினம் 
பெயர் இல்லாத ஒருவருடானான எழுத்துரையாடல்  
வணக்கம்  சொல்லபட்டது 
வணக்கத்தின் பாலினமும் திரை மறைவில் 
அடுத்த மறுநொடியில் 
தாங்கள் எழுதுவது கவிதையல்ல 
ஆம் நான் எழுதுவது கவிதையல்ல 
தாங்கள் ஒரு கவிஞனும் அல்ல 
உண்மைதான் நான் கவிஞனும் அல்ல 
தங்கள் எழுத்தில் கவித்துவம் இல்லை 
அது எனக்கு அவசிப்படவில்லை 
சிறு இடைவெளியும் 
மறு எழுத்திற்கான காத்திருப்பும் 
 புதுக்  கவிதை 
ஹைக்கூ 
மரபு 
.
.
.
.
இவையில் எதிலும் பொருந்தவில்லை 
தங்கள் கவிதைகள் 
என் எழுத்திற்கு இந்த ஆடைகளை இதுவரை  உடுத்தியதில்லை 
தாங்கள் ஒரு படைப்பாளியே அல்ல 
சற்று கோபமாகவும் வேகமாகவும் வந்தது அவ்வெழுத்துக்கள் 
ஆம் உண்மையான படைப்பாளி இறைவன் தான் 
அவன் படைத்ததை படைப்பதை 
அறிவை கொண்டு தேடும் சாதாரண மனிதர்களே நாம் 
ஆதலால் நான் படைப்பாளி அல்ல 
தங்கள் பெயரின் அர்த்தமென்ன 
அதற்கான அதற்தம் இதுவரை தேடவில்லை 
என் பெயரின் சுருக்கமே  என் பெயர் 
சொல்பிழை இருக்கிறது  தங்கள்  எழுத்துக்களில் 
இந்த உலகமே  பிழையில் தான் நகர்கிறது 
தாங்கள்  வாதம் செய்கிறீகள் 
இருக்கலாம் 
பச்சையாக கொச்சையாக இருக்கிறது தங்கள் எழுத்துக்கள் 
உண்மை வீச்சமுடையது 
சரி 
இவ்வளவும் கேட்டீர்கள் தாங்கள் யார் என்றேன் 
 சற்றென அணைந்துவிட்டது அவ(ளி) ரின் அடையாளம் 
யார் 
ஏன் 
எதற்கு 
நேற்று முழுவதும் எனக்குள் சக்கரமாய் சுழன்றது 
இந்தக் கேள்விகள் 
அந்த நபர் சொன்னதில் உண்ம்மை இருக்கலாம் 
அதை நான் திருத்திக் கொண்டால் 
நிச்சயமாக  இழப்பேன் 
என்னில் என் சுயத்தை
என்னையும் 
என் எழுத்தையும் எதிலும் அடையாள படுத்தாதவர் 
தன்னை அடையாள படுத்தாமல் சென்றது தான் நகைச்சுவை 

Tuesday, October 30, 2012

இரும்பு மனுஷிகள்


 


கருவில் தாங்கியவள் 
எனக்குமுன் முலை  குடித்தவள் 
என் வலக்கரம் பற்றிபிடித்தவள் 
இவர்கள் தான் 
இல்லை.. இல்லை... அவளும் 
ஆம் என் தடித்த விரல் பிடித்து 
நாளை எனை வழிநடத்தும் அந்த பிஞ்சு விரல்காரியும் தான் 
என் இரும்பு மனுஷிகள்
இன்றும் இவர்களுக்கு குழந்தை நான் 
நாளை அவளுக்கும் 
ஆம் இந்த இரும்பு மனுஷிகளிடத்தில் 
பத்திரமாக இருக்கிறேன்   நான் 

