Monday, February 27, 2012

மழைக்குப் பின்





காற்றின் களவாடல் 
வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது 
கூரை இல்லா வீடு 

அடித்து நொறுக்கப்பட்டு 
தொங்கும்  கிழிசலாய் கூரைவீட்டின் 
கதவும் ஜன்னல்களும் 

மின்னல் 
சற்றென  எடுத்த புகைப்படத்தில் 
கருகி விழுந்த கொலைவாழை 

வெள்ளத்தால் 
மண்ணரித்த முற்றத்தில் வேரற்று 
குடைசாய்ந்த பச்சைமரம் 

அறுந்து விழுந்த
மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது 
கறவைப் பசு 

கீழ்விழுந்து 
உடைந்த முட்டைகளைச் சுற்றி 
கொக்கரிக்கும் அடைக்கோழி 

ஓடைத் தண்ணீரில் 
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது 
ஒற்றைப் பள்ளிச் சீருடை


 நனைந்து கசங்கிய 
கூலிப் பணம் கடைத்தெருவில் 
செல்லாக் காசாய்

வெற்றுப் பத்திரங்களில் 
மீதமாய் தேங்கி இருந்தது 
மழை நீர் 

மழைக்குப் பின் 
அந்த ஏழைவீட்டில்  சொட்டியது 
கண்ணீர் துளிகள்

எங்கோ 
கொட்டும் மழையில் கரைகிறது 
சில ஏழை மனிதர்களின் 
வாழ்க்கை 


Monday, February 20, 2012

அவளின் மௌனம்




என்
ஆதிக்கமும் அதிகாரமும்
மரணப் படுக்கையில்
தத்தளிக்கிறது

எம்
மேனியெங்கும்
கீறலின்றி சொட்டுகிறது
உதிரம்

இதழ்
திறந்து திட்டிவிடு இல்லையேல்
சின்னதாய் அடித்து விடு
வலிதாங்கிடும்


எனக்கெதிரே
நீ ஏந்தும் மௌன ஆயுதத்தை
மன்னிப்பு உறைக்குள்
பூட்டிவிடு



என்
உயிரை கொல்லும்
கொடிய விஷம்
உன் மௌனம்



Sunday, February 19, 2012

ஊக்கத் துளி (விருது )





என்னவளின்
சேலைத் தும்பை பிடித்தபடி 
அங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது 
என் நினைவுகள் 


சிந்தனை 
மை துளிகள் வற்றி 
செயலிழந்து கிடக்குகிறது 
நேற்றுவரை எழுதிய 
எழுதுகோல் 

இன்று நாளையென 
மூடிய இலைகளுக்குள் 
சுவாசம் முட்டிக்கொண்டு   
விரியத் துடிக்கும் 
வலைப்பூ 

மூடிய 
பூவை இதமாய் நனைத்தது 
எங்கிருந்தோ  வந்தது விழுந்த 
பனித்துளி (விருது )

என் 
சோம்பலை தட்டி உணர்த்திய 
அந்த ஊக்கத் துளி 
நட்பில் கசிந்த 
அன்புத்துளி 


நட்பிற்குள் 
நன்றி உரைப்பது நன்னற்றது 
இருப்பினும் நன்றி உரைக்கிறேன் 
நட்புக்கல்ல 
நம்மை நட்பில் பிணைத்த 
இறைவனுக்கு 

நட்பு 
சூடிய விருது மகுடத்தை 
அகம் கனிந்து சமர்ப்பிக்கிறேன் 
 நன் தோழமைகளுக்கு 

சமைக்கப்படும் கவிதைகளில் 
அமிர்தமாய் தித்திக்கிறது 
அருச் சுவைகள் 

இளமை ததும்பும் 
கவிதைகளின் அழகிய 
தோரணங்கள் 

 இதழ் மெல்ல உச்சரிக்கும்போதே 
கமகமக்குது காதல் கவிதைகளின் 
நற்மணம் 

காதல் 
உணர்வுகள் 
சமூகமென கொட்டிக் கிடக்கிறது 
அழகிய கவிதைகள் 


தீட்டும் 
கவிதை வரிகளில் 
மரபையும் மண்வாசனையையும் 
கட்டிக் காக்குகிறது



சமர்ப்பிக்கப்பட்ட 
இவ்விருதை சமர்ப்பியுங்கள் 
வளரும் நன் 
படைப்பாளிகளுக்கு 




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...