Thursday, March 15, 2012

பள்ளிகூட கலாட்டக்கள்
பள்ளி 
அனுபங்களை எழுதுங்கள் 
தங்கை கலையின் 
அன்பு வேண்டுகோளுக்காக 
இப்பதிவு 

கல்வி 
அறியாமை இருளை விரட்டும் 
ஒளிச் சுடர் 
இதுவரையிலான வாழ்கையில் உணர்ந்த 
உண்மையும் கூட 

வெளிச்சத்தின் 
வீரியம் சிலருக்கு
பிரகாசமாக மங்கலாக ஒளிரும் 
அது கல்வியின்  தரம்  

அந்த 
கல்வியை முதன்முதலில்  தந்தது 
தமிழ்த்தாயின் மூற்றாம் பிள்ளையான 
மலையாளம் 

தாய் தந்தை 
தமிழர்கள் என்பதால் 
பாண்டி என்று வேற்பிரித்து
ஏளனமாய் மலையாளசகாக்கள் அழைக்கையில் 
பிஞ்சு வயசிலேயே உணர்ந்தேன்
வேற்றுமையின் வன்மத்தை 

கேலிச்சினமாய்
எத்தனையோ தருணங்களில் 
தனித்து நின்று அழுகையில் 
கண்ணீர் துடைக்கும் ஆசிரியை 
பெயர் ஞாபகத்தில் இல்லை 
உருவமோ அழியாமல் இன்னும் 
மனசில் 

வகுப்பிலும் 
விளையாட்டுத் திடலிலும் 
எனக்கும் அண்ணனுக்கும் நண்பனாய் 
தனிமை மட்டும் 

ஞாயிறுகளில் 
கடலோரத்தில் சிறு நண்டுபிடித்தும் 
அலைகளில் பாதம் நனைத்தவிளையாட்டும் 
இன்றும் மனசில் ததும்பும் 
குட்டி நினைவுகள் 

நான்காண்டு 
நீண்ட பள்ளிப்படிப்பில் 
மனசில் கல்வியை தவிர வேறெதுவும் 
ஆழமாய் பதியவில்லை 

சற்றென 
ஒரு இரவில் வேரோடுபிடிங்கி 
உறக்கத்திலேயே நட்டார்கள் 
ஈரத் தமிழ் மண்ணில் 

இடம் 
மொழி 
மனிதர்கள் எல்லாம் புதுமையாய் 
பிடுங்கி நடப்பட்ட செடியைப் போல் 
நாங்கள் 

திரிகூடபுரம்  முகைதீன் ஆண்டவர் முதல் நிலை பள்ளி 

ஐந்தாம் 
வகுப்பின் முதல் நாள் 
மொழியில் விலகிய சகாக்கள் 
சிலநாள் நீண்ட கேலிபேச்சுக்கள்
என்றோ ஓர்நாள் இறந்துவிட 
செய்கை பேச்சுக்களில் நல்ல 
நண்பர்களாய்  

 நட்ட செடிக்கு 
ஊற்றிய  நீரில் அன்பும் நட்பும் 
வேர்கள் மண்ணை இருகப்பிடிக்க 
ஓங்கி வளர்ந்தது தமிழும் நட்பும் 

ஓராண்டு 
பள்ளிப்படிப்பில் எத்தனையே 
மறக்க முடியாத நிகழ்வுகள் 
அதில் சிலவை இதோ 

வெள்ளி 
எங்களுக்கு விடுமுறை என்பதால் 
ஞாயிறில்  பள்ளி இருக்கும் 
துலைகாட்சியில் படமும் இருக்கும் 
அன்றுதான் சில சகாக்களுக்கு 
வயிற்றுவலியும் வரும் 

திங்களன்று 
வகுப்பறை கரும்பலகையில் எழுதியிருக்கும் 
பஞ்சாயத்து தொலைகாட்சியில் 
படம்பார்த்தவர்களின் பெயர்கள் 

அடிவாங்கும் 
படலம் அரங்கேற 
சிரிப்பாலும் அழுகையாலும் களைகெட்டும்
வகுப்பு 

எதோ 
ஒரு கேள்விற்கு 
பதில் தெரியாமல் ஆண் சகாக்கள் 
பெண் சகாக்களிடம் கொட்டுவாங்கியது 
இன்னும் மாயாத நாணம் 

