Thursday, March 22, 2012

இருட்டு முனங்கல்கள்
விண்ணில் 
நிலவின் மரணம் 
துக்கத்தில் விண்மீன்கள் 

மங்கிய 
வெட்டங்களையும் இரக்கமின்றி 
தின்று விழுங்கிக்கொண்டிருந்தது 
கருத்த வாவு

ஊரையே 
தன் கருத்த போர்வைக்குள் 
விரித்து மூடிப்போட்டு இருந்தது 
இரவு 

மரங்கள் 
இல்லாத சிமெண்டு தெருவிற்குள் 
வெட்கைக்கு பயந்து நுழையாமல் 
ரோட்டோரமா சுத்திக்கொண்டு 
காற்று 

சாலையில் 
வேகமாக ஓடும் வாகனங்கள் 
சற்றென  ஓடி ஒளிந்துகொள்கிறது 
வெளிச்சம் 

வீதியோர 
கடைகளில் மங்கல் வெட்டம் 
சத்தமாய் அழுதுகொண்டிருந்தது 
சில மோட்டார்கள்

அவ்வப்போது 
எரியும் தெருவிளக்கும் 
நித்த மின்வெட்டால் செயலிழந்து 
அட்டக்கெசமாய் வீதி 

யாரது ..?
சப்தங்களில் வினா எழுப்பி 
அடையாளங்களை பரிமாறக் கொண்டார்கள் 
விளிச்சத்தை கையில் சுமக்காமல் 
வீதில் நடப்பவர்கள் 

ஏழை 
வீட்டு வாசப்படியில் 
கண்ணீர் சிந்தியபடி அழுதுகொண்டிருந்தது 
மெழுகுவத்தி 

அடுத்த 
தெருவிலுள்ள துபாய்காரன் வீட்டில் 
பல்லை இழித்துக்கொண்டிருந்தது
சார்ச் லைட்

ஊரின் 
புதுப் பணக்காரர்களின்  வீடுகளில் 
விலைகொடுத்து அடைத்து வைத்திருக்கிறார்கள் 
இன்வெட்டார் வெளிச்சத்தை 

நிம்மதியாய் உறங்குகிறது 
வீட்டு உபகரண இயந்த்திரங்கள் 
புலம்பிக் கொண்டு வேலைசெய்யும் 
இல்லத்தரசிகள் 

நல்ல அம்மாவசை 
இன்னைக்காவது கரண்டை விடலாம் 
இப்படி கொடுமை செய்றாங்களே புலம்பியபடி 
வீதியில்  யாரோ 

கேபிளுக்கு 
பணமே கொடுக்கக்கூடாது 
சீரியலை நல்லாப்பாத்து எத்தனை நாளாச்சு 
வாசப்படியில் சில பெண்கள் 

அந்த 
ஆட்ச்சிதான் சரி இல்லை 
இந்த ஆட்ச்சியும் இப்படி ஆயிடுச்சே 
மூணாவது அணி வந்தால்தான் 
தலைவிதி மாறும் 

அதர்மத்தை 
தட்டிக் கேட்க துப்பில்லாதவர்கள் 
சத்தம்போட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள் 
டீக் கடையில் 

 இருக்கிறவன் 
இருக்கிறதை  வச்சு சமாளிக்கிறான் 
இல்லாதவன் வீட்டில் தினமும் 
அம்மாவசை 

இருட்டை 

துரத்தி அடிக்க 

மக்கள் மனங்களில் வேண்டும் 

எழுச்சி வெளிச்சம் 25 comments:

 1. இந்த முனங்கல்கள் என்று ஓயுமோ...

  ReplyDelete
 2. அரசின் பொருப்பற்ற தன்மையும்
  மக்களின் மனநிலையும் கவிதையில் அழகாக படம்பிடித்து காட்டப்பட்டிருக்கிறது..