Monday, October 29, 2012

விளங்கா நவ சமூகம்


சரியாக  
சொல்லப்போனால் 
விளங்கவில்லை 
இந்த நவ சமூகத்தையும் அதன் மனிதர்களையும் 
மக்கள் வரியை சுரண்டி தின்று 
நாடாளுகிறது  மத்தியில் ஒரு  பெருச்சாளிக் கூட்டம் 
இலவச கறுப்புத் துணியை கண்ணில் கட்டி 
இருட்டில் தள்ளிவிட்டு 
கண்ணாம்பூச்சி  விளையாட்டு காட்டுது ஒரு மாநிலம் 
கூட்டுக் களவானிகளோ 
பங்கு சண்டையில் மும்முரமாய் 
இருப்பவன் இல்லாதவன் 
எவன்  எப்படி போனால் என்ன 
சுய அடையாள மதிமயக்கத்தில் ஒரு பெரும் கூட்டம் 
பெண் திரைக் கூத்தாடியின் 
அங்க ஆடையின் அளவுச் சர்ச்சைகள்  இளசு பெருசுகளில் 
சாயம் பூசிய திரை கூத்தாடிகளின் நாற்காலி ஆசை 
பல்லாக்கு தூக்கும் ரசிக பக்தர்கள் 
அவதார புருஷர்களின் 
மன்மத லீலைகளும் அரியணை நாடகங்களும் 
 பாடசாலைகளிலோ 
 கட்டாயக் கல்விபோய் அசூறக் கட்டணக் கல்விகள் 
எதிலும் புதுமை தேடும் நவ சமூகம் 
வேலியற்ற உறவு பந்தங்களின் நவ உறவுக் கலாச்சாரம் 
ஆம் குழந்தையில் கூட காமத் தேடல்கள் 
பத்துவயது குழந்தை கருவறையில் கூட சிசு
பந்த உறவு முறைகள் நாளை  ஏட்டில் மட்டுமே காணப்படலாம் 
நாளை  உழுது நெல்மணி விதைக்க 
காணி நிலம் கூட இல்லாமல் போகலாம் 
ஆம் நிலங்களில் நீண்டு முளைக்கும் கட்டிட சவங்கள்  
இருக்கும் இடத்தை சீர்கெடுத்து நரகமாக்கிவிட்டு 
எதோ ஒரு அண்டகோளத்தில் 
நீரைத் தேடி அலைகிறது ஒரு மட கூட்டம் 
வெறிபிடித்த மதமிழகிய யானைக்  கூட்டங்கள் ஒரு பக்கம் 
ஒரு தினத்தில் ஓராயிரம் கொண்டாட்டங்களுமாய் சில கூட்டம் 
உயிருக்கு ,உடமைக்கு ,உரிமைக்கு 
குரல் கொடுக்க தொடை நடுங்கிகள் கூட இல்லை 
நித்தம் விடிகிறது
என்றுதான் விடியுமோ இந்த இருண்ட சமூகம் 
ச்சீ ச்சீ ..என்ன கொடுமை 
இன்னும் விளங்கவில்லை  இந்த நவ சமூகத்தையும் அதன் மனிதர்களையும் 

Sunday, October 21, 2012

மூக்குத்தி (அ.நா.கா 12)
வெள்ளிக் கொலுசு 
அறுந்து விட்டதாய்  
அன்றொரு நாளின்  பேச்சுக் கிடையில் சொன்னாய் நீ 

நேற்று
ஆலுக்காஸ் ஜுவல்லரியில் 
கை வளையல் வாங்கச் சென்ற நான் 
விலை  கேட்டுக்கொண்டிருந்தேன் தங்க கொலுசுக்கு 

என் செவியை மனதை 
இம்சை செய்யும் உன் வெள்ளிக் கொலுசொலிக்கு 
ஈடாகாது இந்த பொன்கொலுசு 
இருப்பினும்  விலை பேசிக்கொண்டிருந்தது மனம்


நீண்டு மடங்கி 
முன் சுண்டியில் விடைத்து சிவக்கும் உன் மூக்குக்கு 
எடுப்பாய் இருக்கும் ஒற்றை மூக்குத்தி 
என்னிஷ்டமும்  உன் மறுப்பும் 
அன்று நீண்ட சின்னப் பிணக்கத்தையும் நினைவூட்டியது 
அந்த கண்ணாடி சில்லுக்குள் இருக்கும் 
ஒற்றைக் கல்  மூக்குத்தி 


எதிர்பார்த்த உன் கைபேசி அழைப்பு
இன்றாவது மனம் மாறி இருப்பாய் 
மீண்டும் ஒருமுறை நினைவூட்டினேன் மூக்குத்தியை 
இன்றும் உன்னில் மௌனம் நீள 
என்னகத்தில் துடிதிடித்து இறந்தது 
என் மூக்குத்தி ஆசை 

Saturday, October 20, 2012

கள்ளப் பூனை
இரண்டு குழந்தைகளுக்கு
முலை ஊட்டிக்  கொண்டிருந்தாள் அவள்
மூடிய மாராப்பை
விலக்கி தலைதூக்கி பின்
கண்ணுருட்டிப் பயமுறுத்தியது
கள்ளத்தனமாய்
மறு முனை(லை)யில்   பால் குடிக்கும்
 மீசைவைத்த   குழந்தையை

