Sunday, April 29, 2012

வாழ்கையில் வாழத மனிதன்





நீ 
உனக்காக வாழ்ந்த தருணங்களை 
யாரிடமாவது சொல் எனக்கேட்டால் 
விழிபிதுங்குவான் அவன் 

இல்லை இல்லை 
நான் எனக்காக வாழ்ந்துஇருக்கிறேன் 
வெடுக்கென்று அப்படிச் சொல்பவன் 
பொய் சொல்கிறான் 

நாளை 
இறக்கும் தருவாயில் இருக்கும் 
மனிதர்களின் அகத்திலும்  இருக்கும் தனக்காய்  
வாழாத தருணங்கள் 

இங்கு 
பிறப்புடுத்தி வாழும் ஜீவராசிகள் 
தமக்கான ஜீவனில் பிறர்க்காக நகர்த்துகிறார்கள் 
சுயவாழ்கையை 

உடை 
நடை ,உருவம் ,பேச்சு 
இப்படி சுய பழக்கங்களில் பிறர்க்காக சாயம் பூசும் 
மனிதர்கள் 

அன்பு 
நேசம் ,பாசம் ,புன்னகை 
விருப்பு, வெறுப்பு காழ்ப்பு,கோபம் 
உருவமற்ற உணர்வு உணர்ச்சிகளையும் 
யார் யாருக்காகவோ இங்கே விதைக்கிறார்கள் 
மனிதர்கள் 

தாய்தந்தைக்காக
மனைவிபிள்ளைக்காக
நட்புக்காக, உறவுகளுக்காக யார் யாருக்காவோ 
வாழ்கிறார்கள் தமக்காய் வாழ்வதாய் பாவிக்கிறார்கள் 
மனிதர்கள் 

பிறப்பு ,இறப்பு 
 மதம் ,இனம் ,மொழி 
முன்னோர், பின்னோர் ,இன்னோர், இப்படி 
யார் யாருக்காகவோ அடையாள  ஆடைகளுக்குள் 
தன்னை ஒளித்துக்கொண்டு வாழ்கிறார்கள் 
மனிதர்கள் 

அவர்களுக்காக
இவர்களுக்காக யார் யாருக்காகவெல்லாம்  
வாழும் மனிதர்கள் வாழ்வதில்லை 
தனக்காக 

பிறர்களுக்கான
வாழும் வாழ்க்கையில்தான் 
உனக்கான வாழ்க்கை முழுமை அடைகிறது 
இறைச் சொல் 

இந்த 
இறைச் சொல்லை மெய்ப்படுத்துகிறது  
தனக்கான வாழ்கையில் பிறர்க்காக 
வாழ்ந்து  மடிந்த மனிதர்களின் 
வடுக்கள் 

பிறப்பிற்கும் 
இறப்பிற்கும்மாக தன் வாழ்கையில் 
தனக்காய் வாழ்வதில்லை 
மனிதன் 

28 comments:

  1. பிறர்களுக்கான
    வாழும் வாழ்க்கையில்தான்
    உனக்கான வாழ்க்கை முழுமை அடைகிறது
    இறைச் சொல்

    அருமையான அர்த்தம் நிறைந்த
    இறை வரிகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ஆமாங்க, உண்மையை உரைக்க/உரக்க சொல்லுது

    ReplyDelete
  3. பாசப்பிணைப்பில் கட்டுப்பட்டுக்கிடக்கும் எங்களுக்கேயான சாபக்கேடு மட்டும்தான் இது.வெள்ளைக்காரன் தனக்காக மட்டுமே வாழ்கிறான். அதிலும் வாழ்வு கசப்புத்தான்.அதைவிட எம் வாழ்வு மேல்.இன்னொருவருவருக்காக வாழ்வதில்தான் மனம் திருப்தியாகிறது அந்த இன்னொருவர் நம்மை இளிச்சவாயராக நினைக்காதவரை !

    ReplyDelete
  4. நான் மற்றவர்,மற்றவள் என்று சில உறவுகளை பிரிக்க முடிவதில்லை அவர்களுக்காக வாழ்வதை எனக்காகவே வாழ்வதாகவே நினைக்கிறேன்

    சோ ரொம்ப நுட்பமான வரிகளை கொண்ட கவிதை

    ReplyDelete
  5. தாய்தந்தைக்காக
    மனைவிபிள்ளைக்காக
    நட்புக்காக, உறவுகளுக்காக யார் யாருக்காவோ
    வாழ்கிறார்கள் தமக்காய் வாழ்வதாய் பாவிக்கிறார்கள்
    மனிதர்கள்
    அருமை நண்பா.


