Tuesday, March 20, 2012

ஊடல் சடுகுடு




என்னை 
பலமுறை திட்டி இருக்கிறாய் 
ஒருமுறைகூட சொன்னதில்லை 
"போடா என்று 

சபையில் 
"ங்க மரியாதையை 
நீ தூக்கி நிறுத்துகிறாய் 

தனிமையில் 
"ல்லம்...லூசு...என்னனமோ 
உன் வரம்புமீறல் ம்ம்ம் ...
சொல்ல  கூசுது

பேச்சுக்கிடையில் 
எம்விழியை உற்று நோக்கி 
என்னில் கள்ளம் தேடுகிறது 
உன் கள்ளப்பார்வை 

ஒற்றை 
சொல்லில்  உன் 
இஷ்டத்தை சொல் என்கிறேன் 
நூலிழையில் விடர்க்கிறாய் ஒட்டிப்பிடித்த
இதழ் சுருக்குகளை 

கோபத்தில் 
மட்டி கடித்து 
நீ உள்வாங்கிவிடும்  மூச்சில் 
ம்ம்ம்... வெட்கை

நான் 
நீ இட்ட முத்தத்தின் 
கணக்கை சேகரிக்கிறேன் 
உன் கஞ்சத்தனத்தை காட்ட 

நீ 
விரல்மடக்கி கணக்கு சொல்கிறாய் 
உன்னுடன் சண்டையிட்ட 
தருணங்களை


சின்ன சின்ன 
சீண்டல்கள் மோதல்கள் 
நம் கோபத்திற்கு ஒருநாள் மட்டும்  
ஆயுசு 

11 comments:

  1. ஊடல் சடுகுடு அருமை
    தொடர்ந்து விளையாட வாழ்த்துக்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கோபத்திற்கு ஒருநாள் மட்டும்
    ஆயுசு ..

    அருமை அருமை..

    ஊடலில்லா இல்வாழ்க்கை
    உப்பில்லா உணவு..

    ஊடல் மட்டுமே நிறைந்த வாழ்க்கை
    உப்பில் உணவு..

    ReplyDelete
  3. இது தான் உண்மையான இல்லறம்

    ReplyDelete
  4. @Ramani

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. @guna thamizh

    உண்மைதான் தோழரே
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  6. @மனசாட்சி

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிநண்பா

    ReplyDelete
  7. கோபத்திற்கு ஆயுள் குறைவாகவே இருக்கட்டும் . அழகு .

    ReplyDelete
  8. கோபத்திற்கு ஆயுள் குறைவாகவே இருக்கட்டும் . அழகு .

    ReplyDelete
  9. @சசிகலா
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  10. நிஜங்கள் நிழலாய் கண் முன்

    வந்து செல்கிறது உங்களின் வரிகளினூடே .........

    அனுபவ நுணுக்கங்கள்

    மயங்க செய்யும் வரிகள்

    அற்புதம் .............

    ReplyDelete
  11. @கோவை மு.சரளா

    மிக்க நன்றி கவிதாயினி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...