Monday, April 16, 2012

நேசமும் நேசிப்பும்
இது 
நாளைய உன் வாழ்க்கைத்துணை 
பிடிச்சிருக்கா புகைப்படம் காட்டி 
உறவுகள்

பிடிச்சிருக்கா
உறவுகள் என்னிடத்தில் கேட்டதை 
அவளிடம் திருப்பி கேட்டேன் 
நான் 

ம்ம்ம் 
இதழ் விரியாத மூளல் ஓசையிலும் 
தாழ்த்திய தலை அசைவிலும் அவசராமாய் 
அரங்கேறியது திருமணம் 

அறிமுகமில்லா
இரண்டு மனங்கள் சங்கமித்த 
ஒற்றை உறக்கத்தின்  முதல் 
இராத்திரி 

பிடிச்சிருக்கா 
முன்நெற்றியில் முதல் முத்தம் 
பதிக்கும்முன் மீண்டு கேட்டேன் 
அழுத்தமாக 

ம்ம்ம் 
ஓசையற்ற மௌனச் சொல்லையே 
மீண்டும் பதிலாக தந்தாள் 
அவள் 

பகலை இரவும் 
இரவை பகலும் துரத்த 
காலக் கல்லறைக்குள் இறந்துவிழுந்தப்டி 
நாழிகைகள் 

அன்று 
 சிறு  கால இடைவெளிக்குப்பின்
ஒரு தனிமை உரையாடலின் 
தருணம் 

 என்னை 
எப்போது நீ விரும்பினாய் 
ஒருசொல்லில் மெய் சொல்லென்றேன் 
கள்ளச் சிரிப்பில் 

ஒருசிறு 
மௌனத்திற்குப் பின் இதழ் திறந்தாள் 
இதுவரையிலான வாழ்க்கை நிகழ்வுகளை 
வாசித்தவள் 

ஒருநாளை 
குறிப்பிட்டுச் சொல்லி சொன்னாள்
என்மேலான அவளின் முதல் 
விருப்பத்தை 

அதில் 
மணவாழ்க்கையின் காலப்பழக்கம் இருந்தது 
சொன்ன சொல்லில் உணர்ந்தேன் 
மெய்யினை 

அந்நாள் 
வரையிலான என்மேலான 
அவளின் விருப்பம் வெளிமனதின் 
அபிநயங்கள் 

நாம் நேசிப்பதும் 
நம் துணையால் நேசிக்கப்படுவதும்  
பிணைக்கப்பட்ட இல்லற உறவுகளின் 
நல்புரிதல் 

திருமண 
பந்தத்தில் இணைந்துவிட்டோம் 
நேசிப்பும் வாழ்கையும் கடமையாக நீளுகிறது 
சில உறவுகளில் 

இவ(ள்)ன் 
நம் வாழ்க்கை பங்காளி 
ஏன் நாம் அவர்களை நேசிக்கவேண்டும் 
எத்தனையோ உறவுகள் 

தலைவனை 
தலைவியும் தலைவியை தலைவனும் 
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் நல் இல்லறத்தின் 
மாசற்ற அழகு 

நாம் 
நேசிப்போம் நம்மவர்களால் 
நேசிக்கபடுவோம் 

19 comments:

 1. இன்றைய சூழலில்
  குடும்பநல நீதிமன்றங்களில்
  புரிதலின் குறைபாடுகள் காரணமாய்
  கூட்டங்கள் அலைமோதுகின்றன..
  கடந்த வருடம் இந்தியாவில்
  விவாகரத்து பெற்றவர்களில் தமிழகம் தான்
  முதலிடம் பெற்றிருக்கிறது...

  நீங்கள் கூறியபடி புரிதலின் இயக்கத்தில்
  தாம்பத்ய உறவில் உணர்வுகளை
  மையமாக்கி நமக்கான பிரச்சனைகளை நாமே
  உட்கார்ந்து தீர்த்துக்கொண்டால்..
  இல்லறம் என்றும் நல்லறமே...