Wednesday, October 10, 2012

அவளின் அந்த கேள்வி (அ.நா.கா 11)


 
என்றாவது  ஒருநாள் 
அவளை சந்திக்க நேரிடலாம் 

நிச்சயமாக சொல்கிறேன் 
எனக்கான ஒரு கேள்வியை 
மனதில் கொண்டு நடக்கிறாள் அவள் 

எப்படியும் கேட்டு விடுவாள் 
அன்றும் இன்றும் என்றும் 
அந்த கேள்விக்கான என் பதில் 
மௌனம் மட்டுமே 

அப்படி 
என்ன கேட்பாள் என்று 
நீங்கள் கூட கேட்கலாம் 

ஏன் 
ஒருமுறை இவளிடம் 
அவளைப் பற்றியும் அவளின் 
அந்த கேள்வியையும் சொல்லி முடிக்குமுன் 
இவளே கேட்டுவிட்டாள் அந்த கேள்வியை 

இவளிடம் அவளுக்கான பதில் அல்ல 
வேறொரு பதிலை  சொன்னேன் 
ஆனால்  இந்த பதில் தான் உண்மையானது 
என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது 
அவளிடம் இந்தப் பதிலை மட்டும் 

Tuesday, October 9, 2012

பித்துப் பிடித்தவனாய்...
நான் 
உன்னில் இதுவரை 
கொட்டிய சொல்லை 
ஒருமுறை எழுதி வாசிக்க சொல்கிறாய் நீ 
எழுத முனைகிறேன் நான் 
எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது 
என் விரல் நடுக்கத்தில் 
தவறி விழுந்த பேனா 
என்னோக்கி ஏளனமாய் சிரித்தும் 
முறைத்துக் கொண்டும் இருக்கிறது 
இன்னும் எழுதபடாத அந்த வெற்றுப் பக்கங்கள் 
கொட்டிய சொல்லை 
வரிகளில் அள்ளமுடியாமல்
பித்துப் பிடித்தவனாய்.....

Monday, October 8, 2012

வானவில் ஆடை

உயிர் போர்த்தும் 
அன்பின் ஆடைகளில் பலவண்ணச் சாயங்கள் 
கருவில் உயிர் கொள்முன்னே 
நமக்கான ஆடைகளை நெய்கிறது உறவுகள் 
மரணத்திற்குப் பின் 
கழட்டப்ட்டு நினைவுகளில் பூசுகிறார்கள்  
காலப் பழக்கத்தில் 
வெளுத்து   உதிர்கிறது சில வண்ணங்கள் 
சில வண்ணங்கள் மட்டும் ஏனோ 
மரணம் வரை பற்றிப் பிடித்தபடி 
 உதிராத  வண்ணங்களை 
அடித்து துவைக்கிறோம் நம்பிகையற்று 
 துவைத்தலில்  விழும் கிழிசல்கள் 
 கிழிசல் விழுந்த 
ஆடை போர்த்திய மீத வாழ்க்கை 
மரணத்திற்கு பின்னும் நீளும்  அவமான  வடுக்கள் 

Thursday, October 4, 2012

இரண்டு கணக்கு

எண்களை
கணிதத்தில் 
கூட்டி 
பெருக்கி 
கழித்து 
வகுக்கிறான் மனிதன் 

மனித 
எண்ணங்களை (....... )
வாழ்கையில் 
கூட்டி 
பெருக்கி 
கழித்து 
வகுக்குகிறான்  இறைவன் 


சின்ன குறிப்பு : இது என் பதினாறாவது வயதில்  
நோட்டு புக்கில் கிறுக்கியது ம்(:

Wednesday, October 3, 2012

முத்த முதலுரிமை
நம்  
செல்ல சண்டைக்கிடையில் 
 இதுவரை கொடுத்த முத்தத்தை
 திருப்பி கேட்கிறாய் நீ 

ஓ சரி 
முதலில் 
என் முத்தங்களை கொடு 
உன் முத்தங்களை 
தருகிறேன் என்றேன் நான் 

இல்லை 
அது சரிவராது என்கிறாய் நீ 
பெண்மைக்கு 
முதலுரிமை என்கிறேன் நான் 

முதலுரிமை 
முத்தத்திற்கு  மட்டும் தானோ என்று 
நகையாடுகிறாய் நீ 

மறு சொல்லுக்கு 
வார்த்தைகளற்று 
வாயடைத்து  நிற்கிறது 
என்னில் ஆண்...

