Tuesday, March 6, 2012

மழைபெய்த அந்த ராத்திரி
வெளியில் 
சோவென மழை பெய்துகொண்டிருந்தது 
கொஞ்சம் கோபத்தில  காற்றுவீச 
 சத்தமிட்டது   மரம் செடிகள் 


மண்ணோட 
கீறலை  ,வேதனையை ,எச்சங்களை 
துடைத்துக் கொண்டு ஓடுது 
மழைத்தண்ணி 


நல்ல மின்வெட்டு 
ஆறுமணிக்கே அமந்துபோச்சு  கரண்ட் 
கொய்யினு அட்டக்கெசமா
ஊர் தெருக்கோடிகள்


 எதிர்வீட்டில் 
ஓயாமல் அழுதுகொண்டிருந்தது 
இடி சத்தத்தில் பயந்து எழுந்த 
 பச்சக்  குழந்தை 


அரிசி தின்னா என்ன
காத்தால கல்யாணம் ராத்திரி மழை 
கொடுத்து வச்ச மகராசி 
நாலாவது வீட்டுப் பொண்ணு 


நேத்துதான் 
லீவுல வந்திருக்கானாம் அவபுருஷன் 
நடுராத்திரி வரைக்கும் நீண்டுச்சு 
பக்கத்து வீட்டில் பேச்சு சத்தம் 


உறங்கிய 
தம்புள்ளையை எம்பாயில போட்டுவிட்டு 
கதவ சக்குன்னு தாழ் போட்டாள்
அண்ணன் பொண்டாட்டி 


பக்கத்துப் பாயில் 
குறட்டை சத்தம் எழுப்பி 
போர்வைக்குள் சுருண்டு உறங்கும் 
அம்மா 


தீயில விழுந்த 
மண் புழுவாட்டம் 
உரக்கப் பாயில் துடிதுடிக்குது 
என் உசிரு 


சன்னலோரமா 
வந்த ஊதாக்காதில 
உடம்பு சக்குன்னு செலிர்க்க 
கசகசத்தது மேலாடை


நடு ஜாமத்திலும் 
உறங்காம முளிச்சிருக்கு 
கடிவாளம் இல்லாமல் ஊசலாடும் 
மனசு 


ஆறுமாசத்தில 
கெட்டிய புருஷன் பாடையேற 
பால் சொம்புக்குள் விழுந்தது 
மஞ்சள் காயாத தாலி 


உணர்ச்சிய 
உசுப்பேத்தி விட்டுட்டு 
அந்த நெனப்ப கொடுத்திட்டு 
போயிட்டான் படுபாவி


அணைஞ்ச விளக்க 
பத்த வைக்கறதுக்கு ஏனோ 
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க 
வீட்டு மூத்தவங்க 


நித்தம் 
பத்திய சாப்பாடு சாபிட்டும் 
உசிரக் கொல்லும் வயசுநோய் 
சீழ்பிடிச்சு உடம்பில் 

கொட்டும் 
மழையில நனைஞ்சா 
உடபுச்சூடு என்னமோ கரையும் 
மிச்சமா வயசு பசிமட்டும்


அழுத 
கண்ணீரை ஏந்திய தலையணையில் 
உப்புப் பொரிந்து நாறுது 
கொச்சை வாசம் 


காரியம் முடிஞ்சிருச்சு 
தாலியும் கீழ இறங்கிருச்சு 
உசிருள்ள நானோ நித்தம் 
செத்துக்கிட்டு 


விடிஞ்சிருச்சு 
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை 5 comments:

 1. kavithai arumai annaa.

  ReplyDelete
 2. விதவைனாலும் அவளும் பெண்தானே...உணர்ச்சி கவிதை படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. kalangiyathu
  kankal!

  unarchiyudan sollideenga!

  ReplyDelete
 4. இளம்விதவையின் மனப் புழுக்கத்தை
  மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும் பதிவு
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. விதவையின் உணர்வை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...