    வாங்கிய மாத சம்பளத்தில் யார் யார் முகங்களோ தெரிகின்றன.

    என்முகத்தைத் தவிர..

    என்று எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  6. அருமை.
    அழகாகச் சொன்னீர்கள் நண்பா.

    ReplyDelete
  7. பிறருக்காக வாழ்வதிலும் சுகமதிகம்
    அதிலுள்ள சுகம் எதிலுமில்லை
    பிறருக்காக வாழும்போதுதான்
    தனக்காகவும் வாழ முடிகிறது

    அருமையான கவிதைப் படைப்பு
    வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  8. //அவர்களுக்காக
    இவர்களுக்காக யார் யாருக்காகவெல்லாம்
    வாழும் மனிதர்கள் வாழ்வதில்லை
    தனக்காக ///உண்மை அன்பரே கவிதையில் சில எழுத்துப்பிழைகள் உள்ள்ளன கவனிக்கவும் அன்பரே

    ReplyDelete
  9. பிறப்பிற்கும்
    இறப்பிற்கும்மாக தன் வாழ்கையில்
    தனக்காய் வாழ்வதில்லை
    மனிதன் //

    உண்மைதான் சகோ.

    நமக்காக வாழும் வாழ்கையை விட பிறருக்காக[வும்] வாழ்ந்துபார்க்கும்போது பிரம்பிப்பாகவும் அதேசமயம் திருப்தியாக இருக்கிறது.

    கவிதையில் நற்விதைகள் சில தூவப்பட்டுள்ளது..

    ReplyDelete
  10. தலைப்பில் எழுத்துபிழை உள்ளது ஆங்காங்கேயும் உள்ளது அதை சற்று சரி செய்துவிடுங்கள் சகோ.. இக்கருத்துரையை வெளியிட வேண்டாம்..

    ReplyDelete
  11. @இராஜராஜேஸ்வரி

    உங்கள் வருகைக்கும் நல் கருத்திற்கும்
    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  12. @மனசாட்சி™

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  13. @ஹேமா

    உங்களின் உணர்வுபூர்வமான கருத்திற்கு
    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  14. @ஹைதர் அலி

    கண்டிப்பா சகோ
    உங்கள் நல் கருத்திற்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  15. @guna thamizh

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி முனைவரே

    ReplyDelete
  16. @haseem hafe

    ஆம் சகோ

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  17. @PREM.S

    உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பா
    எழுத்துப் பிழையை சரி செய்துவிட்டேன்

    ReplyDelete
  18. @அன்புடன் மலிக்கா

    உங்கள் வருகைக்கும் நல் கருத்திற்கும்
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  19. நடை ,உருவம் ,பேச்சு
    இப்படி சுய பழக்கங்களில் பிறர்க்காக சாயம் பூசும்
    மனிதர்கள் /// என்ன ஒரு அற்ப்புதமாய் அமைந்த வரிகள் அருமை .

    ReplyDelete
  20. ஆமாம். தனக்காக வாழ எத்தனிக்கையில் வாழ்க்கை முடிந்து விடுகிறதே.

    ReplyDelete
  21. உண்மைதான் அண்ணா....கவிதை சூப்பர்

    ReplyDelete
  22. அருமையான கருத்துங்க செய்தாலி.

    ReplyDelete
  23. மிகச் சரி
    தனக்காக வாழ்த்தெரியாதவன் பிறருக்காக வாழ்வதாக
    சொல்லிக் கொள்ளுதல் கூட
    தன்னைத் தானே ஏமாற்ற்றிக் கொள்ளுவதுதான்
    எந்தப் பொருள் குறித்தும் தாங்கள் சிந்திக்கும்
    பாங்கும் அதனை வார்த்தைகளில் தரும் நேர்த்தியும்
    உள்ளம் கவர்கிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. @சசிகலா

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  25. @சிவகுமாரன்

    மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  26. @கலை

    மிக்க நன்றி கலை

    ReplyDelete
  27. @AROUNA SELVAME

    மிக்க நன்றி

    ReplyDelete
  28. @Ramani

    உங்கள் வருகைக்கும்
    ஊக்கமூட்டும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...