Tuesday, October 2, 2012

வீதியோரத்தில் காந்தி

கூடி வந்து 
மாலையிட்டு  
மரியாதை செய்து பின் 
சிதறி ஓடினார்கள் 
வெள்ளை ஆடையணிந்த மனிதர்கள் சிலர் 
மறதியில் 
விட்டுச்  சென்றாகளோ இல்லை 
இனி அவசியமில்லை என்று 
மறந்து சென்றாகளோ தெரியவில்லை 
வீதியோரத்தில் 
தூக்கி எறியப்பட்டுது தெரியாமல் 
உதிர்ந்து கொண்டிருக்கும் பூமாலைக்குள்
சிரித்த முகமுமாய்  
காந்தியின் புகைப்படம் 

என் இனிய தோழமைகளுக்கு  காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 

Monday, October 1, 2012

தனிமை ரணம்

நீ  
இல்லாமல் நான் கழித்த 
என் தனிமையின் 
ஒவ்வொரு நொடிப் பொழுதின் 
ரணத்தை 
சொல்லில் பிரசவிக்க தெரியவில்லை 
என் இதழ்களுக்கு 

ஓன்று செய் 
என் பத்து விரல்களில் 
உன் பத்து விரல்களை ஓட்டிப்பார் 
என் விரல்களில்  ஊடுருவும் காந்த விசை உணர்த்தும் அதை

இல்லையேல் 
உன் இதழை 
என் இதழில் இறுக்கப் பதித்துப்பார் 
என் இதழ்களில் ததும்பும்  அனல் 
உன்னை சுட்டு  உணர்த்தும் அதை 

 மற்றொரு 
முயர்ச்சியாய்
உன் செவியை என் மார்போடு ஒட்டிக்கேள்
துடிக்கும் லப்டப் ஓசை  
செவியை மட்டுமல்ல 
உன் உயிரையும் நிரப்பி உணர்த்தும்  அதை

Thursday, September 27, 2012

சடுகுடு முத்தம் (அ.நா.கா 10)

முத்தத்தை 
முப்பொழுதும் 
கேட்க தவறுவதில்லை நான் 
கொடுக்க நீயும் 
முதல் பொழுதில் 
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் 
என் உயிரில் காயும்முன் 
மறுபொழுதில் பதிக்கிறாய் முத்தைதை 

நம் 
முப்பொழுதில் 
நித்த வாடிக்கையாய் நீளுகிறது 
உன் என் முத்தங்கள் 

நேற்று 
வாடிக்கை தவறாமல் கேட்டேன் நான் 
நீயும் கொடுத்தாய் 
நீ கொடுத்த முத்தத்தில் 
ஈரத்திற்கு பதில்  அனலின் வன்மம் 

 அனல்  முத்தம் 
உயிரை சுட்டுவிட்டது 
இருப்பினும் 
மறுபொழுதில் ஈரமுத்தம்  பதிப்பாய்
ஆர்வத்தில் 
மீண்டும் கேட்கிறேன் நான் 
நீயும் கொடுத்தாய் 
நீ கொடுத்த 
மதிய முத்தத்தில் 
கொஞ்சம் ஈரம் கொஞ்சம்  அனல் 

இரவில் 
நான்  கேட்க்கும்முன்னே 
பதித்துவிட்டாய் ஈர முத்தத்தை 

பிந்திய 
இரு பொழுதுகளில் 
நீ கொடுத்த முத்தத்தில் 
ஈரம் இல்லை என்றேன் நான் 
கோபமாய் இருந்தேன் என்றாய் நீ 

சிலிண்டர் 
வரவில்லை என்பதற்காக 
எனக்கான   வாடிக்கை முத்தத்தில் 
அனல் வைத்து அனுப்புவது  
எந்த ஊர் நியாயம்  ?

Tuesday, September 25, 2012

இறகை உதிர்க்கும் புறா
புறா ஓன்று 
சுவற்றுக் கம்பியில் ஒன்றில் 
அடித்து  உதிர்த்துக் கொண்டிருந்தது தன் 
முளையிட்ட இறகுகளை 

ஏன்
உன் சிறகை காயப்படுத்தி 
இறகுகளை உதிர்கிறாய் என்றேன் புறாவிடம் 
அவ்வழியே சென்ற நான் 

நான் 
பறந்து ஓடிவிடுவேணாம் 
சிறகில் இறகு முளையிடும்போதேல்லாம் 
வெட்டி விடுகிறான் என் உடையோன் 

நம்பிக்கையின்றி 
ஒவ்வொருமுறையும் 
என் இறகை வெட்டுபவனிடம் 
எப்படிச் சொல்வேன் ஓடமாட்டேன் என்று 

