Monday, March 26, 2012

எழுதப்படாத சுவடுகள்
ஒரு அறையில் 
ஒரே குடும்பபாக இருந்தாலும் 
முகம் பார்த்தாலும் உரையாடுவதும் 
மிக மிக அரிது 

உறவுகளுக்காக 
கடல்கடந்து திரவியம் தேடி 
அலையும் எத்தனையோ பறவைகளின் 
வாழ்க்கை இப்படித்தான் 

முன்தினம் 
வார விடுமுறை என்பதால் 
முக சந்திப்பில்  ஐக்கியமாயிருந்தார்கள் 
அறை நண்பர்கள் 

ஒருநண்பர் 
நாட்டு நடப்புக்களை 
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் 
ஊடகத்தில் 

ஜன்னலோரத்தில் 
தன் புதுமனைவியுடன் கைபேசியில் 
நெடுநேரமாய் சப்தமின்றி கொஞ்சியபடி 
 புது மாப்பிளை 

தினமும் 
இல்லை என்றாலும் வாரம் ஒருமுறை 
வழக்கம்போல் மதுபாட்டிலை திறந்து 
முதல் பெக்கை அருந்தத்தொடங்கினார்
மற்றொரு நண்பர் 

ஊடக 
தலைப்புச் செய்தியில் சற்றென 
உயிர்த்தெளுந்த்து பிரபலமான  ஒருவரின்
மரணச்  செய்தி  

அங்க பாருங்க 
 நண்பர் சப்தம் எழுப்ப 
எதையோ வாசித்துக் கொண்டிருந்த என்னையும் 
சலனம் செய்தது 

எல்லா 
ஊடங்களிலும் நிரம்பி வழிந்தபடி 
சற்றுமுன் இறந்தவர் வாழ்ந்த 
வாழ்க்கை குறிப்புக்கள் 

முதுமை பட்டியலுக்குள் 
இடம் பெற்றவர்களின் பெயர்களை
ஒவ்வோற்றாய் அளிக்கிறான்
இறைவன் 

யதார்த்தமாய் 
சொல்லிகொண்டிருந்தார் 
ஊடகத்தை பார்த்தபடி 
நண்பர் 

எதிலோ ஒன்றில் 
பிரபலமான மனிதர்களின் 
ஜனன மரணத்தை ஊருக்கு சொல்கிறது 
பலதரப்பட்ட ஊடகங்கள் 

ஒவ்வொரு நொடிக்கும் 
எங்கோ பிறந்தும் இறந்தும் கொண்டிருக்கிறார்கள் 
எத்தனையோ பிரபலம் இல்லாத 
மனிதர்கள் 

சில பிரபலத்தின் 
ஜனன மரணங்களும் 
அவர்களின் வாழ்கையும் எழுதப்படுகிறது 
கால ஏட்டில் 

ஓசை எழுப்பாமல் 
மௌனமாய் எத்தனையோ கோடி
 சாதாரணப்பட்ட மனிதர்களின் 
மரணங்கள்

இவர்களின் 
மரணத்தைப்  போலவே 
அவர்களின் வாழ்க்கை குறிப்பும் 
கால ஏட்டில் எழுப்படமாலே 


16 comments:

 1. ஓசை எழுப்பாமல்
  மௌனமாய் எத்தனையோ கோடி
  சாதாரணப்பட்ட மனிதர்களின்
  மரணங்கள்

  இவர்களின்
  மரணத்தைப் போலவே
  அவர்களின் வாழ்க்கை குறிப்பும்
  கால ஏட்டில் எழுப்படமாலே //
  அற்ப்புதமான வரிகள் சராசரி மனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல இறப்பும் கவனிப்பார் இன்றியே ....

