Tuesday, April 3, 2012

யார் படைப்பாளி





நீரினும் 
மெல்லிய இந்திரத் துளியில் 
துடிக்கின்ற உயிர் அணுவை 
கருவறை நீர் குடத்தில் 
ஐவிரு மாதம் பக்குவப்படுத்தி 
அதற்கு உருவமும் சமைத்து 
அவையின் வாழ்வியல் சூழலுக்காக 
பரந்து விரிந்த தரணியும் 
அதில் எண்ணற்ற படைப்புக்களும் 
மனித இனத்திற்கான 
மேலவன் திர்ஷ்டி 

இறைவன் 
தனக்காக படைத்தவகளை 
மதிகொண்டு கண்டறியும் மனிதன் 
தன்னதென்று மார்தட்டுகிறான் 
அறிவியல் 
விஞ்ஞானம், இறை மெஞ்ஞானம் 
மொழி, அக்ஷரங்கள் 
சிற்பங்கள் ,ஓவியங்கள்... இப்படி 
இருக்கின்ற ஒன்றை சிந்தையால் புதுமையூட்டி 
வெளிக்கொணரும் மனிதன் 
மேலவனுக்கு இணையோ ..?

மனிதனின் 
எல்லா கண்டரிதலுக்கும் 
அவன் மதியை அழைத்துச் செல்வது 
இறைவன் என்பதை மறந்து 
அற்பத்திலும் அற்பமான மனிதன் 
மார்தட்டுவதோ ....?

 //மீள் பதிவு //

17 comments:

  1. ஆமாம்... அற்பமான மனிதன்

    ReplyDelete
  2. நல்ல கற்பனைத்திறன் மிகசிறந்த கவியாக்கம் பாராட்டுகள்

    ReplyDelete
  3. செய்தாலி...எனக்கு இறைநம்பிக்கை குறைவுதான்.ஆனால் உங்கள் நம்பிக்கை உங்களுடையது.மீள்பதிவு.நான் இந்தக் கவிதை பார்த்திருக்கவில்லைத்தானே.நம்பிக்கையை கடவுளில்தான் வைக்கவேண்டுமென்றில்லைத்தானே.எங்களில் நம்பிக்கை வைத்து வாழ்வை நல்வழிப்படுத்துவதும் ஒரு வேண்டுதல்தான் !

    ReplyDelete
  4. உண்மை எதுவென்று இன்னும் உணராதவர்கள் உளறத்தான் செய்வார்கள்.

    சில தகவல்களை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது அவசியமாகிறது.

    அந்த வகையில், இப்பதிவு

    ‘மீள்பதிவு’ என்றாலும் வரவேற்புக்குரியதே.

    ReplyDelete
  5. @மனசாட்சி™

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  6. @மாலதி

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  7. மனிதர்களாய் வாழ தூண்டும் வரிகளாய் எனக்கு தெரிகின்றது சார் ...
    மிகவும் நெகிழ்வான வரிகள் ..
    உன்னத படைப்புக்கு என் நன்றிகள மற்றும் வாழ்த்துக்கள

    ReplyDelete
  8. @ஹேமா

    ஒவ்வொருக்கும்
    ஒவ்வொரு நம்பிக்கை தோழி

    இந்தபதிவு
    ஆரம்ப காலகட்டத்தில் எழுப்பட்டது

    மனிதனின்
    வாழ்கையை நேர்வழிப் படுத்தவும்
    நெறிப்படுத்தவும் தான் போதிக்கபடுகிறது
    இறை நம்பிக்கை

    //எங்களில் நம்பிக்கை வைத்து வாழ்வை நல்வழிப்படுத்துவதும் ஒரு வேண்டுதல்தான்//

    நீங்கள் சொன்னதுபோல்
    வாழ்கையை நல்வழிபடுத்தி மனிதர்கள் வாழ்வாராயின்
    அவர்கள் இறைவனை மறுத்தாலும்
    அவர்களை சார்ந்தே (அருகில்)இருக்கிறான்
    இறைவன்
    இது வேதங்கள் சொல்லும் நம்பிக்கை

    உங்களின் வருகைக்கும் வெளிப்படையான கருத்திற்கும்
    அன்பு நன்றிகள் தோழி

    ReplyDelete
  9. @சத்ரியன்


    உங்கள் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  10. ஆதியை மறந்து
    ஆக்கம் காட்டுவதில் என்ன பயன்..

    அழகான ஆக்கம் நண்பரே...

    ReplyDelete
  11. எனது முந்தைய பதிவு வரிகளே நினைவுக்கு வருகிறது .//எதை நாம் படைத்தோம்
    எல்லாமே இருப்பதுதான்
    கோர்க்கின்ற வேலையாளாய்
    எதைஎதையோ செய்கின்றோம் !//
    தெளிவு படுத்தும் பகிர்வு .

    ReplyDelete
  12. @மகேந்திரன்

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  13. @சசிகலா

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  14. உப்புமடச் சந்தியில் உங்கள் கவிவரிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் செய்தாலி !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...