Thursday, April 19, 2012

இருட்டில் அந்த உருவங்கள்அவயங்களை
மூடி இருக்கப்பட்ட ஆடையினூடே
அந்த மூச்சுக் காற்றின் 
வெட்கை

ச்சீ ...
உறக்கத்தில் விருட்டென எழுந்தவள் 
நடுராத்திரியில் உட்காந்திருந்தாள் 
பித்துப் பிடித்தவளாய் 

விளக்கற்ற 
இருட்டறையில் அவளை பயமுறுத்தியபடி 
சுற்றிக்கொண்டு அந்த கருத்த 
உருவம் 

விடிய 
இன்னு நாழிகைளை இருக்க 
உறக்கம் தொலைத்த விழிகளுமாய் 
அவள் 

கலங்கிய 
மதிக் குளத்தில் 
மெல்ல ததும்பிக் கொண்டிருந்தது 
நினைவலைகள் 

சில 
மாதங்கள் முன் பழக்கமான 
பள்ளித் தோழியின் தூரத்து 
உறவுக்காரன் 

அவனுக்கு 
இருபதுக்கு மேல் இருக்கும் 
வடிவான  தோற்றமும் சிரிப்பு 
பேச்சும் 

கல்வியில் 
நல்ல திறமையுள்ளவன் 
கொஞ்சம் அறிவைத்தேடிய அவனுடனான 
 நட்பு 

நீண்ட 
நட்பின் நாட்களில் கிடைத்தது 
தனக்கில்லாத சகோதர தோழமையின் 
அன்பு 

எப்போதென
தெரியவில்லை அவனை சலனப்படுத்தியது 
பால்யத்திற்கும் கண்ணிக்குமான அவளின் 
நடுநிலைப் பருவம் 

அவள் 
சற்றும் எதிர்பார்க்கவில்லை  
அவனிடமிருந்து அந்த அசிரீர  
காணவொளியை 

உச்சந்தலையில் 
ஆழமாய் ஆணி அறைந்த வலி 
எதோ பெரும் சுமையை உணரும் 
மனம் 

தாயிடமும் 
தொழியோடும்  எப்படிச் சொல்ல 
ஒருபக்கம் வெறுப்பும் மறுபக்கம் 
பயமும் 

படிக்கிற 
பொட்டபிள்ளைக்கு  எதுக்கு போன்
அன்றே அப்பாவிடம் சண்டையிட்ட 
அம்மா 

ஒற்றைப் 
பிள்ளையென்ற அப்பாவின் செல்லம் 
உறவுகளின் பேச்சை மீறி வாங்கிய 
கைபேசி 

அன்பின் 
தன் வெகுளித் தனமும் 
நிறம் மாறிய அவனின் பிழையான 
எண்ணமும் 

சத்தபோட்டு 
அழத் தோன்றியது அவளுக்கு 
மௌனமாய் விம்ம தாரைதாரையாய் 
உதிர்ந்தது கண்ணீர் 

நீண்ட 
போர்வைக்குள் பயத்தில் சுருண்டு 
மீண்டும் உறக்கத்தை தேடி 
அவள் 

தேளும் 
கருநாகங்களும் 
பிச்சு சீந்தும் காட்டுமிருகங்கள் 
இரக்கமற்று கொத்திச்செல்லும் கழுகுகளும் 
 மீண்டும் சற்றென பயந்து எழுந்தாள்
உறக்கத்தில் 

இன்னும் 
விடியவில்லை இருட்டில் 
மீண்டும் பயமுறுத்திக்   கொண்டிருந்தது 
அந்த உருவங்கள் 

21 comments:

 1. இன்றைய நவ நாகரிக இளசுகளின் தவறிய பாதையினை படம் பிடித்து காட்டுகின்றது இக்கவிதை ..
  கொஞ்சம் எழுத்துபிழைகள் இருப்பதாய் தெரிகின்றது தோழரே .. கொஞ்சம் பாருங்கள் ...

