Monday, March 5, 2012

இல்ல(அ)றம்




தவறுதலாய்  
சொல்லைக்  கொட்டிவிட்டு 
அள்ளவும் முடியாமல் தத்தளிக்கிறது 
எத்தனையோ இதழ்கள் 


கடுப்பில் 
வெறுப்பை கக்கிவிட்டு 
நெருப்புக் கனலில் நித்தம் வதைபடும் 
 இதயங்கள் 

நியா நானா 
காழ்ப்பு தர்கங்களில்
 எங்கோ  அவிழ்ந்து விழுகிறது 
மண முடிச்சுக்கள் 


சன்னதியில் 
உரைத்த வாக்குறிதிகளை 
வாழ்கையில் உடைப்பவர்கள் வாழ்கிறார்கள் 
தடம் புரண்டு 


காதல் 
வாழ்கையின் நிரந்த உணவு 
காமம் ருசிசேற்கும் அறுசுவைகள் 
அளவில் சேர் நடுநிலையை 


அவனுக்கு நீ 
உனக்கு அவன் ஆடை 
தாம்பத்தியத்தின் அந்தரங்கம்  மூடுதல் 
இல்லற அழகு 

மண,
வாழ்கையில் வெற்றிகண்டேன்
மனசாட்சியை கொன்று புதைத்தவர்களின்
பொய்யுரைப்பு


அறுவதாண்டு
 இல்லற வாழ்கையை ருசித்தவர்களுக்கும் 
அகத்தில் தேங்கி இருப்பதுண்டு 
முழுமையடையாத ஆசைகள்


இல்லறத்தில் 
பக்குவப்படும் மனங்கள் 
முழுமையை உணர்வதாய் 
பாவிக்கிறது 


அவனை(ளை )
புரிந்தேன் உணர்ந்தேன் 
எத்தனையோ பொய் பேச்சுக்கள் 
புரிதலுக்கு மரணம் இல்லை

மணப் பள்ளியில் 
மனதை கல் கற்றலின் தக 
வாழ்கையில் உயர்ந்து நில் 
 இறை மந்திரம் 


பந்தம் 
இறைவன் கட்டும் முடிச்சு 
மனிதன் அதை அவிழ்க்கையில் 
புரந்தள்ளப்டுகிறான் இறைவன்


தித்திக்கும் 
அமிர்தமே இல்லறம் 
வாழ்கையை வாழ்ந்து கொண்டே 
சுவையுங்கள் 





6 comments:

  1. இன்றைக்கு இருக்கும் இருப்பை கவியாதையாக்கியுள்ளீர் சியபனவை சிறப்பான வரிகள் காதலில் நீயா நானா என்ற போக்கு பிழையானதே என கூறும் விதமும் நடைமுறையை பின்பற்ற வேண்டிய செயலையும் அழகாக படம் பிடிக்கிறது பாராட்டுகள் தொடருங்கள்...

    ReplyDelete
  2. ayyagoo enna annaa ippudi ellam payamuruththuringool....


    supeerunga annaa unmaiyum athuthanee..


    kavithai super

    ReplyDelete
  3. //வாழ்கையை வாழ்ந்து கொண்டே
    சுவையுங்கள்//

    நச் வரிகள்

    ReplyDelete
  4. இன்றைய இல்லற வாழ்வின் அசுறுத்தலகளைமிக அழகாகச் சொல்லி
    அதற்கான தீர்வை இறுதி வரியில் சொல்லிப் போனவிதம் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...