Tuesday, January 31, 2012

இனிக்கும் காதல் ரணங்கள்



அவளைச் 
சூழ்ந்திருக்கும் காற்றலைகளில் 
கலந்திருக்கிறது அவளைப்பற்றிய 
என் நினைவுகள் 


அவளுடனான 
ஆழ்மன  இஷ்டத்தை 
மௌனத்தில் உணருகையில் 
அமிர்தமாய் இனிக்கிறது உயிர் 


தொலைதூர 
இடைவெளி இரவுகளிலும் 
என் உறக்கத்தை களவாடுகிறது 
அவள் நினைவுகள் 


சுவாசிக்கும்
காற்றினில் உணர்கிறேன் 
 அவள் மூச்சுக்காற்றின் ஸ்பரிசம் 


என்னைச் 
சுற்றி எழும்பி ஒலிக்கும் 
ஓசைகளில் அவள் குரலொலிகள் 


என் 
விழிகள் பார்க்கும் இடமெல்லாம் 
அவளின் பிம்பங்கள் 


அதிகாலை
பனித்துளிகளாய் மாறி 
ஜீவன் நனைக்கிறாள் 


நட்டுச்சிக் 
கதிரவன் போல் 
உள்ளத்தை சூடேற்றுகிறாள்


இரவினில் 
தேயும் நிலவைப்போல் 
மீத உயிரையும்   தேய்க்கிறாள் 


அவள் 
இல்லாத தனிமைகளில் 
உயிர் வதைக்கும்   சித்ரவாதையின் 
பொருள் உணர்கிறேன் 

காதல் 
வதைக்கும் ரணம் தான் 
அந்த ரணத்திலும் உணர்கிறேன் 
வாழ்கையின் இனிமையை 


மணமாலையில்
பூத்த உன்னுடனான  காதலை
மரணம் வரை வேண்டுகிறான் 
நம்மை இணைத்த இறைவனிடத்தில் 


10 comments:

  1. அவள் இல்லாத பொழுது சுகமற்றது என்பது வாஸ்தவமே?அவளை தாண்டியும் வாழ்வின் பகுதிகள் விரிகிறதே?கொஞ்சம் பார்க்கலாமே/நல்ல் பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html

    ReplyDelete
  3. //விழிகள் பார்க்கும் இடமெல்லாம்
    அவளின் பிம்பங்கள் //

    அருமை நண்பா.

    ReplyDelete
  4. அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஒரு சரியான கோணத்தில் காதலை அளவிடுதல் மிகசிலருக்குமட்டுமே கைவந்தகலை அந்தவகையில் உங்களின் மிகசிறந்த ஆக்கம் இடம் பெற்று இருக்கறது உளபூர்வ பாராட்டுகள் ....

    ReplyDelete
  6. செய்தாலி ன்னா என்ன அர்த்தம் ஸார்


    கதிர்பாரதி

    ReplyDelete
  7. விருது ஒன்று உங்களோடு பகிர்ந்துள்ளேன் .. நேரம் இருப்பின் வருகைதாருங்கள் .. நன்றி

    http://karaiseraaalai.blogspot.in/2012/02/blog-post_16.html

    ReplyDelete
  8. இனிக்கும் காதல் இரணங்கள்..என்
    இதயத்தை வலிக்கசெய்தது..உங்களின்
    காதல் கவிதை மிகவும் அருமை..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...