நொண்டி 
ஸ்கிப்பிங் 
கண்ணாம்பூச்சி 
பெண் சகாகளுடனான 
விளையாட்டுக்கள் 

கோலி
கிட்டிப் பிள்ளை 
கொங்கரி முக்கான் 
கிரிக்கெட் 
பம்பரம் 
ஆண் சகாக்களுடனான 
ஆக்ரோஷ விளையாட்டுக்கள் 

நட்பெனும் 
வெள்ளைப் பாலில் 
....நஞ்சு கலக்காத பால்யம் 
வாழ்கையின் வரபிரசாதம் 

நடுநிலை 
உயர்நிலை 
கல்வியை கற்றுத் தந்தது 
மசூது தைக்கா நடுநிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி (கடையநல்லூர் )

நிறைய 
புதிய நண்பர்கள் 
எண்ணிலடங்கா அனுபவங்கள் 
எழுத முயன்றால் நாட்கள் நீளும் 

தமிழை 
தமிழாய் கற்றதும் 
எனக்குள் நல் கலைஞனை 
உணரச் செய்ததும் இப்பள்ளியே

காலை 
தமிழ் வாழ்த்து அணிவகுப்பில் 
வரததவர்களுக்கும் வந்தும் நையாண்டி செய்பவர்க்கும் 
வகுப்பறையில் பயமுறுத்தும் 
பிரம்படி 

ஆசிரியர் 
இல்லாத தருணத்தில் 
பேசக்கூடாது என்ற ஆடரும் 
அதை கவனிக்கும் தலைமை மாணவனும் 
கரும்பலகையில் பொறிக்கப்படும் 
தவறிப் பேசுகிறவனின் பெயர்  

 வரிசையாய் எழுப்பி 
வினாக்களுக்கு பதில் கேட்க 
ஆர்வமாய் பதில்சொல்லும் சகாக்கள் 
திரு திருவென முழிக்கும் படிக்காத சகாக்கள் 
சுவராசியமான தருணங்கள் 

 வீட்டுப்பாடம் 
 எழுதிய நோட்டுக்களை 
மேஜையில் அடுக்கச்சொல்ல
அடிவயிற்றில் புளியை கரைக்கும் 
எழுதாதவர்களுக்கு 

தேர்வு 
மேஜைக்கிடையில் 
நண்பர்களுக்கு பிட்டனுப்பும் சகாக்கள் 
அதை காட்டிக்கொடுத்து நல்லபேர்வாங்கும்
எட்டப்பர்கள் 

எதையோ 
கிறுக்க அதை படக்கென்று பறித்து 
ஆசிரியரிடம் கொடுத்த சகாக்கள் 
பிற பாடஆசிரியர்கள் திட்டினாலும் 
அதை கவிதை என்று முதன்முதலில் பாராட்டிய 
தமிழ் ஆசிரியர் 

அன்று 
அசுத்தம் கலக்காத ஊரணியில் 
குளித்து கும்மாளம் செய்வதும் 
அட்டக் குளத்தில் மீன்பிடிப்பதும்
கும்மாளக் கூத்து 

பகுப்பை  கட்டடித்து 
மகராஜா திரையரங்கில் 
வீர ரஜினி படம் பார்த்ததும் 
காட்டிக் கொடுத்த ஒருவனால் 
வீட்டிலும் பள்ளியிலும் அடிவாங்கியது 
மாறாத வடு 

எங்கள் 
ஊரில் நிற்காமல் செல்லும் 
பாண்டியன் பேரூந்தை 
மாணவர்கள் கூடி நிறுத்தியதும் 
ஊர் கூடி  பின் போலீஸ்வந்ததும்
படபடத்த நிமிஷங்கள் 

படிக்கும்போதே 
நூலகத்தோடு உண்டான உறவு 
 நிறைய  கற்றுக்கொடுத்தது 
இன்றும் கற்றுக்கொடுக்கிறது 

அகத்தில் 
சினிமா மோகம் குடியேறியதால் 
கல்லூரிவரை நீளாமல் மேல்நிலை பள்ளியிலேயே 
படியிறங்கியது படிப்பு 

அன்பை 
உணர்வை 
பொருளை பகிர்ந்துகொள்ள 
கற்றுக் கொடுக்கிறது 
பள்ளிவாழ்க்கை

நட்புக்காக 
வீதியில் சண்டையிட்டதும் 
அது என் ஆளு 
 யாருக்காகவோ சண்டையிட்டு பிரியும் 
பள்ளி நட்புக்களும் 

