Tuesday, April 10, 2012

பாதை





விழிகள் 
இரண்டும் குருடல்ல 
திசை மாறிய பயணம் விழித்திரையில் 
ஆசைக்  கருமை

சுய 
அகந்தைகளை சுமந்து 
மனதின் போக்கில் கால்கள் 
குறுக்குப் பாதை  அவசரப்பயணம்

யண 
வேகத்தின் கூர்மை 
உயிர் துறக்கும் மனிதர்கள் 
வழிகள் நெடுக குருதிக்கறைகள்

 கோர  
கூர்மையுள்ள முட்களற்ற 
இளம்பஞ்சு வழித் தடம் 
சேரும் இடம் நரகவாசல்

டந்து 
வந்த பாதைகளில் 
இடையிடையே உதிர்ந்த பருவம் 
முதுமையை உடுத்தியது காலம்

னுபவம் 
போதி மரம் 
மதியின் வாசல்தட்டி சொன்னது  
நீ பிழையில் நிற்கிறாய்

யகோ 
என்ன கோரம் 
பிழையுணர்ந்து அழுகிறார்கள் 
முன்னால் வந்த மனிதர்கள்

ன்மை 
நல்வழிப் பயணம் 
கரடு முரடான நீண்டபாதை 
உதிர்ந்த பருவவுமாய் மறுபயணம்


*காலம் 
பழகிய வரிகள் 
அன்பின்   தோழமைக்காக மீண்டும் 
மீள் பதிவாய்

5 comments:

  1. வாழ்க்கை பயணம்....தெளிவாக பாதையாக சொல்கிறது கவிதை வரிகளில்

    ReplyDelete
  2. கடந்து
    வந்த பாதைகளில்
    இடையிடையே உதிர்ந்த பருவம்
    முதுமையை உடுத்தியது காலம்
    பயணம் இனிதாக செப்பனிடும் வரிகள் அருமை .

    ReplyDelete
  3. சறுக்குவதும்,விழுவதும்,சரிசெய்து நடப்பதுமாகிறது வாழ்வு.பின்னால் நடப்பவர்களுக்கு அது ஒரு வழிகாட்டல்.வாழ்வுப் பாதை முடியும்வரைக்கும் எதையோ படித்துக்கொண்டே இருக்கவேண்டிருக்கிறது.முடிவதற்குள் பயணமும் முடிந்துவிடுகிறது.வாழ்வின் தத்துவம் சொல்கிறது கவிதை.பாராட்டுக்கள் செய்தாலி !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...