Thursday, March 1, 2012

மரணத்தின் வாசணை




நாற்காலி 
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள் 
உடல் அசைவிற்காக நடைபழகும் 
மாலைப் பொழுது 

அந்த வீதியில் 
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி 
தனக்குள்ளே பேசிக்கொண்டு 
 ஒருவன் 

கவனம் சிதறி 
பாதங்கள் பாதை மாற 
சற்றென பயமுறுத்திச் சென்றது 
எதிரே சீறிவந்த வாகனம் 

ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி 
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள 
மௌனமானது இதழ்கள் 

படபடவென 
இரட்டிப்பாய் துடித்தது 
நிலை தடுமாறி திகைத்து போன 
இதயம் 

சிலிர்ந்த 
ரோமமும் அதனிடையே  கசியும் 
வியர்வைத் துளியுமாய் 
மிரண்டு நின்றது விழிகள் 

நூல் இழை 
உரசலின் இடைவெளியில் 
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது 
ஆன்மா 

திரும்பியபடி 
பெரும் சத்தத்தில் திட்டினான் 
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட 
வாகனஓட்டி 

அவ்வீதியில் 
உலவிக் கொண்டிருந்த 
அறிமுகமில்லாத மனிதர்களும் 
அக்கறையுடன் திட்டினார்கள் 

மரணத்தை 
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும் 
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள் 

நிலையுணர்ந்து 
பிழை உணர்ந்து 
வார்த்தைகளற்று எதிர்பற்று 
மௌனமாய் அவன் 
  
அவனின் 
சிந்தனையயும் எண்ணத்தையும் 
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது 
அந்த இடம் 

அங்கே 
அந்த இடத்தை சுற்றி 
நிழலாடிக் கொண்டிருந்தது 
வாழ்கையின் நம்பிக்கைகள் 

சுய 
பிழை உணர்ந்தவனின் 
விழிகளின் ஓரத்தில் கசிந்தது 
கண்ணீர்த் துளிகள்
  
உதிர்ந்த 
கண்ணீர்த் துளிகளில் 
ஆன்மா பதிவு செய்தது 
அவர்களுக்கான நன்றியை 

நடைபயணத்தை 
பாதியில் முறித்துக்கொண்டு 
கவனத்தோடு திரும்பி நடந்தான்  
வீடு வரை 

கவனங்கள் 
சிதறுகையில் அச்சிதருதலில் 
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின் 
வாழ்க்கை 


8 comments:

  1. kavithai romba superaa irukku annaa !

    ReplyDelete
  2. உண்மைதான்... கவிதை பேசுது

    ReplyDelete
  3. unmaithaan!
    sitharuthu vaazhkai!

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    ஒரு சிறு லேசான கவனச் சிதறல் பல்லாண்டு சேகரிப்பை
    பல விஷயங்க்களில் நொறுக்கிவிட்டுப் போவதை
    மிக அழகாக எச்சரித்துப் போகும் பதிவு அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நூல் இழை
    உரசலின் இடைவெளியில்
    மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
    ஆன்மா // பயணங்களின் பட பிடிப்பு எல்லோரும் உணர்ந்த தருணங்களை உணர்வு பூர்வமாய் உணர்த்துகிறது வரிகள் முடிவில் மெய் கொஞ்சம் சிலிர்த்துத்தான் போனது ........ அருமை

    ReplyDelete
  6. கோவை மு சரளாMarch 12, 2012 at 11:11 AM

    நூல் இழை
    உரசலின் இடைவெளியில்
    மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
    ஆன்மா // பயணங்களின் பட பிடிப்பு எல்லோரும் உணர்ந்த தருணங்களை உணர்வு பூர்வமாய் உணர்த்துகிறது வரிகள் முடிவில் மெய் கொஞ்சம் சிலிர்த்துத்தான் போனது ........ அருமை

    ReplyDelete
  7. நடைப் பயுற்சியின் போது எனக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதுண்டு சா இராமாநுசம்

    ReplyDelete
  8. அங்கே
    அந்த இடத்தை சுற்றி
    நிழலாடிக் கொண்டிருந்தது
    வாழ்கையின் நம்பிக்கைகள் ஃஃஃ

    இப்படித்தான் சொந்தமே
    இந்த நம்பிக்கைகளும் அவ்வப்போது தோன்றும் சாவின் வாடைகளும் தான் வாழ்தலை பெறுமதியாக்குகிறது சொந்தமே!வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...