Tuesday, January 31, 2012

இனிக்கும் காதல் ரணங்கள்அவளைச் 
சூழ்ந்திருக்கும் காற்றலைகளில் 
கலந்திருக்கிறது அவளைப்பற்றிய 
என் நினைவுகள் 


அவளுடனான 
ஆழ்மன  இஷ்டத்தை 
மௌனத்தில் உணருகையில் 
அமிர்தமாய் இனிக்கிறது உயிர் 


தொலைதூர 
இடைவெளி இரவுகளிலும் 
என் உறக்கத்தை களவாடுகிறது 
அவள் நினைவுகள் 


சுவாசிக்கும்
காற்றினில் உணர்கிறேன் 
 அவள் மூச்சுக்காற்றின் ஸ்பரிசம் 


என்னைச் 
சுற்றி எழும்பி ஒலிக்கும் 
ஓசைகளில் அவள் குரலொலிகள் 


என் 
விழிகள் பார்க்கும் இடமெல்லாம் 
அவளின் பிம்பங்கள் 


அதிகாலை
பனித்துளிகளாய் மாறி 
ஜீவன் நனைக்கிறாள் 


நட்டுச்சிக் 
கதிரவன் போல் 
உள்ளத்தை சூடேற்றுகிறாள்


இரவினில் 
தேயும் நிலவைப்போல் 
மீத உயிரையும்   தேய்க்கிறாள் 


அவள் 
இல்லாத தனிமைகளில் 
உயிர் வதைக்கும்   சித்ரவாதையின் 
பொருள் உணர்கிறேன் 

காதல் 
வதைக்கும் ரணம் தான் 
அந்த ரணத்திலும் உணர்கிறேன் 
வாழ்கையின் இனிமையை 


மணமாலையில்
பூத்த உன்னுடனான  காதலை
மரணம் வரை வேண்டுகிறான் 
நம்மை இணைத்த இறைவனிடத்தில் 


Sunday, January 29, 2012

விலைபோகாத மனித(மீ )ன்
வாங்க வாங்க 
பிடைக்கிற மீனுங்க 
நல்ல கொளத்து  மீனுங்க 
இன்னைக்கு காத்தால புடுச்சதுங்க 

 மனிதர்கள் நிரம்பிவழியும் 
 நகரச் சந்தையில் 
சத்தாய் கூவிக் கொண்டிருந்தான் 
மீன் விற்பவன்


நல்ல மீனா 
என்ன விலை 
எவ்வளவுக்கு கொடுப்பீங்க 
இவ்வளவுதான் தருவேன் 

கூடிவந்து 
வேடிக்கை பார்த்தவர்களில்  
சிலர் தற்கித்தனர்
ஒருசிலர் வாங்கிச் செற்றனர் 

வாங்க பாருங்க 
நல்லா காஞ்ச 
உப்பில ஊருண 
அல்வா துண்டாட்டமான கருவாடுங்க 

எதிர்திசையில் 
காய்ந்த கருவாடை தூக்கிக்காட்டியபடி 
வருபவரை பார்த்துக் கூவினான் 
கருவாட்டுக் கடைக்காரன்

அங்குவந்த 
ஒருசில கருவாட்டுப் பிரியர்கள் 
தேர்ந்த கருவாட்டுப் பொட்டலத்தை 
வாங்கிச் சென்றனர் 

கதிரவன் 
உச்சிக்கு வருமுன் 
கூடையில் பிடைத்த மீன்கள் 
விற்றுத்தீர கிளம்பினான் மீன்காரன் 

விலைபோகாமல் 
ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்த 
காருவாட்டுக் கூடையை மூடினான் 
நாளைய வியாபாரத்திற்காக கடைக்காரன் 

குறுகிய 
நேரக் காலஅளவில் 
சற்றென விலைபோனது 
உயிருள்ள சில மீன்கள் 

காலம் பழகியும் 
பிடைத்து செத்த மீன்கள் 
காலம் கடந்தும் விலைபோகிறது 
கருவாடாய்

 பிந்திய ஓர்நாள் 
கடைகள் அடைக்கப்பட்டிருந்தது 
மனித நிழல்கள் இன்றி 
மயானமாய்   சந்தை வீதி 

நேற்று ராத்திரி 
ஒரு மீன்காரர்  செத்துட்டார் 
இன்னைக்கு துக்க நாள் 
நாளைக்கு வாங்க 

மீன்வாங்க வந்து 
ஏமாந்து திரும்பிய ஒருவர் 
வழியோரத்தில் விசாரித்தார் 
கடையடைப்பின் காரணத்தை 

சற்றென 
சங்குச் சத்தமும் பன்னீர் வாசம் 
பாடையில் உதிரும் மலர்களும் 
சந்தை வீதியை அலங்கரித்தது 

