Wednesday, March 28, 2012

ராசாத்தியின் சடங்குகள்

நாடி நரம்புகள் 
செயலிழந்த சரீரத்தில் 
இழுபடும்  மூச்சில்  துடிதுடித்தபடி 
உயிர் 

உறவுகள் அழ 
ஊரார் அனுதாபம் உதிர்க்க 
நடுவீட்டில் காட்சிப் பொருளாய் 
நான் 

தலைப்புள்ள 
அவன் பால் ஊத்தினால்தான் 
இழுத்துகிட்டு இருக்க உசிரு அடங்கும் 
கூட்டத்தில் யாரோ 

நொடிகளில் மரணம் 
இமைகள் மெல்லிதாய் மூட 
சிந்தை திரையில் ஒளிர்ந்தது 
பழைய  நிகழ்வுகள் 

ங்க.. ங்க ...
பச்சைகுருதி படிந்த உடலுமாய் 
தொப்புள்கொடி வெட்டிய வலியில்
முதல் அழுகை 

ராசாத்தி ராசாத்தி 
காதுகளில் ஓதப்பட்ட சொல் 
இதழிடையே விழுந்த சுவை 
ச்சேனைத் துளி 

கூடிவந்த சிலர் 
என்னை தொட்டு தூக்கியும் 
முத்தமிட்டும் சிதற விட்டனர் 
புன்னகையை 

அம்மா ....
அடிவயிற்றைப் பிடித்தபடி 
வலியால் கத்த பாவாடையில் 
பிசுபிசுத்தது ஈரம் 

பெரிய  மனுஷி 
குலவ சத்தமும் மஞ்சள் நீரும் 
ஊற்றி ஊருக்க்ச் சொன்னார்கள் 
உறவுகள்

சீவி சிங்காரிச்சு 
எத்தனையோ ஏதேதோ மனிதர்களின்முன் 
தொழுதும் கும்பிட்டும் இறுதியில் 
சம்மத மூளல் 


உறவுகளையும் 
ஊரையும் தட்டியெழுப்பி தடபுடலாக 
அரங்கேறிய பெரும் சடங்கு 
திருமணம் 

கைநிறைய
வளையலும் வாய்நிறைய இனிப்பும் 
தலைப்பிரசவ தாய்வீடு வழியனுப்பல்
சடங்கு

சின்னதும்
பெரியதுமாய் எத்தனை எத்தனையோ
காரண காரியங்களற்ற சடங்குகளின்
அரங்கேற்றம் 

நீண்ட
இணை பயணத்திற்குப்பின்
உறவையும் உயிரையும் முறித்து
வாழ்கையை பங்கிட்டவன் 

ஒப்பாரி ஓல 
சத்தமிட்டும் கண்ணீர் ஒழுக்கியும் 
 பொட்டும் தாலியும் வளையலும் உடைத்த 
விதவைச் சடங்கு 

சற்றென 
நினைவுகளில் கருமை படிய 
முதல் சீம்பால் குடித்து வளர்ந்த  மூத்தமகன் 
இறுதிப் பாலுமாய் நிற்பத்தை கண்டாள்
மூடிய இமைவழியே 

இறுதிப் பாலின் 
ஒருதுளி இதழ் நனைக்கக 
ஒரு பெரும் மூச்சில் அணைந்தது 
உயிர் 

எதோ ஒரு 
ஆற்றங்கரை நீரில் தற்பனம் 
மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தாள் 
ராசாத்தி 

வார மாத 
வருடமென தொடர்கிறது 
ராசாத்தி இறந்தபின்னும் அவளுக்கான 
சடங்குகள் 


Monday, March 26, 2012

எழுதப்படாத சுவடுகள்
ஒரு அறையில் 
ஒரே குடும்பபாக இருந்தாலும் 
முகம் பார்த்தாலும் உரையாடுவதும் 
மிக மிக அரிது 

உறவுகளுக்காக 
கடல்கடந்து திரவியம் தேடி 
அலையும் எத்தனையோ பறவைகளின் 
வாழ்க்கை இப்படித்தான் 

முன்தினம் 
வார விடுமுறை என்பதால் 
முக சந்திப்பில்  ஐக்கியமாயிருந்தார்கள் 
அறை நண்பர்கள் 

