Sunday, April 1, 2012

கறுத்த நாள்

ஹலோ 
அப்பாவுக்கு அப்பாவுக்கு .... 
சீரியஸ் சீக்கிரம் வா உற்றநண்பனின் 
அவசரக் குரல் 

அந்தக் குரல் 
மதியை தட்டி உணர்த்தியது 
இன்று நாளையென கட்டிலில் அவதிப்படும் 
அப்பாவை 

தற்சமயம் 
எடுத்த காரியங்களை உதறிவிட்டு 
தளர்ந்த உடலும்  கொதிக்கும் மனமுமாய் 
வீதியில்  அவன் 

திடீரென 
பொட்டி வெடித்த பெரும்சப்தம் 
நகரசாலையை  சலனம் செய்ய அவசரங்கள் 
மௌனமாக 

அவசர நகரத்தில் 
அவசரமாய் சீறிப்பாயும் சாலையில் 
எதிர்வாகன  வேகத்தில் சிதைபட்டு 
அவன் 

செங்குருதி 
வழிந்தொழுக சிதைந்த உடலில் 
பிடை  பிடைத்துக் கொண்டிருந்தது 
அவன் உயிர் 

பதறிய மனம் 
சற்று  சிந்தனை சிதற 
மரணத்தை நோக்கி வழிதவறி 
உயிரின் பயணம் 

சக்கை 
உடலை அள்ளியெடுத்து 
இறந்தவன் முகவரிதேடி  சில 
நன்மனிதர்கள்

விபத்தில் 
இறந்துவிட்டான் உன் நண்பன் 
யரோ சேதிசொல்ல ஓடிவந்தான் 
பொய்சொன்னவன்

உறவுகள் 
கதறி அழ ஊராரோ முனுமுனுக்க 
பொய் சொன்ன அவனோ 
மெளனமாக 

முற்றத்தில் 
இறந்து கிடக்கும்  நண்பன்  
வீட்டினுள் இறந்ததாக சொன்ன இறக்காத 
இறந்தவனின் தந்தை 

விபத்தல்ல 
உன் பொய்ச்சொல்லால் நிகழ்ந்த  
கொடூரக் கொலை அவனைநோக்கி 
மனசாட்சி 

நண்பனின் 
உயிரை பலியாக்கிக் கொண்டது 
முட்டாள் தினத்தில் முட்டாளாக்க 
அவன் எடுத்த ஆயுதம் 

பச்சை குருதியின் 
கொச்சை வாசமும் உறவுகளின் ஒப்பாரிச்சத்தமும் 
தண்டிக்கப்டாத அவனை இன்னும் 
துரத்திக் கொண்டே 

சிறிய 
பெரிய பொய்களை சொல்லி 
கொண்டாடப்படும் முட்டாள் தினம் 
சிலர் வாழ்கையில் பதிக்கப்டுகிறது
கறுத்த நாளாக 

18 comments:

 1. உண்மைதான் annaaa ...சில நேரம் விளையாடுக்கை பண்ணுவது வீபரிதமை போய் விடுது

  ReplyDelete
 2. முட்டாள் தினம் கொண்டாடும் முட்டள் தினத்திற்கு கொடுத்த சாட்டை அடி கவிதை சகோ மிக அருமை

  ReplyDelete
 3. விளையாட்டுக்குத்தான் செய்கிறோம் பேர்வழி
  என்று சொல்லிக்கொண்டு.. தங்களையும் முட்டாளாக்கி
  அடுத்தவர்களையும் தொல்லைக்கு உட்படுத்தும்
  இந்த நாளிற்கு..
  அஸ்தமனம் அமையுமாறு அமைந்த
  அழகிய கவிதை...

  ReplyDelete
 4. முட்டாள் தினம்.......முட்டாள்கள்....முட்டாள்கள்

  ReplyDelete
 5. கவிதை சாட்டை அடிதான் மனம் வலித்தது . கவி வரிகள் பொய் என்று சொல்லி விடுங்க என் மனம் சாந்தி அடையும் .

  ReplyDelete
 6. @கலை

  உன் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தங்கச்சி

  ReplyDelete
 7. @ஹைதர் அலி

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 8. @மகேந்திரன்

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 9. @மனசாட்சி™

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 10. @சசிகலா

  2001
  இல் சென்னையில் வசிந்திருந்தபோது கேள்விப்பட்ட ஒரு உண்மைச் சம்பவம்

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 11. விளையாட்டு வினையாகும் என்பார்கள்.
  மனம் பதை பதைத்தது.

  ReplyDelete
 12. செய்தாலி- என்ன பொருள் நண்பரே?

  ReplyDelete
 13. இரத்தம் என்றாலே பயமாவும் வெறுப்பாவும் இருக்கு.விளையாட்டின் விபரீதங்களைத் தவிர்க்கலாம் !

  ReplyDelete
 14. @சிவகுமாரன்

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 15. @சிவகுமாரன்

  செய்யத் அலி என்ற என் பெயரின் சுருக்கம் தான் செய்தாலி
  தமிழில் அர்த்தம் தெரியவில்லை

  அராபிய மொழிப் பெயரின் ஆங்கில அர்த்தம்
  செய்யத் என்றால் Always in control.
  அலி என்றால் Noble, sublime.

  மொத்தத்தில் நல்ல பெயர் என்றுதான் நினைக்கிறேன் தோழரே(:

  ReplyDelete
 16. @ஹேமா

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 17. மனம் கனத்தது. வாய்மை பயக்கும் என்றால் மட்டுமே பொய் சொல்லவேண்டும் என்கிறார் வள்ளுவர். இங்கே விளையாட்டுக்காய் சொல்லப்பட்டப் பொய்யால் எவ்வளவு பெரிய விபரீதம். படிப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

  ReplyDelete
 18. நல்ல கருத்தை சொல்லிச் செல்லும் கவிதை!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...