Sunday, February 19, 2012

ஊக்கத் துளி (விருது )





என்னவளின்
சேலைத் தும்பை பிடித்தபடி 
அங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது 
என் நினைவுகள் 


சிந்தனை 
மை துளிகள் வற்றி 
செயலிழந்து கிடக்குகிறது 
நேற்றுவரை எழுதிய 
எழுதுகோல் 

இன்று நாளையென 
மூடிய இலைகளுக்குள் 
சுவாசம் முட்டிக்கொண்டு   
விரியத் துடிக்கும் 
வலைப்பூ 

மூடிய 
பூவை இதமாய் நனைத்தது 
எங்கிருந்தோ  வந்தது விழுந்த 
பனித்துளி (விருது )

என் 
சோம்பலை தட்டி உணர்த்திய 
அந்த ஊக்கத் துளி 
நட்பில் கசிந்த 
அன்புத்துளி 


நட்பிற்குள் 
நன்றி உரைப்பது நன்னற்றது 
இருப்பினும் நன்றி உரைக்கிறேன் 
நட்புக்கல்ல 
நம்மை நட்பில் பிணைத்த 
இறைவனுக்கு 

நட்பு 
சூடிய விருது மகுடத்தை 
அகம் கனிந்து சமர்ப்பிக்கிறேன் 
 நன் தோழமைகளுக்கு 

சமைக்கப்படும் கவிதைகளில் 
அமிர்தமாய் தித்திக்கிறது 
அருச் சுவைகள் 

இளமை ததும்பும் 
கவிதைகளின் அழகிய 
தோரணங்கள் 

 இதழ் மெல்ல உச்சரிக்கும்போதே 
கமகமக்குது காதல் கவிதைகளின் 
நற்மணம் 

காதல் 
உணர்வுகள் 
சமூகமென கொட்டிக் கிடக்கிறது 
அழகிய கவிதைகள் 


தீட்டும் 
கவிதை வரிகளில் 
மரபையும் மண்வாசனையையும் 
கட்டிக் காக்குகிறது



சமர்ப்பிக்கப்பட்ட 
இவ்விருதை சமர்ப்பியுங்கள் 
வளரும் நன் 
படைப்பாளிகளுக்கு 




11 comments:

  1. azagana கவிதை யா கொடுத்துட்டிங்க விருதை ...

    anaivarukkum இனிய vaazthukkal ..

    thangalukkum kalai annakkum sirappu vaazthukkal

    ReplyDelete
  2. அருமை நண்பரே..உங்களின் இனியதொரு கவிதையில் எனது உலகமும் உள்ளிருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்..என் அன்பான நன்றிகள்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அன்பு நன்றிகள் செய்தாலி.. உங்கள் பாராட்டை விட சிறந்த விருதும் உண்டோ..? மிக்க மகிழ்ச்சி..!

    ReplyDelete
  4. மிக்க நன்றி செய்தாலி... மிகவும் மகிழ்ந்தேன்..

    ReplyDelete
  5. உங்கள் விருதுக்கு மிக்க நன்றி செய்தாலி.

    ReplyDelete
  6. உங்களுக்கே உரித்த அந்த அழகிய பாணியில்
    சிறப்புற கவிதை படைத்தது சுவைக்க கொடுத்த
    உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. விருதுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. விருதுக்கு வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  9. பாராட்டுக்கள் நண்பரே

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  10. நண்பரே, உங்களின் இனிய விருதுக்கு மனம் நிறைந்த நன்றி.
    கவிதைவாசலை நுகர்ந்து இனிய விருது கொடுத்துள்ளீர்கள்.
    உங்களின் இல்லம் நிறைந்த கவிதை வாசத்துக்கு இணை ஏதுமில்லை
    நண்பரே. உங்களின் பாராட்டுகள் தாங்கள் சொன்னதுபோல்
    ஊக்கத் துளிகள் எங்களைப்போன்ற புதிய வலைத்தள கவிஞர்களுக்கு!
    இனிய விசாரிப்புகளுடன்,
    அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

    ReplyDelete
  11. சேக்காளி... பதிவுலகின் முதல் மழையாய் உங்களின் ஊக்கத்துளி என்னை நனைத்திருக்கிறது. நன்றி நவிலல் என்ற வரைமுறைகளறுத்த நட்பின் நிழலில், உங்கள் கரங்களை பற்றிக்கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு. நிச்சயம் புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது இந்த ஊக்கத்துளி.

    இந்த இடைப்பட்ட கால இடைவெளியில், எனக்கேற்ற வாழ்க்கைத்துணையை நான் பெற்றிருக்கும் நல்ல செய்தியினையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலும், தனிப்பட்டமுறையில் எனக்கிருந்த சில வேலைகளினாலும், எந்த சமூக வலைத்தளங்களுக்கும், பதிவுலகிற்கும், அதற்கென்றே நான் ஏற்படுத்திக்கொண்ட மின்னஞ்சலுக்கும் "உள்ளேன் ஐயா" சொல்ல இயலாமல் போனது.

    அதன்பொருட்டே உங்கள் ஊக்கத்துளியை தாமதமாக ருசிக்க நேர்ந்திருக்கிறது சேக்காளி... வருந்துகிறேன்...

    தொடர்ந்து வலையின் உதவியில் இணைந்திருப்போம் சேக்காளி...

    ஊக்கத்துளி அருந்திய அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...