இன்று 
அவன் கவனிக்க வில்லை 
என்னில் முளையிட்ட இறகை 
இருப்பினும் 
உதிர்கிறேன் இறகுகளை அவனுக்காக 

உன்னை 
நீயே காயபடுத்திக் கொள்கிறாயே 
 வலிக்க வில்லையா என்றேன் நான் 

நாம் விரும்புபவர்கள் 
நம்பிக்கையற்று  கயபடுத்தும் ரணத்தை விட 
இவ்வலி சுகமானதே 
சோகம் சொல்லிவிட்டு 
வீட்டின் மேற்கூரை நோக்கி பறந்தது புறா 

Monday, September 24, 2012

மன அறை ஒழுங்கீனம்
மன அறையில் 
ஒழுங்கற்று  கிடக்கிறது 
நேற்று வரையிலான   நாட்களும் 
அதில்  அர்த்தமற்ற  வாழ்கையும் 
செல்லரித்தும் 
துருபிடித்தும் 
நூலாம்படை அலங்கரிப்பில் 
அழகிழந்து துர் நாற்றக் கெந்தமுமாய் மன அறை 
ஒவ்வொன்றாய் 
தூசு தட்டி 
அடித்துப் பெருக்கிய குப்பைகளில் 
அர்த்தப் படாமல் இறந்துபோன
நாட்களும் வாழ்கையும் 

Wednesday, September 19, 2012

நேற்றைய கனவு (அ.நா.கா 9)
எதோ ஒரு 
சிறு தர்க்கத்திற்கு இடையில் 
அனல் சொல்லைக் கொட்டி 
உன்னை  சுட்டு  விடுகிறேன் நான் 

அழுதபடி படி இறங்குகிறாய்  உன் அம்மாவிட்டுக்கு 
கோபம் தணிந்த பின் மாலையில் 
வீடு வந்துவிடுவாயென காத்திருந்தேன் நான்  
இரவாகியும் வரவில்லை நீ 

உன்னை அழைத்து வர 
உன் வீடு நோக்கி நடக்கிறேன் நான் 
இடைவெளியில் நடந்து வருகிறாய்  
நீயற்ற  இரவும் பகலும் 
எனக்கு நரகம் என்று தெரிந்த நீ 

என் மெல்லிய புன்னகையும் 
 உன் விழியில் வழிந்த கருணை மன்னிப்பும் 
இதழ்களில் மௌனங்களை சுமந்தபடி 
வீடு வரை நடந்தபடி  நாம் 

நம் அறையில் நீண்ட மௌனத்தை 
சலனம் செய்தது ஜன்னல் வழியே வந்த காற்று 
சத்தமாய் அடைத்தாய் ஜன்னல் கதவுகளை 
 ......னை  ..ணைக்க
விளக்கை அணைத்தேன் நான் 

ஓ பாய் உட்டோ உட்டோ டைம் ஆகையா
தட்டி எழுப்பினான் 
அறையில் புதிதாய் வந்த வடஇந்திய   நண்பன் 

 உறக்க சோம்பல் முறித்து எழுந்தேன்   
எட்டு மணியை காட்டி நின்றது கடிகார முள் 
அவசப் புறப்பாடில்  நான் 
வழக்கமான காலை  அழைப்பில்  சத்தமிட்டபடி கைபேசி 

உனக்கும் எனக்கும் 
சின்ன சின்னதாய் எத்தனையோ சண்டைகள் 
ஒரு முறைகூட படி இறங்கியதில்லை 
உன் அம்மா வீட்டுக்கு நீ 

Monday, September 17, 2012

அசிங்கத்தில் விழுந்த கல்
வீதியோரத்தில் 
நரகல் ஒன்றினை  தின்று  கொண்டிருந்தன 
பன்றிகள் சில 
அதே வீதியின்  மறுமுனையில் 
சற்றுமுன் இறைச்சிக் கடைக்காரன் வீசிய 
எலும்புக்காக சண்டையிட்டுக் கொண்டன  தெருநாய்கள் 
எதோ ஒரு பூச்சியை 
பின் துரத்திக் கொண்டு  ஓடுகிறது பூனை ஓன்று 
மரத்தடியில் வெயில்விழ 
திடுக்கிட்டு எழுந்து பின் மறு பிச்சைக்கு  ஆயத்தமானான் 
அவ்வீதியின் வாடிக்கை பிச்சைக்காரன்   ஒருவன் 
விளையாட்டுக் கிடையில் 
சாக்கடையில் விழுந்த   பந்தை கையிலெடுத்து 
மீண்டும் எறிந்து விளையாடிக் கொண்டிந்தார்கள் சில சிறுவர்கள் 
இவைகளை வேடிக்கைப் பார்த்தும் 
அதில் தர்க்கித்தும் நகையாடிக் கொண்டிருந்தனர் 
அந்த டீக்கடை பெஞ்சில் உடல்  கொழுத்து   இருக்கும் 
வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள் சில 
சிதையில் எரிகிற 
மண்ணறையில் புதைத்த மனுஷ உடம்பைகூட 
தின்னக்  கொடுத்தால் 
நன்றாய் மெல்லக்கூடும் இவர்கள் டிஸ்கி :அசிங்கத்தில் விழுந்த  கல்லை எடுத்து ஒருவர்கொருவர் 
                  எறிந்து கொள்ளும் சில மனிதர்களுக்காக 
                 மன்னிக்கவும் இந்த மாதிரியும் எழுத வைக்கிறது சமூகம் 