ஒருநண்பர் 
நாட்டு நடப்புக்களை 
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் 
ஊடகத்தில் 

ஜன்னலோரத்தில் 
தன் புதுமனைவியுடன் கைபேசியில் 
நெடுநேரமாய் சப்தமின்றி கொஞ்சியபடி 
 புது மாப்பிளை 

தினமும் 
இல்லை என்றாலும் வாரம் ஒருமுறை 
வழக்கம்போல் மதுபாட்டிலை திறந்து 
முதல் பெக்கை அருந்தத்தொடங்கினார்
மற்றொரு நண்பர் 

ஊடக 
தலைப்புச் செய்தியில் சற்றென 
உயிர்த்தெளுந்த்து பிரபலமான  ஒருவரின்
மரணச்  செய்தி  

அங்க பாருங்க 
 நண்பர் சப்தம் எழுப்ப 
எதையோ வாசித்துக் கொண்டிருந்த என்னையும் 
சலனம் செய்தது 

எல்லா 
ஊடங்களிலும் நிரம்பி வழிந்தபடி 
சற்றுமுன் இறந்தவர் வாழ்ந்த 
வாழ்க்கை குறிப்புக்கள் 

முதுமை பட்டியலுக்குள் 
இடம் பெற்றவர்களின் பெயர்களை
ஒவ்வோற்றாய் அளிக்கிறான்
இறைவன் 

யதார்த்தமாய் 
சொல்லிகொண்டிருந்தார் 
ஊடகத்தை பார்த்தபடி 
நண்பர் 

எதிலோ ஒன்றில் 
பிரபலமான மனிதர்களின் 
ஜனன மரணத்தை ஊருக்கு சொல்கிறது 
பலதரப்பட்ட ஊடகங்கள் 

ஒவ்வொரு நொடிக்கும் 
எங்கோ பிறந்தும் இறந்தும் கொண்டிருக்கிறார்கள் 
எத்தனையோ பிரபலம் இல்லாத 
மனிதர்கள் 

சில பிரபலத்தின் 
ஜனன மரணங்களும் 
அவர்களின் வாழ்கையும் எழுதப்படுகிறது 
கால ஏட்டில் 

ஓசை எழுப்பாமல் 
மௌனமாய் எத்தனையோ கோடி
 சாதாரணப்பட்ட மனிதர்களின் 
மரணங்கள்

இவர்களின் 
மரணத்தைப்  போலவே 
அவர்களின் வாழ்க்கை குறிப்பும் 
கால ஏட்டில் எழுப்படமாலே 


Thursday, March 22, 2012

இருட்டு முனங்கல்கள்
விண்ணில் 
நிலவின் மரணம் 
துக்கத்தில் விண்மீன்கள் 

மங்கிய 
வெட்டங்களையும் இரக்கமின்றி 
தின்று விழுங்கிக்கொண்டிருந்தது 
கருத்த வாவு

ஊரையே 
தன் கருத்த போர்வைக்குள் 
விரித்து மூடிப்போட்டு இருந்தது 
இரவு 

மரங்கள் 
இல்லாத சிமெண்டு தெருவிற்குள் 
வெட்கைக்கு பயந்து நுழையாமல் 
ரோட்டோரமா சுத்திக்கொண்டு 
காற்று 

சாலையில் 
வேகமாக ஓடும் வாகனங்கள் 
சற்றென  ஓடி ஒளிந்துகொள்கிறது 
வெளிச்சம் 

வீதியோர 
கடைகளில் மங்கல் வெட்டம் 
சத்தமாய் அழுதுகொண்டிருந்தது 
சில மோட்டார்கள்

அவ்வப்போது 
எரியும் தெருவிளக்கும் 
நித்த மின்வெட்டால் செயலிழந்து 
அட்டக்கெசமாய் வீதி 

யாரது ..?
சப்தங்களில் வினா எழுப்பி 
அடையாளங்களை பரிமாறக் கொண்டார்கள் 
விளிச்சத்தை கையில் சுமக்காமல் 
வீதில் நடப்பவர்கள் 

