Wednesday, April 25, 2012

யாரும் யா......அழுவதில்லை
அவர்கள் 
இல்லை.. இல்லை... இவர்கள் 
 யார் யார் அழுவார்கள் நம் 
மரணத்தில் 

அன்று 
நமக்காய் அழுபவர்களின் 
அடையாளங்களை தேடுகிறது 
பாழ்மனது

இன்றைய 
அவர்களுடனான நேசம் 
நாளை நமக்காக அழுவதற்கா
சுயநலமோ 

நம் 
துக்க மனதை ரணப்படுத்தும் 
பிறரின் நமக்கான அழுகையின் 
வேஷங்கள் 

தன் 
இருப்பை உணர்த்துவதர்க்காக 
படைப்பின் அடையாளங்களில் 
இறைவன் 

தாய் 
தந்தையென எத்தனையோ 
பாச நேச சுயநல அடையாளங்களில் 
உறவுகள் 

உருவமற்ற 
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் 
பெயர் சமைத்து மரணம்வரையிலான 
அற்ப வாழ்க்கை 

உணர்ந்தால் 
உணரலாம் அதனுள் இழையும் 
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான 
சுயநலங்கள் 

உறவும் 
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம் 
நாம் அழுவதுண்டு 

அந்த 
தனித்த நம் அழும் தருணத்தில் 
நாம் நமக்காக அழுகிறோம் யாரும் நமக்காக 
அழுவதில்லை

நாம் 
நமக்காக மட்டுமே அழுகிறோம் 
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம் 

யாரும் யாருக்காகவும் 
அழுவதில்லை 

24 comments:

 1. எங்கும் எவரிடமும் சுயநலம்.இறைவனிடம் கூட.யாரும் யாருக்காகவும் அழுவதில்லை.இந்த வரி மட்டும் போதும்.முழுக்கவிதையின் சாரம் சொல்ல !

  ReplyDelete
 2. சுயநலம் - யாரும் யாருக்காகவும் அழுவதில்லை

  ReplyDelete
 3. நாம் நமக்காக இதுவே உண்மை நிலை மற்றதெல்லாம் பாவனையே .

  ReplyDelete
 4. கவிதை சுப்பரா இருக்கு அண்ணா ..ஆனால் மற்றவர்கள் கஷ்டப்படும்போது நம்மையும் மீறி கண்ணீர் வருமே அண்ணா..எல்லாரும் மற்றவர்களுக்கவும் அழுவாங்க எண்டு நினைக்கிரணன்

  ReplyDelete
 5. @ஹேமா

  ம்(:
  உங்களின்
  மெய் கருத்திற்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 6. @மனசாட்சி™

  கண்டிப்பா நண்பா
  மிக்க நன்றி

  ReplyDelete
 7. @சசிகலா

  ஆம் தோழி
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 8. @கலை

  ம்(:
  கலை
  நாளைக்கு (வருங்காலத்தில் )
  இந்த கருத்தை மாற்றி எழுதலாம்

  மிக்க நன்றி கலை

  ReplyDelete
 9. நாம்
  நமக்காக மட்டுமே அழுகிறோம்
  பிறர்க்காக நாம் அழுவதாய்
  பாவிக்கிறோம்

  யாரும் யாருக்காகவும்
  அழுவதில்லை

  உண்மை உண்மை
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அடக்கடவுளே.... போன மாதம் நான் கீழே விழுந்து மண்டையிலே தையல் போட்டிருந்தப்போ... எங்க அம்மா அழுதாங்களே...!!! அது பொய்யா...!!!

  நான் உண்மைன்னுல்ல நினைச்சி ஏண்டா விழுந்தோம்ன்னு கவலை பட்டேனே...

  உண்மையைச் சொன்னேன்ங்க. தப்புன்னா மன்னிச்சிடுங்க செய்தாலி.

  ReplyDelete
 11. @Ramani

  மிக்க நன்றி சார்

  ReplyDelete
 12. @AROUNA SELVAME

  ம்(:
  அப்படியா
  இப்பம் உடல் நலம் எப்படி இருக்கு

  நான்
  சொன்ன அழுகையை
  உணராதவரை அறியமுடியாது
  உணரும்போது உணர்வீர்கள்

  என்னை பொறுத்தவரை
  அதை உணராமல் இருப்பது நல்லது

  ReplyDelete
 13. நன்றிங்க செய்தாலி.

  “என்னைப் பொறுத்தவரை
  அதை உணராமல் இருப்பது நல்லது“ -

  என்று நீங்கள் சொல்வதால் அதில் ஏதோ வலி இருக்கிறது என்பதை மட்டும் உணரமுடிகிறது.
  நான் தான் கவிதையின் கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 14. எல்லாவற்றிலும் சுயநலம் மேலோங்கியே இருக்கிறது செய்தாலி.

  ReplyDelete
 15. arumaiyaana kavithai....
  thangalai en kavithai thalathilum inaiya anbudan alaikkiren nanbare

  http://nadikavithai.blogspot.in/

  ReplyDelete
 16. @AROUNA SELVAME

  ம்(:
  மிக்க நன்றி

  ReplyDelete
 17. @சத்ரியன்

  ஆம் நண்பா
  மிக்க நன்றி

  ReplyDelete
 18. @nadinarayanan

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 19. எங்கும் எளிதில் காண முடிந்த இரண்டில் இதுவும் ஒன்று ... மற்றொன்று நம்பிக்கை துரோகம் .
  வரிகளின் வீரியம் நெஞ்சுக்குள் ஈரமாய் ..
  என் வாழ்த்துக்கள் தோழரே

  ReplyDelete
 20. அருமையான கவிதை

  ReplyDelete
 21. @அரசன் சே

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 22. @Riyas

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 23. நலமா சகோதரரே

  ///உருவமற்ற
  உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
  பெயர் சமைத்து மரணம்வரையிலான
  அற்ப வாழ்க்கை///

  மிகவும் கவர்ந்த வரிகள்

  ReplyDelete
 24. @ஹைதர் அலி

  மிக்க நலம்
  வருகைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...