Sunday, January 29, 2012

விலைபோகாத மனித(மீ )ன்




வாங்க வாங்க 
பிடைக்கிற மீனுங்க 
நல்ல கொளத்து  மீனுங்க 
இன்னைக்கு காத்தால புடுச்சதுங்க 

 மனிதர்கள் நிரம்பிவழியும் 
 நகரச் சந்தையில் 
சத்தாய் கூவிக் கொண்டிருந்தான் 
மீன் விற்பவன்


நல்ல மீனா 
என்ன விலை 
எவ்வளவுக்கு கொடுப்பீங்க 
இவ்வளவுதான் தருவேன் 

கூடிவந்து 
வேடிக்கை பார்த்தவர்களில்  
சிலர் தற்கித்தனர்
ஒருசிலர் வாங்கிச் செற்றனர் 

வாங்க பாருங்க 
நல்லா காஞ்ச 
உப்பில ஊருண 
அல்வா துண்டாட்டமான கருவாடுங்க 

எதிர்திசையில் 
காய்ந்த கருவாடை தூக்கிக்காட்டியபடி 
வருபவரை பார்த்துக் கூவினான் 
கருவாட்டுக் கடைக்காரன்

அங்குவந்த 
ஒருசில கருவாட்டுப் பிரியர்கள் 
தேர்ந்த கருவாட்டுப் பொட்டலத்தை 
வாங்கிச் சென்றனர் 

கதிரவன் 
உச்சிக்கு வருமுன் 
கூடையில் பிடைத்த மீன்கள் 
விற்றுத்தீர கிளம்பினான் மீன்காரன் 

விலைபோகாமல் 
ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்த 
காருவாட்டுக் கூடையை மூடினான் 
நாளைய வியாபாரத்திற்காக கடைக்காரன் 

குறுகிய 
நேரக் காலஅளவில் 
சற்றென விலைபோனது 
உயிருள்ள சில மீன்கள் 

காலம் பழகியும் 
பிடைத்து செத்த மீன்கள் 
காலம் கடந்தும் விலைபோகிறது 
கருவாடாய்

 பிந்திய ஓர்நாள் 
கடைகள் அடைக்கப்பட்டிருந்தது 
மனித நிழல்கள் இன்றி 
மயானமாய்   சந்தை வீதி 

நேற்று ராத்திரி 
ஒரு மீன்காரர்  செத்துட்டார் 
இன்னைக்கு துக்க நாள் 
நாளைக்கு வாங்க 

மீன்வாங்க வந்து 
ஏமாந்து திரும்பிய ஒருவர் 
வழியோரத்தில் விசாரித்தார் 
கடையடைப்பின் காரணத்தை 

சற்றென 
சங்குச் சத்தமும் பன்னீர் வாசம் 
பாடையில் உதிரும் மலர்களும் 
சந்தை வீதியை அலங்கரித்தது 

இறந்தும் 
விலைபோகாமல் 
பாடையில் மயானக் கழிவாய் 
நேற்றுவரை  மீன் விற்றவன் 

4 comments:

  1. அன்பின் தோழருக்கு வணக்கம் ..
    நல்ல படைப்பை தயங்காமல் வழங்கும் உங்களுக்கு என் நன்றிகள்..
    நல்லதொரு விழிப்புணர்வு படைப்பு...

    ReplyDelete
  2. superaa sonninga annaa

    ReplyDelete
  3. ///
    காலம் பழகியும்
    பிடைத்து செத்த மீன்கள்
    காலம் கடந்தும் விலைபோகிறது
    கருவாடாய்
    //
    இறந்தும்
    விலைபோகாமல்
    பாடையில் மயானக் கழிவாய்
    நேற்றுவரை மீன் விற்றவன்
    ////

    எத்தகைய அர்த்தத்தினை
    எழுத்துக்களால்
    செதுக்கியிருக்கிறீர்கள்!
    மாயக்கன்னாடிக்குள்
    மறைந்து கிடக்கும் நமது
    அறியாமையை
    விளக்கும் வகையான
    அறிய படைப்பு!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...