Monday, February 27, 2012

மழைக்குப் பின்





காற்றின் களவாடல் 
வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது 
கூரை இல்லா வீடு 

அடித்து நொறுக்கப்பட்டு 
தொங்கும்  கிழிசலாய் கூரைவீட்டின் 
கதவும் ஜன்னல்களும் 

மின்னல் 
சற்றென  எடுத்த புகைப்படத்தில் 
கருகி விழுந்த கொலைவாழை 

வெள்ளத்தால் 
மண்ணரித்த முற்றத்தில் வேரற்று 
குடைசாய்ந்த பச்சைமரம் 

அறுந்து விழுந்த
மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது 
கறவைப் பசு 

கீழ்விழுந்து 
உடைந்த முட்டைகளைச் சுற்றி 
கொக்கரிக்கும் அடைக்கோழி 

ஓடைத் தண்ணீரில் 
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது 
ஒற்றைப் பள்ளிச் சீருடை


 நனைந்து கசங்கிய 
கூலிப் பணம் கடைத்தெருவில் 
செல்லாக் காசாய்

வெற்றுப் பத்திரங்களில் 
மீதமாய் தேங்கி இருந்தது 
மழை நீர் 

மழைக்குப் பின் 
அந்த ஏழைவீட்டில்  சொட்டியது 
கண்ணீர் துளிகள்

எங்கோ 
கொட்டும் மழையில் கரைகிறது 
சில ஏழை மனிதர்களின் 
வாழ்க்கை 


5 comments:

  1. romba touching aa irukku annaa..

    kadaisi lineslaam romba manasu kastak kudukkuthu ....

    naan 3rd std padikkumbothu same incident nadanthuchi engada vaadagai kudisai veetil...
    inum niyabhagam irukku anna ...


    kavithai super annaa....

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே ..
    சிலரது வாழ்வும் புயல் கடந்து போன தடங்களை வைத்தே கூறிவிடலாம் ..
    வரிகளின் உருவகம் கண்ணுக்குள் நிழலாடுது .. அழகிய படைப்புக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  3. நிகழ்சிகளை படிப்பவர் மனங்களில்
    தெளிவாக காட்சிப்படுத்தும்
    தங்கள் எழுத்தின் நேர்த்தி அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...