ஏழை 
வீட்டு வாசப்படியில் 
கண்ணீர் சிந்தியபடி அழுதுகொண்டிருந்தது 
மெழுகுவத்தி 

அடுத்த 
தெருவிலுள்ள துபாய்காரன் வீட்டில் 
பல்லை இழித்துக்கொண்டிருந்தது
சார்ச் லைட்

ஊரின் 
புதுப் பணக்காரர்களின்  வீடுகளில் 
விலைகொடுத்து அடைத்து வைத்திருக்கிறார்கள் 
இன்வெட்டார் வெளிச்சத்தை 

நிம்மதியாய் உறங்குகிறது 
வீட்டு உபகரண இயந்த்திரங்கள் 
புலம்பிக் கொண்டு வேலைசெய்யும் 
இல்லத்தரசிகள் 

நல்ல அம்மாவசை 
இன்னைக்காவது கரண்டை விடலாம் 
இப்படி கொடுமை செய்றாங்களே புலம்பியபடி 
வீதியில்  யாரோ 

கேபிளுக்கு 
பணமே கொடுக்கக்கூடாது 
சீரியலை நல்லாப்பாத்து எத்தனை நாளாச்சு 
வாசப்படியில் சில பெண்கள் 

அந்த 
ஆட்ச்சிதான் சரி இல்லை 
இந்த ஆட்ச்சியும் இப்படி ஆயிடுச்சே 
மூணாவது அணி வந்தால்தான் 
தலைவிதி மாறும் 

அதர்மத்தை 
தட்டிக் கேட்க துப்பில்லாதவர்கள் 
சத்தம்போட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள் 
டீக் கடையில் 

 இருக்கிறவன் 
இருக்கிறதை  வச்சு சமாளிக்கிறான் 
இல்லாதவன் வீட்டில் தினமும் 
அம்மாவசை 

இருட்டை 

துரத்தி அடிக்க 

மக்கள் மனங்களில் வேண்டும் 

எழுச்சி வெளிச்சம் Tuesday, March 20, 2012

ஊடல் சடுகுடு
என்னை 
பலமுறை திட்டி இருக்கிறாய் 
ஒருமுறைகூட சொன்னதில்லை 
"போடா என்று 

சபையில் 
"ங்க மரியாதையை 
நீ தூக்கி நிறுத்துகிறாய் 

தனிமையில் 
"ல்லம்...லூசு...என்னனமோ 
உன் வரம்புமீறல் ம்ம்ம் ...
சொல்ல  கூசுது

பேச்சுக்கிடையில் 
எம்விழியை உற்று நோக்கி 
என்னில் கள்ளம் தேடுகிறது 
உன் கள்ளப்பார்வை 

ஒற்றை 
சொல்லில்  உன் 
இஷ்டத்தை சொல் என்கிறேன் 
நூலிழையில் விடர்க்கிறாய் ஒட்டிப்பிடித்த
இதழ் சுருக்குகளை 

கோபத்தில் 
மட்டி கடித்து 
நீ உள்வாங்கிவிடும்  மூச்சில் 
ம்ம்ம்... வெட்கை

நான் 
நீ இட்ட முத்தத்தின் 
கணக்கை சேகரிக்கிறேன் 
உன் கஞ்சத்தனத்தை காட்ட 

நீ 
விரல்மடக்கி கணக்கு சொல்கிறாய் 
உன்னுடன் சண்டையிட்ட 
தருணங்களை


சின்ன சின்ன 
சீண்டல்கள் மோதல்கள் 
நம் கோபத்திற்கு ஒருநாள் மட்டும்  
ஆயுசு 

Monday, March 19, 2012

காதல் மொழி

என்னுடனான 
உன் விருப்பத்தை 
எத்தனை முறை கேட்டாலும் 
இதழ் திறந்து சொல்லிட தயங்குகிறாய் 

சிலநேரம் 
மௌனம் காக்கிறாய் 
மீண்டும் நான் அடம்பிடிக்க 
ம்ம் ..என்று மூளல் பதிக்கிறாய் 