  அழகிய படைப்பு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. //நிம்மதியாய் உறங்குகிறது
  வீட்டு உபகரண இயந்த்திரங்கள்
  புலம்பிக் கொண்டு வேலைசெய்யும்
  இல்லத்தரசிகள் //

  உண்மை நிலை

  எழுச்சிமிகு வரிகள்

  அனைவரின் மன நிலையையும்

  ஒரு பக்கத்தில் அடைத்து கொடுத்திருகிறீர்கள்

  அருமை செய்தாலி............

  ReplyDelete
 4. //நிம்மதியாய் உறங்குகிறது
  வீட்டு உபகரண இயந்த்திரங்கள்
  புலம்பிக் கொண்டு வேலைசெய்யும்
  இல்லத்தரசிகள் //

  உண்மை நிலை

  எழுச்சிமிகு வரிகள்

  அனைவரின் மன நிலையையும்

  ஒரு பக்கத்தில் அடைத்து கொடுத்திருகிறீர்கள்

  அருமை செய்தாலி............

  ReplyDelete
 5. இருட்டை
  துரத்தி அடிக்க
  மக்கள் மனங்களில் வேண்டும்
  எழுச்சி வெளிச்சம்“

  அருமை அருமை செய்தாலி

  ReplyDelete
 6. “மக்கள் மனத்தில் எழுச்சி வெளிச்சம் வேண்டும்“

  நல்ல கருத்து. வாழ்த்துக்கள் செய்தாலி.

  ReplyDelete
 7. ஆமாம் கரண்ட் கட் ரொம்ப பாடாதான் இருக்கு. சரியா வடிச்சிருக்கீங்க கவிதையில்.

  ReplyDelete
 8. @கவிதை வீதி... // சௌந்தர் //

  மிக்க நன்றி கவிஞரே

  ReplyDelete
 9. @கோவை மு.சரளா

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிதாயினி

  ReplyDelete
 10. @கலை

  மிக்க நன்றி கலை

  ReplyDelete
 11. @AROUNA SELVAME

  தங்களின் முதல் வருகைக்கும்
  கருத்திற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 12. @தேனம்மை லெக்ஷ்மணன்

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிதாயினி

  ReplyDelete
 13. ஒளி தேவைபடுவது
  அமாவாசை இரவுக்கல்ல.
  அமாவாசையாகவே மாறி கிடக்கும்
  மக்களின் இருள் மனங்களுக்கே
  என்னும் உரத்த சிந்தனையை,

  மென்மையான சொல்லால் விளக்கிச் சொல்லும் என் நண்பன் செய்யது வின் பொன் கவிதை இது.

  சரியான நாளில்
  பகிரப்பட்டிருக்கும் கவிதை. பாராட்டுக்கள் நண்பா.

  ReplyDelete
 14. மின் வெட்டை மிக‍ அழகாகச் சொன்னீர்கள்!
  அருமை!
  தங்கள் வலை அடிக்கடி திறக்க மறுக்கிறது. கவனிக்க!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. நிம்மதியாய் உறங்குகிறது
  வீட்டு உபகரண இயந்த்திரங்கள்
  புலம்பிக் கொண்டு வேலைசெய்யும்
  இல்லத்தரசிகள் //
  மின்வெட்டை தாக்கிய வரிகள் . இல்லத்தரசிகளின் புலம்பலையும் விட வில்லை . ம்ம்

  ReplyDelete
 16. மின்சாரம்......நாட்டு நடப்பை சொல்லுது

  ReplyDelete
 17. @சத்ரியன்
  உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 18. @புலவர் சா இராமாநுசம்

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 19. @சசிகலா

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 20. @சசிகலா

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 21. @மனசாட்சி

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 22. இன்றைய நாட்டு நடப்பை ஆற்றாமையின் வார்த்தைகள் கொண்டு கவிதையாக்கியிருக்கிறீர்கள்.அருமை !

  ReplyDelete
 23. @ஹேமா

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 24. சொல் வண்ணம் எல்லாம் மிகவும் அருமை அண்ணா வாழ்த்துகள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...