Thursday, January 5, 2012

கருணை வற்றிய இறைவன்



சில தருணம் 
கருணை வற்றுகிறது 
இறைவனிடத்தில் 

கண்ணீர் 
உதிரம் 
உயிரென 
மனிதர்களில் உதிர்கிறது 

வலிவிழந்த 
அற்ப மனிதனிடத்தில்  
தன் வலிமையை காட்டுகிறான் 
வல்லமைபடைத்த இறைவன் 

நன் மனிதர்கள் 
கண்ணீர் உதிர்க்கையில் 
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான் 
கருணை வற்றிய இறைவன் 

4 comments:

  1. சோதனை அதிகமாகும் போது இன்னும் வேகமாக கடவுளை தேடவும்.........

    ReplyDelete
  2. இறைவன் படைப்பில் பாரபட்சம் இல்லாமல் இருந்திருந்தால்..
    இம்சைகள் இல்லா உலகம்
    இங்கு இருந்திருக்கும்..


    உங்களின் நியாய கூற்றுக்கு என் வாழ்த்துக்கள்..நண்பரே..

    ReplyDelete
  3. இறைவனின் படைப்பில் பாரபட்சம்
    இல்லாவிட்டால் நமக்கு
    இம்சைகள் இல்லாத
    உலகம் கிடைத்திருக்கும்..

    உங்களின் நியாயமான கருத்துகவிதைக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. இறைவனின் படைப்பில் பாரபட்சம்
    இல்லாவிட்டால் நாம்
    இம்சைகள் இல்லாத உலகில்
    இருந்திருப்போம்...உங்களின் கவிதை அருமை..நண்பரே...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...