செவிவழியே 
ஓசையில் பதில்தேடிய இதயம் 
சுவசமுட்டி வேதைனையில் துவள 

வாடிய எம்முகத்தை 
 இரு கரங்களால்  அள்ளியெடுத்து 
முன்நெற்றியில் உன் இதழ்பிதுங்க
இச்சென முத்தம் பதித்தாய் 


நெற்றியில் 
பதிந்த எச்சத்தின் ஈரம் 
உடலை மட்டுமல்ல 
என் உயிரையும் நனைத்துச் சொன்னது 
உன் காதலின் ஆழத்தை 


Thursday, March 15, 2012

பள்ளிகூட கலாட்டக்கள்
பள்ளி 
அனுபங்களை எழுதுங்கள் 
தங்கை கலையின் 
அன்பு வேண்டுகோளுக்காக 
இப்பதிவு 

கல்வி 
அறியாமை இருளை விரட்டும் 
ஒளிச் சுடர் 
இதுவரையிலான வாழ்கையில் உணர்ந்த 
உண்மையும் கூட 

வெளிச்சத்தின் 
வீரியம் சிலருக்கு
பிரகாசமாக மங்கலாக ஒளிரும் 
அது கல்வியின்  தரம்  

அந்த 
கல்வியை முதன்முதலில்  தந்தது 
தமிழ்த்தாயின் மூற்றாம் பிள்ளையான 
மலையாளம் 

தாய் தந்தை 
தமிழர்கள் என்பதால் 
பாண்டி என்று வேற்பிரித்து
ஏளனமாய் மலையாளசகாக்கள் அழைக்கையில் 
பிஞ்சு வயசிலேயே உணர்ந்தேன்
வேற்றுமையின் வன்மத்தை 

கேலிச்சினமாய்
எத்தனையோ தருணங்களில் 
தனித்து நின்று அழுகையில் 
கண்ணீர் துடைக்கும் ஆசிரியை 
பெயர் ஞாபகத்தில் இல்லை 
உருவமோ அழியாமல் இன்னும் 
மனசில் 

வகுப்பிலும் 
விளையாட்டுத் திடலிலும் 
எனக்கும் அண்ணனுக்கும் நண்பனாய் 
தனிமை மட்டும் 

ஞாயிறுகளில் 
கடலோரத்தில் சிறு நண்டுபிடித்தும் 
அலைகளில் பாதம் நனைத்தவிளையாட்டும் 
இன்றும் மனசில் ததும்பும் 
குட்டி நினைவுகள் 

நான்காண்டு 
நீண்ட பள்ளிப்படிப்பில் 
மனசில் கல்வியை தவிர வேறெதுவும் 
ஆழமாய் பதியவில்லை 

சற்றென 
ஒரு இரவில் வேரோடுபிடிங்கி 
உறக்கத்திலேயே நட்டார்கள் 
ஈரத் தமிழ் மண்ணில் 

இடம் 
மொழி 
மனிதர்கள் எல்லாம் புதுமையாய் 
பிடுங்கி நடப்பட்ட செடியைப் போல் 
நாங்கள் 

திரிகூடபுரம்  முகைதீன் ஆண்டவர் முதல் நிலை பள்ளி 

ஐந்தாம் 
வகுப்பின் முதல் நாள் 
மொழியில் விலகிய சகாக்கள் 
சிலநாள் நீண்ட கேலிபேச்சுக்கள்
என்றோ ஓர்நாள் இறந்துவிட 
செய்கை பேச்சுக்களில் நல்ல 
நண்பர்களாய்  

 நட்ட செடிக்கு 
ஊற்றிய  நீரில் அன்பும் நட்பும் 
வேர்கள் மண்ணை இருகப்பிடிக்க 
ஓங்கி வளர்ந்தது தமிழும் நட்பும் 

ஓராண்டு 
பள்ளிப்படிப்பில் எத்தனையே 
மறக்க முடியாத நிகழ்வுகள் 
அதில் சிலவை இதோ 

வெள்ளி 
எங்களுக்கு விடுமுறை என்பதால் 
ஞாயிறில்  பள்ளி இருக்கும் 
துலைகாட்சியில் படமும் இருக்கும் 
அன்றுதான் சில சகாக்களுக்கு 
வயிற்றுவலியும் வரும் 