Wednesday, September 12, 2012

நஞ்சு விழும் குளம்
நாளை 
அக் குளக்கரையில் சவங்கள் மிதக்கலாம் 
பிந்திய நாட்களில் 
விசித்திர உருக்களில் மனிதர்கள் பிறக்கலாம் 
நஞ்சு விழும் மண்ணில் 
உயிர் வாசமற்றுக் கூட  போகலாம் 
நஞ்சுண்டு மாண்ட மண்  சரித்திர பட்டியலில் 
நாளை இக்குளக்கரையின் பெயரும் பொரிக்கப்படலாம்
நாட்டில் 
ஓராயிரம் கொடிகள் 
அதன்கீழ்  பன்முக ராஜாக்கள் 
உண்ணா நோன்பு நையாண்டி மேடை நாடகங்கள் 
ஆள பிச்சை தட்டு ஏந்துபவர்கள் 
அசிங்கத்தை கூட கூர்போடும் ஈனச் செயல்கள் 
தலைவன் என்று வந்தவனெல்லாம் 
 தலை தெறித்து ஓடுகிறான் 
யாரோ விரட்டுகிரார்களாம்
இல்லை இல்லை விலை போய்விட்டார்களாம் 
அடுத்த வீட்டில் சண்டை என்றால் வேடிக்கை பார்க்கும் 
அண்டை வீட்டாரின் தொட்டில் பழக்கம் சாபம் 
அங்கோ ஒருவனின் பாமரக் குரல் 
காக்கியின்  அதிகாரக் கோரம் 
நித்தம்  உதிரம் சொட்டி சிவக்குகிறது குளக்கரை 
எம் மண்ணில் விழும் நஞ்சு 
தளிரும் உயிரின் அடிவேரில் அமிலம் கக்கும் 

Sunday, September 9, 2012

நினைவலைகள் (அ.நா.கா 8 )அங்கு 
வெகு தூரத்தில் 
பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது  நீலவானம் 
 இதோ இங்கே 
கரையை ஓயாது முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது அலைகள் 
ஏகாந்தத்தில் லயித்துக் கொண்டிருந்தேன் நான் 
சற்றென பாறையில் அலைகள் மோதிட 
தெறித்த துளிகள் நெற்றியில் மோதிவழிய
உயிரை முத்தமிட்டது அவள் நினைவுகள் 

அன்று 
ஒரு முன்னிரவில் 
என்னில் ஒரு நன்மையைச் சுட்டிக்காட்டி 
புண்ணியம் என்று 
என் முன்நெற்றியில் ஈரம் பதிய முத்தம் பதித்தாய் 

சிறிதொரு நொடியில் 
உலர்ந்து விடுகிறது நெற்றியில் அவ் ஈரம்  
இட்ட முத்தத்தில் 
உயிரில் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது 
உன் அன்பின் ஈரம் மட்டும் 

பிரிதியோருநாள் 
அக வெட்கையில் 
தவறுதலாய்  சுட்டுவிடுகிறேன்  சொல்லால் உன்னை 
சட்டென உதிர்த்த கண்ணீரும்  இரவுவரை நீண்ட மௌனத்திலும் 
கோபமும் வலியும்  சுமந்து நீ 

அன்றிரவே 
என் இனங்கலும்    
உன் மன்னித்தலும்  அரங்கேறியது   

ஒரு அடியெனும் அடித்து விடு 
உன் வலியை  
என்னிலும் உணர்த்திவிடு என்கிறேன் 
மெல்ல இதழ் சுளித்து புன்னகைத்தாய்   நீ 