  ReplyDelete
 2. ம்.... நிதர்சமான உண்மை

  ReplyDelete
 3. ஆரம்ப வரிகளில் குடும்பத்தை பிரிந்து வாழும் வளைகுடா மக்களின் நிலை அப்பட்டமாக சொல்லி உள்ளீர்கள்

  ReplyDelete
 4. இவர்களின்
  மரணத்தைப் போலவே
  அவர்களின் வாழ்க்கை குறிப்பும்
  கால ஏட்டில் எழுப்படமாலே // இன்றைய நடப்பை அழகாக படம் பிடிக்கிறீர் பாராட்டுகள்

  ReplyDelete
 5. annaa eppothum pola suppperaa irukku ...

  kadaisiyaana varigal romba supperaa irukku annaa

  ReplyDelete
 6. @சசிகலா

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி

  ReplyDelete
 7. @மனசாட்சி™

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 8. @மாலதி

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 9. @கலை

  தங்கையின் கருத்திற்கு நன்றி

  ReplyDelete
 10. நான் அடிக்கடி நினைத்து வியக்கும் ஒரு விஷயத்தை
  அருமையானக் கவிதையில் சொல்லி மேலும் என்னை வியக்கவைத்துவிட்டீர்கள். நமக்குத் தெரியாத மரணங்கள் எத்தனை எத்தனை? பிரபலமாய் இருப்பதாலேயே பேசப்படுகின்றன மரணமும், மரணத்தின் பின்னரான நினைவுகளும்.

  \\ஊடக
  தலைப்புச் செய்தியில் சற்றென
  உயிர்த்தெளுந்த்து பிரபலமான ஒருவரின்
  மணச் செய்தி\\

  இந்த இடத்தில் மரணச் செய்தி என்றிருக்கவேண்டுமோ?

  ReplyDelete
 11. @கீதமஞ்சரி

  ஆம் தோழி
  பெரும் எழுத்துச் சொற்பிழை
  கவனிக்கவில்லை

  திருத்திவேட்டேன்
  நன்றிகள்

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 12. ஆஹா.............
  புதிதாக புணரமைக்கப்பட்டதைப் போல
  வசீகர வார்த்தைகளுக்கு வடிவம் தந்து
  தமிழால் தரம் உயர்ந்த கவிதை.
  அருமை அன்பரே

  ReplyDelete
 13. உங்களில் கருத்திற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 14. எத்தனை மனிதர்களின் பிறப்பும் இறப்பும் வரலாற்றில் பதிவாகமால் மறைந்து விடுகிறது என்பதை இவ்வளவு மெல்லிய வரிகளில் ..
  அதற்கு முன் நீங்க விவரித்த அந்த நண்பர்களின் செய்கைகள் தேவையா ?இக்கவிதை உணர்த்தும் கருவுக்கும் அந்த நண்பர்களின் செய்கைகளுக்கும் தொடர்பு இருப்பதாய் எனக்கு உணர்த்தவில்லை .. தவறு இருப்பின் என்னை மன்னிக்கவும் தோழரே .. என் மனதில் பட்டதை வெளிபடுத்திவிட்டேன் ..

  ReplyDelete
 15. @A.R.ராஜகோபாலன்

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 16. @அரசன் சே


  இதில் தவறு ஒன்றும் இல்லை நண்பா
  உரிமையுடன் நீங்கள் சொல்லலா

  இந்த கருவுக்கும் அந்த நிகழ்வுக்கும்
  சம்பந்தாம் இல்லை உண்மையே

  கடந்த வெள்ளி அன்று
  ஊடக நிகழ்வைப்பற்றி
  அறை நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது
  உதித்த எண்ணம் அதை அப்படியே சொல்லவேண்டும் என்று எண்ணி சொன்னேன்

  எழுதும்முன் இப்படி எழுதப் போகிறேன் என்று பகிர்ந்துகொண்டேன்
  அவர்களும் மனப்பூர்வமாக சரி என்றார்கள்

  ஜே .கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தகங்களில்
  அவர் எதையாவது சொல்லும்போது அந்த எண்ணம் உருவாகும் சூழலை விவரிப்பார்
  பின் சொல்லவந்ததை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்வார்
  அது அவருக்கே உரித்த வித்தை

  படக்கென்று ஒன்றை சொல்லுவதைவிட
  அதன் சூழலும் அதன் நிகழ்வுகளையும் சொல்லலாம் என்ற என் சிறு முயற்சி

  உங்களின் அன்பிற்கும் கருத்திற்கும்
  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...