திங்களன்று 
வகுப்பறை கரும்பலகையில் எழுதியிருக்கும் 
பஞ்சாயத்து தொலைகாட்சியில் 
படம்பார்த்தவர்களின் பெயர்கள் 

அடிவாங்கும் 
படலம் அரங்கேற 
சிரிப்பாலும் அழுகையாலும் களைகெட்டும்
வகுப்பு 

எதோ 
ஒரு கேள்விற்கு 
பதில் தெரியாமல் ஆண் சகாக்கள் 
பெண் சகாக்களிடம் கொட்டுவாங்கியது 
இன்னும் மாயாத நாணம் 

நொண்டி 
ஸ்கிப்பிங் 
கண்ணாம்பூச்சி 
பெண் சகாகளுடனான 
விளையாட்டுக்கள் 

கோலி
கிட்டிப் பிள்ளை 
கொங்கரி முக்கான் 
கிரிக்கெட் 
பம்பரம் 
ஆண் சகாக்களுடனான 
ஆக்ரோஷ விளையாட்டுக்கள் 

நட்பெனும் 
வெள்ளைப் பாலில் 
....நஞ்சு கலக்காத பால்யம் 
வாழ்கையின் வரபிரசாதம் 

நடுநிலை 
உயர்நிலை 
கல்வியை கற்றுத் தந்தது 
மசூது தைக்கா நடுநிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி (கடையநல்லூர் )

நிறைய 
புதிய நண்பர்கள் 
எண்ணிலடங்கா அனுபவங்கள் 
எழுத முயன்றால் நாட்கள் நீளும் 

தமிழை 
தமிழாய் கற்றதும் 
எனக்குள் நல் கலைஞனை 
உணரச் செய்ததும் இப்பள்ளியே

காலை 
தமிழ் வாழ்த்து அணிவகுப்பில் 
வரததவர்களுக்கும் வந்தும் நையாண்டி செய்பவர்க்கும் 
வகுப்பறையில் பயமுறுத்தும் 
பிரம்படி 

ஆசிரியர் 
இல்லாத தருணத்தில் 
பேசக்கூடாது என்ற ஆடரும் 
அதை கவனிக்கும் தலைமை மாணவனும் 
கரும்பலகையில் பொறிக்கப்படும் 
தவறிப் பேசுகிறவனின் பெயர்  

 வரிசையாய் எழுப்பி 
வினாக்களுக்கு பதில் கேட்க 
ஆர்வமாய் பதில்சொல்லும் சகாக்கள் 
திரு திருவென முழிக்கும் படிக்காத சகாக்கள் 
சுவராசியமான தருணங்கள் 

 வீட்டுப்பாடம் 
 எழுதிய நோட்டுக்களை 
மேஜையில் அடுக்கச்சொல்ல
அடிவயிற்றில் புளியை கரைக்கும் 
எழுதாதவர்களுக்கு 

தேர்வு 
மேஜைக்கிடையில் 
நண்பர்களுக்கு பிட்டனுப்பும் சகாக்கள் 
அதை காட்டிக்கொடுத்து நல்லபேர்வாங்கும்
எட்டப்பர்கள் 

எதையோ 
கிறுக்க அதை படக்கென்று பறித்து 
ஆசிரியரிடம் கொடுத்த சகாக்கள் 
பிற பாடஆசிரியர்கள் திட்டினாலும் 
அதை கவிதை என்று முதன்முதலில் பாராட்டிய 
தமிழ் ஆசிரியர் 

அன்று 
அசுத்தம் கலக்காத ஊரணியில் 
குளித்து கும்மாளம் செய்வதும் 
அட்டக் குளத்தில் மீன்பிடிப்பதும்
கும்மாளக் கூத்து 

பகுப்பை  கட்டடித்து 
மகராஜா திரையரங்கில் 
வீர ரஜினி படம் பார்த்ததும் 
காட்டிக் கொடுத்த ஒருவனால் 
வீட்டிலும் பள்ளியிலும் அடிவாங்கியது 
மாறாத வடு 

எங்கள் 
ஊரில் நிற்காமல் செல்லும் 
பாண்டியன் பேரூந்தை 
மாணவர்கள் கூடி நிறுத்தியதும் 
ஊர் கூடி  பின் போலீஸ்வந்ததும்
படபடத்த நிமிஷங்கள் 