நாம் அன்பில் லயித்திருந்த ஓரிரவில் 
உன் பாதத்தை 
முத்தமிட முற்படுகிறேன் நான் 
பாவச் செயலென 
சற்றென விலக்கி விலகிவிடுகிறாய் நீ 

நீ அசந்த ஒரு தருணம் 
முத்தமிடுகிறேன் உன் பாதத்தை 
மின்னல் வேகத்தில் விழுந்தது 
கன்னத்தில் ஓரடி 

விரல் பதிந்து 
சிவந்த கன்னத்தை வருடியபடி 
விழிகளில் கண்ணீர் மல்க என்னை வசையாடினாய் நீ 

என் பிழைக்காக ஓரடி 
அன்று அடிக்கவில்லை நீ 
வலித்து எனக்கு 
அடித்து விட்டாய் வலிக்கவில்லை 

முகத்தோடு 
முகம் புதைத்து பின் முத்தமிட்டாய் 
முன்நெற்றியில் 
 நம் நான்கு விழிகளிலும் கொட்டியது கண்ணீர்  

அன்றிரவு 
சத்தமிட்டிடபடி மழை கொட்ட 
சன்னல் வழி சாரலின் ஊடுருவல் 
ரெம்ப நாளாச்சு இப்படி ஒரு மழை பெய்து  என்றாய் நீ 

மரங்களை வெட்டும் மனிதனை 
வெட்கையால்   தண்டித்துவிட்டு பின் மனமிழகி கொட்டிவிடும்   இப்படி
தவறுகள்  தண்டிக்கபடவேண்டும் பின் மன்னிக்கபடுவதும் உண்டு 
அதை நமக்கு உணர்த்திக்கொண்டு கொட்டுகிறது 
நெடு நாட்களுக்குப்பின் பெய்யும்   மழை

வா ...போவோம் 
நேரமாகிவிட்டது தட்டி எழுப்பினான் நண்பன் 
திடுக்கிட்டு எழுந்தேன்  
உன் நினைவில் உறங்கிப் போயிருந்த நான் Thursday, September 6, 2012

நவசமூகம் (பழைய ...ப்பா கிறுக்கல்கள் 2 )
* தங்க விலையில்
தானியங்களும் காய்கறிகளும்
விளைநிலத்தில் கட்டிடங்கள்


* உடுப்பு சுருங்காமல் உழைப்பவனுக்கு
உணவுப்படி அளக்குகிறான்
சேருசகதி புரண்ட உழவன்


*சுடும் வெயிலில்
நிழலுக்காக ஓடுகிறான்
மரம் வெட்டுபவன்


*குருடனின் பிச்சைப்பாத்திரத்தில்
காசு திருடுகிறான்
பார்வை உள்ளவன்


*ஊடக மேடைகளில்
ஆடைப் பஞ்சத்தில் அரங்கேறும் குழந்தைகள்
ஈன்றவர்களின் புதிய வழிநடத்தல்


*உறவுகளில் கள்ளம்
பொதுக் கழிப்பறையாய்
கற்புத் தலங்கள்


*யாருக்கு பிள்ளை
தற்க்கித்து கொள்கிறார்கள்
விவாகரத்தான தம்பதிகள்


*இச்சை பசி
விரியாத மொட்டிலும்
களவாடப்படுகிறது கற்பு தேன்


*வீதியில் 
காட்சி பொருளாய் வெட்கத்தலங்கள் 
நவநாகரீகத்தின் ஆடை கத்தரிப்பு 


Monday, September 3, 2012

கடவுள் பொம்மை
வீதியில்
கூடி விளையாடிக் கொண்டிருந்தது  
சில குழந்தைகள்
எங்கிருந்தோ வந்த காற்றில்
வந்து விழுந்தது கடவுள் பொம்மை ஓன்று
அதாதி மிரட்சியால்
குழந்தைகளின் கரங்களில் இழுபட்டபடி
வித்திரமான அக் கடவுள் பொம்மை
அடையாளம்
சொந்தமாக்கல்
பெயரிடல்  தர்க்க முளையிடலில்
தளிர்விட்டது சொல் சண்டை
கடவுள் பொம்மைச்  சண்டையில்
வீதில் உதிர்ந்தது உதிரம் பின் உயிர்
கண்ணீர் உதிரக் கறைபுரண்டு
சவங்களின் துர்கந்த வீச்சமுமாய்
வீதியின் ஒதுக்குபுறத்தில் வீசிஎரிபட்டது  
கடவுள் பொம்மை
பிந்திய ஒரு நாளில்
அவ்வீதிக்கு மீண்டும் விளையாட வருகிறது
சில குழந்தைகள்
வீதியோரத்தில் அசூரப் புன்னகையிமாய்
கடவுள் பொம்மையும்