  ReplyDelete
 2. இல்லறம் சிறக்க ஒருவருக்கொருவர் நேசிப்பும் விட்டு கொடுத்தலுமே நல்லறமாகும்.

  ReplyDelete
 3. “நாம் நேசிப்பதும்
  நம் துணையால் நேசிக்கப்படுவதும்
  பிணைக்கப்பட்ட இல்லற உறவுகளின்
  நல்புரிதல்“

  நம் கலாச்சார பண்பாட்டின் கட்டாயத்தால் கடமைக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள்....
  இதில் உண்மையான அன்பு எவ்வளவு இருக்கும் நண்பரே...?

  ReplyDelete
 4. அருமையாகச் சொன்னீர்கள்.

  நேசப்பகிர்தல்லில் தான் வாழ்க்கை இருக்கிறது.

  புரிதலில் தான் தாம்பத்யம் சிறக்கிறது.

  ReplyDelete
 5. நேசிப்பதில் உண்மையும் காதலும் இருந்தால் மட்டுமே வாழ்வு இனிக்கிறது.அழகான கவிதை !

  ReplyDelete
 6. மென்மையாய் மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் புரிதலும் விட்டுக் கொடுப்பும் வாழ்க்கையை மேம் படுத்துகிறது.

  ReplyDelete
 7. @மகேந்திரன்

  உண்மைதான் தோழரே
  இங்கு உங்காந்து பேச நிறைய தம்பதிகளுக்கு
  நேரமில்லை

  நன்றி தோழரே

  ReplyDelete
 8. @மனசாட்சி™

  கண்டிப்பா நண்பா
  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 9. @AROUNA SELVAME

  நீங்கள் சொன்னதுபோல்
  கடைமைக்காக நேசிக்கிறார்கள் சிலர்
  அவ்வகையான நேசிப்பை
  நம் நல நேசிப்பால்
  நம்மவர்களால் நாம் நேசிக்கப்டவைக்கவேண்டும்
  அப்போதுதான் சிறந்த இல்லற வாழ்க்கை அமையும் துடரும்

  ReplyDelete
 10. @சத்ரியன்

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 11. @ஹேமா
  நீங்கள் சொன்னதுபோல்
  நேசிப்பில் உண்மை இருக்கவேண்டும் தோழி
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 12. @நிலாமதி

  ம்ம்ம் உண்மைதான் ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்தமைக்கு நன்றி தோழி
  நீங்கள் நலமா தோழி

  ReplyDelete
 13. தெளிவான வரிகளில் தேவையான சங்கதியை சமூகத்திற்கு வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள் நண்பா

  ReplyDelete
 14. @அரசன் சே

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 15. நாகரீக மோகத்தில் கண்டதும் காதல் , கொண்டதும் பூசல் என வியாபாரமாகிப் போன சடங்குகளையும் தாண்டி நேசத்தை மட்டுமே முன் வைக்கும் தம்பதிகளே அரிது .

  ReplyDelete
 16. நினைக்க இன்பம் தருவது பசுமையான நினைவுகளை தாங்கி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய சுவை எக்காலத்திலும் மறக்க இயலாது இந்த சுவையை கண்டவர்களுக்கே இதன் அருமை புரியும் பாராட்டுகள் நன்றி ...

  ReplyDelete
 17. @சசிகலா

  நம்மைச் சுற்றிய
  சமூக நாகரீகளுக்கு
  நாம் அடிமையானால்
  நீங்கள் சொல்வது நிகழும்

  அந்த நாகரீகங்களை
  நாம் அடிமைப்படுத்தல் வேண்டும்
  அப்படி இருப்பின்
  வாழ்கையில் உறவும் உறவுகளும்
  மேன்படும் தோழி

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 18. @மாலதி

  ம்ம்ம் உண்மைதான் தோழி
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...