படிக்கும்போதே 
நூலகத்தோடு உண்டான உறவு 
 நிறைய  கற்றுக்கொடுத்தது 
இன்றும் கற்றுக்கொடுக்கிறது 

அகத்தில் 
சினிமா மோகம் குடியேறியதால் 
கல்லூரிவரை நீளாமல் மேல்நிலை பள்ளியிலேயே 
படியிறங்கியது படிப்பு 

அன்பை 
உணர்வை 
பொருளை பகிர்ந்துகொள்ள 
கற்றுக் கொடுக்கிறது 
பள்ளிவாழ்க்கை

நட்புக்காக 
வீதியில் சண்டையிட்டதும் 
அது என் ஆளு 
 யாருக்காகவோ சண்டையிட்டு பிரியும் 
பள்ளி நட்புக்களும் 

மீசை 
தளிராத வயசில் 
காதல் கடிதம் எழுதியதும் 
கடித தூதுவனாக சகாக்களும் 
இன்றும் அதை நினைக்கையில் 
வழியுது வெட்கம் 

பள்ளிப் பருவமும் 
பால்ய சுட்டித்தனங்களும் 
ஆழ்மனதில் உறங்கும் அழகிய 
பொக்கிஷம் 

Wednesday, March 14, 2012

முத்த சண்டை

மரணம் 
சொல்லின் முடிவிற்குள் 
உச்சரித்த என்னிதழை தாக்கியது 
அவளின் 
மின்சார விரல்கள் 


ஷாக்கடித்து 
வீங்கிய இதழ் வெடிப்பில் 
ரத்தத் துளி எட்டிப்பார்க்க  
துடிதுடித்த அவளோ இச் 
முத்தத்தில்  துடைக்க 
ருசியில் 
தவறி இதழ் கடிக்க 


......
 சத்தத்தின் இடையே  நீண்டது 
 முத்த சண்டை 


Tuesday, March 13, 2012

அந்த திருக்கோவில்
வான் முகத்தில் 
படிந்திருந்த  இருளை 
மெல்ல மெல்ல துடைத்தது
கதிரொளிக் குழந்தைகள் 

அன்ன நடையிடும் 
மேகங்களுக்கு இடையே 
ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது 
 மூன்றாம் பிறை 

அதிகாலை 
பனிமூட்டங்களை அங்கும் இங்குமாய் 
அலைக்களித்துக்   கொண்டிருந்தது 
வீதியில் சுற்றும் காற்று 

சுப்ரபாதமும் 
சந்தனதிரி சாம்பராணி புகைகளின் 
நறுமணங்கள்   எழுப்பியது
அக்ரகார வீதியை 

தண்ணீர்தெளித்து
அடித்து பெருக்கிய முற்றத்தில் 
மங்களகராமாய் மலர்ந்தது 
பலவண்ணக் கோலங்கள் 

ஸ்லோகத்தை 
இதழில் மெல்ல உச்சரித்தபடி 
கிணற்றடியில் நீராடிக் கொண்டிர்ந்தார் 
குருக்கர் 

அர்ச்சனைப் பூக்கள் 
அபிஷேகப் பொருட்களுமாய் 
 விடியாத வீதியில் நடைதுறக்க
அவசரமாய்

ஆலய 
மணியோசையில் சிதறிப் பறந்தது 
கோபுரத்தில் உறங்கியிருந்த 
புறாக்கள் 

கிரிகைகளை 
முடித்து குருக்கள் நடைதிறக்க 
 பக்தி பரவேசமுமாய் பக்த 
கூட்டங்கள் 

குறையுடன் 
நிற்கும் பக்த மனங்களில்
கடக்ஷமாய் காட்சியளித்தார் 
கடவுள் 

தீப ஆராதனையை 
கண்ணில் தொட்டும் பொட்டுதொட்டும்
அகமுணர்ந்து தொழுதார்கள் 
 வாடிக்கைப் பக்தர்கள்

உச்சுக்கொட்டியும் 
கன்னத்தில் போட்டபடியும் 
வாசலிலே தொழுதார்கள் அவசரமாய் 
எங்கோ புறப்பட்டு செல்வகர்கள் 