Saturday, September 1, 2012

வசவு ரணம்வசை சொல்லை 
 உறவில்  துப்பிவிட்டு 
அழுதுகொண்டு இருக்கிறது அகம் 
நோய்வாய்பட்டு 
சுகவீனம் இன்றி இழைந்தபடி பொழுதுகள் 
சமைக்கப்ட்ட விருந்து  பந்தியில் 
பசியிலும் நோன்பின் பொய் விளம்பல் 
இரவில் எங்கோ 
சிறைவைக்கபட்ட உறக்கம் 
சிறு துளியாய் விழுகிறது விழியில் 
அதில் அமிலத்தின் உறுத்தலும் 
இன்று நாளையென 
மரணத்தின் விளிம்பில் ரணவலியுமாய்
சிந்தைக் கருவறையில் குடல் சுற்றிய 
கவிதை  ஓன்று 

Thursday, August 23, 2012

உறகத்தின் களவு (அ .நா.கா 7)

முந்தின 
இரவில் உறக்கம் கெடுத்தியதாய்
அவளிடம் இவன் 

இல்லை இல்லை 
அவள்  உறக்கம் தொலைந்ததாய் 
அவனிடம் இவள் 

அவன் அவளின் 
ஒளிப் பிம்பம் இரவை கீறியதால் 
அவன் அவளில் உடைந்தது உறக்கம் 

அவன் 
கனவில் இவளும் 
அவள் கனவில் இவனின் 
 நினைவுகளின் ரகசிய ஊருடுவல் 

அவன் அவள் 
உறக்கத்தை கெடுத்தியது
அவன் அவளில் இடையே  இழையும்  
கா(தல்)மம்

அவன் இவளில் 
களவு போன உறக்கம் 
மென்று துப்பிய இரவின் எச்சிலில் 
ச்சீ..... அசிங்கம் 

Wednesday, August 22, 2012

முள் சொல்
சொல்லை 
உருட்டி யெடுத்து 
தின்னக் கொடுக்கிறார்கள் 
வலிக்க வலிக்க மெல்கிறேன் சொல்லை 

முள்ளின் 
முனை சொல் சில 
இடையில் அகப்பட்டு கீறுகிறது 
அகத்தில் கசிகிறது ரத்தம் 

வலியில்
சொல் உதிரக் காத்திருக்கிறார்கள் 
 அவர்களின் அர்த்த விசுபரூபத்திற்கு பயந்து 
மௌனமாய் மெல்கிறேன் 

நஞ்சில் 
 மறுநொடி மரணம் 
சொல்லை மெல்லக் கொடுத்து 
ரணத்தை ரசிக்கிறது உலகம்      


இது என் 350வது கிறுக்கல் 
************************************************


ரெட்டை விருதுகள் 

எனக்கு ரெட்டை விருது கொடுத்த 
அன்பின் சகோ ராதாராணி அவர்களுக்கு   நன்றி ..நன்றி ..நன்றி 

என் கிறுக்கலுக்கு தொடர்ந்து கருத்து நீர் ஊற்றி வரும் நேச உறவுகளுக்கு 
என் மனபூர்வமான நன்றி ...நன்றி ..நன்றி 
 

 இந்த அன்பின் விருதை தோழமை  உறவுகளுக்கு பகிர்வதில் மகிழ்கிறேன் 

கரைசேரா அலை -அரசன் .சே 

வரலாற்றுச் சுவடுகள் -வரலாற்றுச்சுவடுகள் 

இலக்கிய சுவை -கோவை மு .சரளா 


மனசாட்சி™ -மனசாட்சி 
  

Tuesday, August 21, 2012

உருவம் இழந்தவன்
நினைவில் 
தங்காமல் இறந்து கொண்டிருந்தது 
முந்தின    நாட்கள் 

அகத்தில் செல்லரித்து மக்கி 
அல்ப ஆயுசில் இறந்துபோன 
நினைவுகளின் உருவம் 

மரண பயத்தில் ஓடி ஒளிகிறது 
உருவங்களில் படிந்து விழும் 
நிழல்கள் 

உறவில் ஓட்டாதவன் உயிரில் 
ஒட்டாமல் கடந்து போகிறது 
உருவங்கள் 

வந்த வீதிகளில் 
உடைந்து உதிர்ந்து மரணித்திருந்தது
சுயவுருவம் 


நினைவுகளில் 
இறந்த உருவங்களுக்காக அழுகிறான் 
சுய உருவம் இழந்தவன் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...