  ReplyDelete
 2. நல்ல அழகான வரிகள்

  ReplyDelete
 3. சில நேரங்களில் சிலரைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.வயதும் பருவரும் பக்குவப்படும்வரை இந்தச் சிக்கல்தான்.இன்றைய தொடர்பாடலும் இதற்கொரு தூண்டுகோல் !

  ReplyDelete
 4. இன்றைய சூழலை படம் பிடித்து காட்டும் வரிகள் . மன ஓட்டத்தை கட்டுப் படுத்த வேண்டும் இளைய தலைமுறை .

  ReplyDelete
 5. ஓஓஓஓ.... இதுவும் காதல் படுத்தும் பாடு தானா...?

  ReplyDelete
 6. எவருக்கும் பிடிபடாத அந்த மாய உருவங்களை மிக அழகாய்
  கவிதையில் படம் பிடித்துக் காட்டியமைக்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தொழில்நுட்ப ஆக்கிரமிப்பும், கட்டுக்குள் அடங்காத பதின்மவயது தோழமையும்

  இளைய தலைமுறையை வெகுவாக பதித்துக் கொண்டுதானிருக்கிறது.

  குறிப்பாக காமிரா, 3G வசதியுள்ள கைத்தொலைபேசியினால் பெரும் தொல்லை நேர்கிறது.

  அனைத்தையும் எடுத்துச்சொல்லி விளங்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்களும், பெற்றோர்களைப் புரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பிள்ளைகளும்.

  ReplyDelete
 8. பருவந்தோறும் பருவந்தோறும்
  துரத்திவரும் உருவங்கள்
  அழகான உருவகங்களுடன்.. ..
  அழகான கவிதை நண்பரே..

  ReplyDelete
 9. @அரசன் சே

  உங்கள் புரிதலுக்கு நன்றி
  எழுத்துப் பிழைகளை சரி செய்துவிட்டேன் நண்பா

  ReplyDelete
 10. @Vairai Sathish

  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 11. @ஹேமா

  உண்மைதான் தோழி
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 12. @சசிகலா

  கண்டிப்பா வேண்டும்
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 13. @AROUNA SELVAME

  இது காதல் சம்பந்தப்பட்டதல்ல
  பால்யத்தில் வழிமாறி பிழையாகும் நிலை
  மிக்க நன்றி

  ReplyDelete
 14. @சத்ரியன்

  உண்மைதான் நண்பா
  இதை இன்றைய இளய தலைமுறைகளும்
  அவர்களின் பெற்றோர்களும் உணர்ந்தால் நன்றி
  நம் பிள்ளைகள் எண்ண செய்கிறார்கள் எப்படி இருக்கிறாகள்
  யாருக்கும் கவனிக்க் கேட்க இந்த அவச உலகத்தில் நேரம்மில்லை

  ReplyDelete
 15. @Ramani
  மிக்க நன்றி சார்

  ReplyDelete
 16. @மகேந்திரன்

  ஆம் தோழரே
  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 17. @Uzhavan Raja
  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 18. வீரியம் விதைத்துப் போகும்
  அருமையான பதிவு
  பகிவுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. குழந்தை, குமரி இரண்டுங்கெட்டப் பதின்மப் பருவத்தில், தேவையில்லாத சிந்தனைகளால் படிப்பு, உள்ளம் இரண்டும் கெட்டுப் பரிதவிக்கும் ஒரு பெண்ணின் நிலையைத் தெளிவாகச் சொல்லியப் பதிவு. இந்த வயதில் பெற்றோர் தோழமையுடன் பழகினாலே பல விபரீதங்களை முளையிலேயே தவிர்த்துவிட முடியும். மனம் நெகிழ்த்திய பதிவு.

  ReplyDelete
 20. ஆழமான உணர்வுகளின் படபிடிப்பு
  அருமையான சித்தரிப்பு ...........அருமை செய்தாலி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...