மீசை 
தளிராத வயசில் 
காதல் கடிதம் எழுதியதும் 
கடித தூதுவனாக சகாக்களும் 
இன்றும் அதை நினைக்கையில் 
வழியுது வெட்கம் 

பள்ளிப் பருவமும் 
பால்ய சுட்டித்தனங்களும் 
ஆழ்மனதில் உறங்கும் அழகிய 
பொக்கிஷம் 

13 comments:

 1. மிக்க அன்பு நன்றிங்க அண்ணா என்னோட அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு ....

  ரொம்ப சேட்டை செய்தவங்க தான் நீங்களும் ...

  ReplyDelete
 2. மீசை
  தளிராத வயசில்
  காதல் கடிதம் எழுதியதும் //////////////

  என்னால நம்பமுடியவில்லை அண்ணா ...நீங்களா ....ஆத்தாடி ...mmmmmmmmmmmmmmmmmmmmmmmm

  ReplyDelete
 3. அண்ணா நாங்களும் பசங்களை கொட்டுப் போடுவோம் ..

  kanakku டீச்சர் kotta vaichanga ..girls ellam boys yai kottanum எண்டு

  பசங்களை கொட்டுரதுனா ஜாலி யா இருக்கும் haa haaa .....

  ReplyDelete
 4. உங்க பள்ளி அனுபவம் சுபேரா இருந்தது அண்ணா ..எங்களையும் பழைய நினைவுக்கு அழைச்சிட்டுப் போய்டுச்சி ...


  (ஹீடிங் எனக்கு தெரியல ..ஹீடிங் பாருங்க அண்ணா என்னோட ச்ய்ச்டமில் பிரச்சனையா எண்டு எனக்குத் தெரியல )

  ReplyDelete
 5. ம..மசுதைக்கா ,அட்டக் குளம் கடையநல்லூர் மொத்ததுல எந்த ஊரு நீங்க ?இடைகால்தான் என் ஊரு.எல்லோருக்குமே பள்ளிப் பருவம்தான் மறக்க முடியாத ஒன்னு.உங்களுக்கும்தான்னு நினைக்றேன் .அழகான ரசித்துப் படிக்கக் கூடிய பதிவு.என் பள்ளி நினைவும் வந்துவிட்டது .

  ReplyDelete
 6. @
  உன் அபிற்கு மிக்க நன்றி கலை

  ReplyDelete
 7. @தென்காசித் தமிழ்ப் பைங்கிளி

  உங்களுக்கு இடைகால் என்பதை வலைச்சர அறிமுகத்தில் அறிந்தேன் தோழி

  எனக்கு சொக்கம்பட்டி (திரிகூடபுரம் )

  உங்கள் வருகைக்கும் கருத்திரும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 8. பொக்கிசத்தை பகிர்ந்த விதம்
  மனம் கவரும்படியாகவும்
  வித்தியாசமாகவும் இருந்தது
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. @Ramani

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 10. உங்களின் மொத்த பள்ளி வாழ்வினையும் சுவை பட கூறி இருக்கின்றீர் தோழரே ...
  ரசித்தேன் ..நன்றி .. உங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள்

  ReplyDelete
 11. @அரசன் சே

  மிக்க நன்றி அரசன்

  ReplyDelete
 12. //நண்பர்களுக்கு பிட்டனுப்பும் சகாக்கள்
  அதை காட்டிக்கொடுத்து நல்லபேர் வாங்கும் எட்டப்பர்கள் //

  ஆஹா, எட்டப்பர்கள் எங்கேயும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  பள்ளி நாட்களையும்,பால்ய சுவை நினைவுகளையும் பத்தி பத்தியாய் அடுக்கி அழகாக தொகுத்துள்ளீர்கள் செய்யது.

  ( இந்த பக்கத்திற்கு ”பின் தொடர்பவர்கள்” அல்லது “பதிவுகளை ஈ-மெயில்” மூலம் பெறுதல் வசதிகளை இணைக்கலாமே, நண்பா!)

  ReplyDelete
 13. @சத்ரியன்

  வருகைக்கும்
  கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா

  நீங்கள் சொன்னதை சரி பார்க்கிறேன்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...