வெளியே 
வாசலோரத்தில் பூகெட்டும் பெண் 
தேங்காய் விற்கும் மூதாட்டி 
செருப்பிற்கு காவலிருக்கும் பையன் 

கருவேலம் 
நடை அடைத்தபின் 
 திரைமறைவில் வழிபட்டார்கள் 
நேரம் தாழ்ந்து வந்தகர்கள் 

ஆசை  நிறைவேற 
அங்க அடியென கோவிலை சுற்றி 
சுயகாணிக்கை வழிபாட்டில் 
 ஆண்களும் பெண்களும் 

எண்ணம்
நிறைவேறிய சந்தோசத்தில்
ஆவேசமாய் தேங்காய் உடைக்கும்
ஏழைப்  பக்தன் 

ஜென்மநாள்
பாவப்பட்ட ஏழைகளின் பசிக்கு
அன்னம் உபசரித்துக் கொண்டிருந்தான்
பணக்கார பக்தன்

சாமியை 
தொழும் அப்பா அம்மா 
இருவரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி 
இடுப்பில் கைகுழந்த 

விழியடைத்து
கண்ணீர் மல்க தொழுதாள்
மணமாகி பத்தாண்டு கழிந்தும் 
கருவறை குளிராத பெண் 

கடவுளின் 
சன்னதியில் குங்குமம் இருந்தும் 
திருநீர் பூசினாள் தாலி இழந்த 
கன்னி விதவை 

மோதியோர் 
இல்லத்திற்குள் எட்டி உதைத்த 
பிள்ளைகளின்  நலனுக்காக பிராத்திக்கும் 
தாய் 

நலம்குன்றிய 
உறவுகளுக்காக நட்புக்காக 
எத்தனயோ மனிதர்களின் பிராத்தனை 
சன்னதிதரையில் கண்ணீர் துளிகள் 

சிந்தனையை 
சிதறவிட்டு தொழுதுகொண்டிருந்தான் 
புதுச்செருப்பை வெளியே 
விட்டுவந்தவன் 


அகமுணர்ந்து
தரிசனத்தை சலனப்படுத்துகிறது 
சன்னதியிலும் அனைத்துவைக்கபடாத 
கைபேசி

தேர்வில் தேர ,வேலைகிடைக்க 
காதல் கைகூட ,வியாபாரம் பெருக 
நல்ல மணவாழ்க்கை அமைய 
 பேரம் பேசுபவர்கள் 

காதல் 
தசிசனத்திற்காக ஆங்காங்கே 
காத்துக் கிடக்கும் ஒற்றைக் 
காதலர்கள் 

சுய 
துக்கங்களை களைந்து 
மண்டப தூண்களில் சாய்ந்தபடி 
சிலர் மெல்ல அயர்ந்த்தார்கள் 

சில 
பெருசுகள் மௌனமாகவும்
சிறுசுகள் எதையோ பேசிக்கொண்டும் 
குழந்தைகள் விளையாடியும் 

பக்தர்களின் 
அகத்தில் உதிர்ந்த கருணை 
பிச்சைக்க்ரனின் திருவோட்டில் சலசலத்தது 
சில்லறைக்காசுகள் 

கடவுள்  சன்னதியில் 
நிம்மதியை பல உருவங்களில் 
தேடி அலைகிறார்கள் 
மனிதர்கள்

சன்னதிகளில் 
தஞ்சம் புகும்  பக்கதர்கள் 
விதியை பழிக்கிறார்கள் சபிக்கிறார்கள் 
இறைவனை மறந்து 

நான் பாதி நீ பாதி 
மனிதர்களுக்கான இறைவனின் வாக்கு
அர்த்தம் புரியாதவன் இன்னும் பழிக்கிறான் 
இறைவனை 

சுய 
கர்மம் கொண்டு தேடுபவர்களே 
தன்னையும் இறைவனையும் 
உணர்கிறார்கள்

நிறை குறைகளை  
இறைக்கிச் செல்லும்  பக்கதர்கள் 
பாரங்களை சுமந்துகொண்டு சனந்தியில் 
கடவுள்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...