Thursday, January 12, 2012

மனுஷ மிருகம்




எல்லா மனிதனின் 
அகச் சிறைகளில் உறங்குகிறது 
ஒரு மனுஷமிருகம்

 நச்சுக் கூர்மைகள் 
ஆழ்மனதை இரண்டாகக் கீறுகையில்
 சலனப்படுகிறது அகத்தில் உறங்கும்
மனுஷமிருகம் 

சில சீண்டல்களில் 
கூரமான செய்கைகளில் 
கோர நிகழ்வுகளில் விலங்கை உடைக்கிறது 
மனுஷ மிருகம் 
  
சுய வேதனையில் 
அசூர வேகத்தில் காயப்படுத்துகிறது 
விழியும் மதியும் இழந்த 
மனுஷமிருகம் 

காயப்பட்ட உறவுகள் 
கண்ணீர் உதிர்க்கையில் 
மௌனமாக அழுகிறது 
மனுஷ மிருகம்

உயிர்த்தெழும் 
மனுஷ மிருகத்தை 
சீண்டி காயப்படுத்தாதீர்கள் 
அன்புச் சிறைக்குள் பூட்டியிடுங்கள் 

மனுஷ மிருகத்தை 
சலனம் செய்யாதீர்கள் 
அதுவும் ஓர் உணர்வுதான் 



11 comments:

  1. உயிர்த்தெழும்
    மனுஷ மிருகத்தை
    சீண்டி காயப்படுத்தாதீர்கள்
    அன்புச் சிறைக்குள் பூட்டியிடுங்கள்


    அன்பே அழகான சிறை!

    ReplyDelete
  2. அழகான ஆனால் உண்மையான கவிதை

    ReplyDelete
  3. Anbukkul adakki vittaal ulagu thulirkkum.

    Arumai.

    ReplyDelete
  4. சுட்டியை சொடுக்கி படியுங்கள்


    1.
    காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
    மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.


    .

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    2. ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    < ----

    ReplyDelete
  5. மனமென்னும் மாயக் குகையில் நடப்பது பற்றி எழுதி இருக்கீங்க .நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  6. உயிர்த்தெழும்
    மனுஷ மிருகத்தை
    சீண்டி காயப்படுத்தாதீர்கள்
    அன்புச் சிறைக்குள் பூட்டியிடுங்கள் //வாழ்த்துக்கள் ..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...