Monday, April 23, 2012

நிறம் மா(ற்)றும் வண்ணங்கள்




விழிகளை 
நிரப்பிய வண்ணங்களின் வேட்கையில் 
கண் இறுக்கிய அழுகிறது தொப்புள்கொடி வெட்டப்பட்டு 
விழிதிறக்கும் சிசு 

தாயின் 
மார்புச் சூட்டில் ஆசுவாசித்து 
மெல்ல விழிதிறக்க பல வண்ணங்களில் 
உறவுகள் 

அந்த 
நிறம்  குணமரியா வண்ணங்களில் 
மீண்டும் கண்ணிறுக்கி அழத்தொடங்குகிறது 
சிசு 

வெளிச்சம் கெட்டு 
விழியில் இருள் சூழ 
கருமை வண்ணத்தின் உணர்த்தலில்
அழுகிறது  மீண்டும்

வெள்ளை கருப்பு 
இரண்டு வண்ணங்களுக்கு இடையே 
சில காலம் நகர்கிறது   
வாழ்க்கை 

பால்யத்தில் 
வண்ணங்களை ரசிக்க தொடங்குகிறது 
 வண்ணத்தின் தன்மையும் குணமும் அறியாத 
குழந்த்தைகள் 

மொழி 
இனம் ,மதம் ,உணவு ,ஆடை ,உறவு 
இப்படி பல வண்ணங்களை உடுத்தி 
உணர்த்துகிறது காலம் 

அறிவு 
திறக்கும் பால்ய பருவத்தில் 
உணர்த்தப்படுகிறது வண்ணங்களின் 
நிறமும் குணமும் 

பிந்திய 
நாட்களில் உறவுகளிலும் சமூகத்திலும்
இயற்கையாய் செயற்கையாய் பல வகை 
வண்ணங்கள் 

ம்ம்ம்... ச்சீ ...
அழகிலும் காழ்ப்பிலும் உட்கொண்டும் 
புறம் துப்பியும் எத்தனை எத்தனையோ 
வண்ணங்கள் 

வண்ணங்களின் 
நிர்வாண மெய் உணர்கையில் 
காயம் வேதனை வடுக்கள் இன்றி அழுகிறது 
மினித மனங்கள் 

சக உறவுகளில் 
மனிதர்களில்  வண்ணங்கள் நிறம் மாறுகையில் 
உயிர் குடிக்கும் ஆயுதமாக மாறுகிறது 
வண்ணங்கள் 

ஜனனத்தில் 
மனிதனை பின்தொடரும் வண்ணங்கள் 
 பல உருவங்களில்  துரத்துகிறது 
மரணம் வரை 

ஜீவராசிகள் 
புவியின் மேல்பரப்பில் வாழ்வதற்காக 
அவ்வப்போது மாற்றிக்கொள்கிறது 
வண்ணங்களை 

 தம் 
நிறத்தை குணத்தை தன்மையை 
ஒருபோதும் மாற்றிகொள்ளவத்தில்லை 
இயற்கை வண்ணங்கள்


21 comments:

  1. ஜனனத்தில் நிறங்கள் மாறுபடுகிறது/மாற்றபடுகிறது - நிஜத்தில் நிறங்கள் மாறுவதே இல்லை

    அருமையாக சொன்னீர்கள்

    படைப்பாளிக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  2. ஜீவராசிகள்
    புவியின் மேல்பரப்பில் வாழ்வதற்காக
    அவ்வப்போது மாற்றிக்கொள்கிறது
    வண்ணங்களை
    மிகவும் அழகான வரிகள் அருமை .

    ReplyDelete
  3. ஜீவராசிகள்
    புவியின் மேல்பரப்பில் வாழ்வதற்காக
    அவ்வப்போது மாற்றிக்கொள்கிறது
    வண்ணங்களை
    மிகவும் அழகான வரிகள் அருமை .

    ReplyDelete
  4. அடிக்கடி மாற்றப்படும் வண்ணங்களையும் , மாறும் வண்ணங்களையும் மிகவும் நேர்த்தியான வரிகளில் கூறிய உங்களுக்கு என் பாராட்டுக்கள் ../.

    ReplyDelete
  5. எண்ணங்கள் மாறுவதைப் போல் இயற்கை வண்ணங்கள் மாறுவதி்ல்லை.

    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உண்மை உண்மை.....ஆழமாக உணர்ந்து சிந்தித்தால் மனிதனாகப் பிறந்ததுக்கு வெட்கப்பட வேண்டியதுதான்.
    அசத்தலான சிந்தனை.!

    ReplyDelete
  7. தம்
    நிறத்தை குணத்தை தன்மையை
    ஒருபோதும் மாற்றிகொள்ளவத்தில்லை
    இயற்கை வண்ணங்கள்//உண்மை அன்பரே

    ReplyDelete
  8. //மொழி
    இனம் ,மதம் ,உணவு ,ஆடை ,உறவு
    இப்படி பல வண்ணங்களை உடுத்தி
    உணர்த்துகிறது காலம்

    அறிவு
    திறக்கும் பால்ய பருவத்தில்
    உணர்த்தப்படுகிறது வண்ணங்களின்
    நிறமும் குணமும் //

    அருமை நண்பா. வேறென்ன சொல்லட்டும் நான்?

    ReplyDelete
  9. @மனசாட்சி™

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  10. @சசிகலா

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  11. @அரசன் சே

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  12. @AROUNA SELVAME

    மிக்க நன்றி

    ReplyDelete
  13. @ஹேமா

    உங்களின் புரிதலுக்கு
    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  14. @PREM.S

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  15. @சத்ரியன்

    (: மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  16. மொழி
    இனம் ,மதம் ,உணவு ,ஆடை ,உறவு
    இப்படி பல வண்ணங்களை உடுத்தி
    உணர்த்துகிறது காலம் // எளிமையான சொல்லாக்கம் சிறந்த சிந்தனை உள பூர்வ பாராட்டுகள்

    ReplyDelete
  17. @மாலதி

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  18. நல்ல சிந்தனை நண்பா

    ReplyDelete
  19. நீங்கள், சீனி, கருவாச்சி எல்லாம் கவிதை எழுதி அசத்துறீங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...