Tuesday, March 13, 2012

அந்த திருக்கோவில்
வான் முகத்தில் 
படிந்திருந்த  இருளை 
மெல்ல மெல்ல துடைத்தது
கதிரொளிக் குழந்தைகள் 

அன்ன நடையிடும் 
மேகங்களுக்கு இடையே 
ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது 
 மூன்றாம் பிறை 

அதிகாலை 
பனிமூட்டங்களை அங்கும் இங்குமாய் 
அலைக்களித்துக்   கொண்டிருந்தது 
வீதியில் சுற்றும் காற்று 

சுப்ரபாதமும் 
சந்தனதிரி சாம்பராணி புகைகளின் 
நறுமணங்கள்   எழுப்பியது
அக்ரகார வீதியை 

தண்ணீர்தெளித்து
அடித்து பெருக்கிய முற்றத்தில் 
மங்களகராமாய் மலர்ந்தது 
பலவண்ணக் கோலங்கள் 

ஸ்லோகத்தை 
இதழில் மெல்ல உச்சரித்தபடி 
கிணற்றடியில் நீராடிக் கொண்டிர்ந்தார் 
குருக்கர் 

அர்ச்சனைப் பூக்கள் 
அபிஷேகப் பொருட்களுமாய் 
 விடியாத வீதியில் நடைதுறக்க
அவசரமாய்

ஆலய 
மணியோசையில் சிதறிப் பறந்தது 
கோபுரத்தில் உறங்கியிருந்த 
புறாக்கள் 

கிரிகைகளை 
முடித்து குருக்கள் நடைதிறக்க 
 பக்தி பரவேசமுமாய் பக்த 
கூட்டங்கள் 

குறையுடன் 
நிற்கும் பக்த மனங்களில்
கடக்ஷமாய் காட்சியளித்தார் 
கடவுள் 

தீப ஆராதனையை 
கண்ணில் தொட்டும் பொட்டுதொட்டும்
அகமுணர்ந்து தொழுதார்கள் 
 வாடிக்கைப் பக்தர்கள்

உச்சுக்கொட்டியும் 
கன்னத்தில் போட்டபடியும் 
வாசலிலே தொழுதார்கள் அவசரமாய் 
எங்கோ புறப்பட்டு செல்வகர்கள் 

வெளியே 
வாசலோரத்தில் பூகெட்டும் பெண் 
தேங்காய் விற்கும் மூதாட்டி 
செருப்பிற்கு காவலிருக்கும் பையன் 

கருவேலம் 
நடை அடைத்தபின் 
 திரைமறைவில் வழிபட்டார்கள் 
நேரம் தாழ்ந்து வந்தகர்கள் 

ஆசை  நிறைவேற 
அங்க அடியென கோவிலை சுற்றி 
சுயகாணிக்கை வழிபாட்டில் 
 ஆண்களும் பெண்களும் 

எண்ணம்
நிறைவேறிய சந்தோசத்தில்
ஆவேசமாய் தேங்காய் உடைக்கும்
ஏழைப்  பக்தன் 

ஜென்மநாள்
பாவப்பட்ட ஏழைகளின் பசிக்கு
அன்னம் உபசரித்துக் கொண்டிருந்தான்
பணக்கார பக்தன்

சாமியை 
தொழும் அப்பா அம்மா 
இருவரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி 
இடுப்பில் கைகுழந்த 

விழியடைத்து
கண்ணீர் மல்க தொழுதாள்
மணமாகி பத்தாண்டு கழிந்தும் 
கருவறை குளிராத பெண் 

கடவுளின் 
சன்னதியில் குங்குமம் இருந்தும் 
திருநீர் பூசினாள் தாலி இழந்த 
கன்னி விதவை 

மோதியோர் 
இல்லத்திற்குள் எட்டி உதைத்த 
பிள்ளைகளின்  நலனுக்காக பிராத்திக்கும் 
தாய் 

நலம்குன்றிய 
உறவுகளுக்காக நட்புக்காக 
எத்தனயோ மனிதர்களின் பிராத்தனை 
சன்னதிதரையில் கண்ணீர் துளிகள் 

சிந்தனையை 
சிதறவிட்டு தொழுதுகொண்டிருந்தான் 
புதுச்செருப்பை வெளியே 
விட்டுவந்தவன் 


அகமுணர்ந்து
தரிசனத்தை சலனப்படுத்துகிறது 
சன்னதியிலும் அனைத்துவைக்கபடாத 
கைபேசி

தேர்வில் தேர ,வேலைகிடைக்க 
காதல் கைகூட ,வியாபாரம் பெருக 
நல்ல மணவாழ்க்கை அமைய 
 பேரம் பேசுபவர்கள் 

காதல் 
தசிசனத்திற்காக ஆங்காங்கே 
காத்துக் கிடக்கும் ஒற்றைக் 
காதலர்கள் 

சுய 
துக்கங்களை களைந்து 
மண்டப தூண்களில் சாய்ந்தபடி 
சிலர் மெல்ல அயர்ந்த்தார்கள் 

சில 
பெருசுகள் மௌனமாகவும்
சிறுசுகள் எதையோ பேசிக்கொண்டும் 
குழந்தைகள் விளையாடியும் 

பக்தர்களின் 
அகத்தில் உதிர்ந்த கருணை 
பிச்சைக்க்ரனின் திருவோட்டில் சலசலத்தது 
சில்லறைக்காசுகள் 

கடவுள்  சன்னதியில் 
நிம்மதியை பல உருவங்களில் 
தேடி அலைகிறார்கள் 
மனிதர்கள்

சன்னதிகளில் 
தஞ்சம் புகும்  பக்கதர்கள் 
விதியை பழிக்கிறார்கள் சபிக்கிறார்கள் 
இறைவனை மறந்து 

நான் பாதி நீ பாதி 
மனிதர்களுக்கான இறைவனின் வாக்கு
அர்த்தம் புரியாதவன் இன்னும் பழிக்கிறான் 
இறைவனை 

சுய 
கர்மம் கொண்டு தேடுபவர்களே 
தன்னையும் இறைவனையும் 
உணர்கிறார்கள்

நிறை குறைகளை  
இறைக்கிச் செல்லும்  பக்கதர்கள் 
பாரங்களை சுமந்துகொண்டு சனந்தியில் 
கடவுள்


4 comments:

 1. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 2. ரொம்ப சுபேரா இருக்கு அண்ணா ...இங்கயும் படிச்சேன் முன்னாடியே தோட்டத்திலே படிச்சிப் போட்டேன் ...

  ReplyDelete
 3. வணக்கம் அன்பின் தோழரே ..
  நேற்று தான் உங்களின் இந்த அருமை படைப்பை
  தோட்டத்தில் படித்தேன் ,.

  ஒவ்வொரு விடயத்தையும் சுற்றி நடக்கும் சூழல்களையும் எப்படி உள் வாங்குகிரிர்கள் என்பது இந்த கவிதையின் மூலம் வெளிச்சமாகிறது எனக்கு ,... உணர்வுகளை உரைக்கும் உன்னத படைப்பு .. என் பாராட்டுக்கள் தோழரே

  ReplyDelete
 4. சிந்தனையை
  சிதறவிட்டு தொழுதுகொண்டிருந்தான்
  புதுச்செருப்பை வெளியே
  விட்டுவந்தவன் //அருமைபாராட்டுக்கள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...