Thursday, April 12, 2012

நான் ஒரு எதிர்பாலினம்





நான் 
ஒரு எதிர் பாலினம் 
விழி பிதுங்க வேண்டாம் 
பச்சையாக சொல்லப்போனால் 
பெண்'' 

எங்கள் 
எதிர் பாலத்தின் பார்வையில் 
கொடிய விஷமும் சுகந்தமும் கலந்த 
 ம(மா)து பானம் 

அதிகம் 
நிமிர்த்தால்  வளைத்தால் ஓடியும் 
விலா எலும்பின் கோணல்
குணம் 

சுமைகள் 
எம் இனத்திற்கான 
இறைவனின் வரமோ சாபமோ 
இன்னும் புலப்படாமல் 

கொட்டும் 
இச்சைகளை ஏந்தும் 
கட்டில் குப்பத்தொட்டிகளாய் 
அன்றும் இன்றும் 


வேலி
சட்டங்களும் விதி விலக்குகளும்
எமக்கான எதிர் பாலினத்தின் ஆதிக்க 
சிறைகள் 

எம்மினத்தின் 
வெட்கத்த தளங்களில் பரிசுத்தத்தை 
தேடுகிறார்கள் வீதிகளில் எச்சில் உண்ணும்  
எதிர் பாலினங்கள் 
  
உறவில் 
பெயரில் எதிர் பாலினத்திற்கான
எம்மினத்தின் எதனை எத்தனையோ 
அவதாரங்கள் 

உடல் 
அவயங்களின் ஒன்றாம் இதயத்தின் 
பெயரால் எம்மினத்தை சூறையாடும் 
கயவ எதிர்பாலினங்கள்

வீரமாய் 
வீடாண்டு நாடாண்டு நின்றாலும் 
அடி சறுக்கி  வீழ்த்துகிறது 
பெண்மை பலகீனம் 

கவிகள் 
கதைகள்  புனைய சித்திரம் தீட்ட 
 துகில் உரிக்கப்டும்  கருப்பொருளாய் 
எம்மினங்கள் 

அன்றும் இன்றும் 
சந்தையில் காட்சியாக 
விற்பனை பொருளாக எம்மினத்தின் 
உடல் அவயங்கள் 

சரித்திர 
ஏடுகளில் குருதிக் கறைபடிந்த 
எம்மினத்திர்காக எதிர்பாலினத்தின் 
யுத்தங்கள்

எதிர்பாலினத்திற்கு
அகிலமாய் எம்மினம் இருப்பினும் 
கருவிலேயே கருவறுக்கிரார்கள்
எம்மினத்தை 

அது 
 நாளைய எதிர்பாலினத்தின் 
அழிவு! 

19 comments:

  1. எதிர்பாலினத்திற்கு| அகிலமாய் எம்மினம் இருப்பினும் |கருவிலேயே கருவறுக்கிரார்கள் | எம்மினத்தை
    அது | நாளைய எதிர்பாலினத்தின் |
    அழிவு!

    -காரமான இந்த வரிகளே மொத்தக் கோபத்தையும் சொல்லி விட்டன நண்பா. உங்களின் நியாயமான கோபம் அதுபோன்ற மிருகங்களுக்கு கண்டனம். அருமை.

    ReplyDelete
  2. பெண் இனத்தின் சமுதாய நிலைமையை
    சொல்லியவிதம் அழகு...
    ஒவ்வொரு கருத்தும் எதிர்கருத்து
    சொல்ல இயலாத வண்ணம்
    உண்மை நிலைமையை
    பறைகொட்டுகிறது...

    சுமைதாங்கிகளாய்
    காலம் முழுதும்
    இனத்தை
    கருவிலேயே அழிக்காதீர்கள்...
    மனிதம் எனும்
    குணம் வளர்த்திடு எதிர்பாலினமே....

    ReplyDelete
  3. வீரமாய்
    வீடாண்டு நாடாண்டு நின்றாலும்
    அடி சறுக்கி வீழ்த்துகிறது
    பெண்மை பலகீனம் // எங்கள் மனக் குமுறல்களை தங்கள் வரிகளில் கண்டேன் .

    ReplyDelete
  4. // வீரமாய்
    வீடாண்டு நாடாண்டு நின்றாலும்
    அடி சறுக்கி வீழ்த்துகிறது
    பெண்மை பலகீனம் //

    பெண்மையின் அவலம்! உண்மை உலகின் கேவலம் புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. இரண்டு பாலினமும் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வது சிறந்த வாழ்க்கை . ஒன்றின்றி மற்றொன்று இல்லை .

    ReplyDelete
  6. //கொட்டும்
    இச்சைகளை ஏந்தும்
    கட்டில் குப்பத்தொட்டிகளாய் /

    பெரும்பாலானவர்களின் எண்ணம் இதுவாகவே இருப்பது தான் பெரும் சோகம் நண்பா.

    ReplyDelete
  7. பெண்ணின் குரலில் ஓர் ஆண்!!!

    பேதமை பெண்களிடம் இருக்கும் வரையில் ஆண்தான் போதனை வழங்க வேண்டும்.
    புரிய வேண்டியது பெண்ணுக்கா? ஆணுக்கா?

    அருமையான ஆக்கம் செய்தாலி அவர்களே!

    ReplyDelete
  8. இன்று நான் பதிவிட்ட கவிதையும் உங்கள் கவிதையும் பெண்ணை பொம்மைகளாக்கி விளையாடும் காட்சிகளை அழகாகச் சொல்கின்றன.

    பெண்ணில் இயல்பான மென்மையை,பலஹீனத்தை ஆண் பயன்படுத்திக்கொள்(ல்)கிறான்.கொஞ்சம் துணிவும் நம்பிக்கையும் எடுத்துகொண்டால் மட்டுமே ஆணிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது பெண்ணால் !

    ReplyDelete
  9. பெண்ணை சிறுமை படுத்தும் ஆண்கள் மத்தியில் பெண்ணுக்காய் குரல் கொடுக்கும் சில ஆண்மகன்களில் ஒருவருக்கு நன்றி

    ReplyDelete
  10. பெண்ணின் நிலையை, சூழ்நிலையை, வலியை வரிகளில் கண்டேன்

    நிதர்சமான உண்மை நண்பா

    ReplyDelete
  11. @கணேஷ்

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  12. @மகேந்திரன்

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  13. @சசிகலா

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  14. @புலவர் சா இராமாநுசம்

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  15. @சத்ரியன்

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  16. @AROUNA SELVAME

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. @ஹேமா

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  18. @ராஜி

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  19. @மனசாட்சி™

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...