இறந்தும் 
விலைபோகாமல் 
பாடையில் மயானக் கழிவாய் 
நேற்றுவரை  மீன் விற்றவன் 

Thursday, January 12, 2012

மனுஷ மிருகம்
எல்லா மனிதனின் 
அகச் சிறைகளில் உறங்குகிறது 
ஒரு மனுஷமிருகம்

 நச்சுக் கூர்மைகள் 
ஆழ்மனதை இரண்டாகக் கீறுகையில்
 சலனப்படுகிறது அகத்தில் உறங்கும்
மனுஷமிருகம் 

சில சீண்டல்களில் 
கூரமான செய்கைகளில் 
கோர நிகழ்வுகளில் விலங்கை உடைக்கிறது 
மனுஷ மிருகம் 
  
சுய வேதனையில் 
அசூர வேகத்தில் காயப்படுத்துகிறது 
விழியும் மதியும் இழந்த 
மனுஷமிருகம் 

காயப்பட்ட உறவுகள் 
கண்ணீர் உதிர்க்கையில் 
மௌனமாக அழுகிறது 
மனுஷ மிருகம்

உயிர்த்தெழும் 
மனுஷ மிருகத்தை 
சீண்டி காயப்படுத்தாதீர்கள் 
அன்புச் சிறைக்குள் பூட்டியிடுங்கள் 

மனுஷ மிருகத்தை 
சலனம் செய்யாதீர்கள் 
அதுவும் ஓர் உணர்வுதான் Tuesday, January 10, 2012

...? மகான் அல்லநூல் இழை
வாழ்க்கை பாதை அது 
சறுக்கித் தடுமாறுபவர்கள் 
விதியை பழிக்கிறார்கள்


மெல்லிய பாதை அது 
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள் 
தவறி விழுபவர்கள்


விரிந்து   
நீளும்  இப்பாதையில் 
அக்கறை கடந்தவர்கள் யாரோ 
இறைவனுக்கே வெளிச்சம்


சுய 
உணர்வும் உணர்ச்சியுமுள்ள 
சதை பொதிந்த உயிர்கள் 
சிரிக்கிறது அழுகிறது 


இங்கு 
ஆத்மாக்களும் அழுவதுண்டு 
தன்சதை பிரிந்த துக்கத்தில் 


ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட 
நன் வாழ்க்கை முறைகள் 
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ 


வெட்ட வெளிச்சத்தில் 
சுயவாழ்வின்  இருளை உணர்ந்தும் 
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள் 
மதி மழுங்கியவர்கள் 


சுயத்திலும் 
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும் 
கண்ணீரை பனித்துளி என்றும் 
உதிரத்தை தேன்துளி என்றும் 
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு 
...? மகான் அல்ல 

Monday, January 9, 2012

சறுக்குகள்


சொல்லுதலில் 
இடைபுகாத கவிநயம் 
வார்த்தை அகரக் கோர்ப்பில் 
திணறும் கவிஞன் 

சாயங்கள் 
கலைந்து கீழ் உதிர 
ஆடை துறந்த  நாணத்தில் 
கீழ்தணியும் அகம் 

ஜனன மரண 
இறை விஷ்மயத்தில் 
ஏகப் பெருமூச்சில் விழிபிதுங்கும் 
அறிவில் உயர்ந்த மனிதன்


உயிர்த்தெழுவேன்


கனவுகளில்
உள் விழிகள் கண்ட
நிழல்களின் நிஜங்களைத் தேடிய
வாழ்க்கை பயணத்தில்
காயங்களோடு திரும்பியது
மதியும் மனமும்

கனவுகளே
விழிகளோடு கோபம்வேண்டாம்
வருகையைத் தொடருங்கள்

இறகுகளின்
காயங்கள் ஆறியபின்
சூரியனை நோக்கி
மீண்டும் பறக்கும்
பீனிக்ஸ் பறவையைப்போல்
 மீண்டும் உயிர்த்தெழுவேன்

-இது ஒரு மீள் பதிவு (தேவைப் பட்டதால் )

Thursday, January 5, 2012

கருணை வற்றிய இறைவன்சில தருணம் 
கருணை வற்றுகிறது 
இறைவனிடத்தில் 

கண்ணீர் 
உதிரம் 
உயிரென 
மனிதர்களில் உதிர்கிறது 

வலிவிழந்த 
அற்ப மனிதனிடத்தில்  
தன் வலிமையை காட்டுகிறான் 
வல்லமைபடைத்த இறைவன் 

நன் மனிதர்கள் 
கண்ணீர் உதிர்க்கையில் 
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான் 
கருணை வற்றிய இறைவன் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...