Tuesday, April 10, 2012

ஆடைகழற்றும் நவதொழில்




அது 
 மனிதர்கள் நிரம்பி வழியும் 
பெரும் நகரத்தின் முச்சந்தி 
சாலை 

அந்த 
அவசர சாலையில் 
சற்று அண்ணார்ந்து பார்த்தபடி 
பாத காணிகள் 

 எதோ 
ஒரு பெரும் நிறுவனத்தின்  
 உள்ளாடை விளம்பர அடையாள 
சித்திரம்

ஆள் 
உயர நீள் சித்திரதினுள் 
பெரும் ஆடைப் பஞ்சத்தில் 
அந்தப்பெண்

இலையிதழ் 
அங்குல ஆடைக்குள் வெறுமனே 
மூடபட்டிருந்தது அவளின் 
வெட்கத் தலங்கள்

விழிகளால் 
 களவு செய்து  எண்ணத்தால் 
அன்றே புணர்ந்தார்கள் ஆடையற்ற 
 அவளங்கத்தை

 நித்தமும் 
வெட்ட வெளிச்சத்தில் 
வயது பேதமின்றி அவளை 
கற்பழித்தார்கள் 
  
ம்ம்ம் ...ச்சீ....
கள் எச்சம் விழுங்கியும் 
முகம் சுழித்தும் அவ்வீதியில் 
ஆண்களும் பெண்களும் 

மூடும் 
முலையும் வெட்டவெளிப் படுத்துதல் 
காசுக்கும் பெயருக்கும்மான 
நவதொழில் 

நாளை 
மண் தின்னும் அழகை
மனிதனும் கொஞ்சம் ரசிக்கட்டுமே 
ஆடை நாகரிகம் பற்றி ஊடகத்தில் 
அவள் உரை 

இன்று 
ஆடை கழற்றியவள் 
நாளை மின்னும் திரை கூத்தாடியாகலாம் 
வரும்நாளில் ஆளலாம் 
 .....ட்டை?




16 comments:

  1. நாளை??

    இன்று போல உள்ளதே?

    ReplyDelete
  2. நாகரீகம் என்று சொல்லிப் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற நிலைமைதான் !

    ReplyDelete
  3. இறுதி வரி சொல்லில் இடம்பெற்றிருக்கும் எழுத்தில்லாக் கோட்டில்,
    கவிஞன் வைத்திருக்கிறான் வேட்டு.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே ..
    இந்த கவிதை எழுத எடுத்துக்கொண்ட
    சிரத்தை புரிகின்றது ..
    எவ்வளவு நுண்ணிய வரிகள்..
    சிறந்த படைப்பாக்கம் ..

    என் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  5. புள்ளி இட்ட இடத்தில புரிகிறது நாளைய சிந்தனை ...

    ReplyDelete
  6. நண்பரே

    ம்......சாட்டையடி வரிகள் - நிதர்சமான உண்மை

    ReplyDelete
  7. நாய்கள் புணரும் வேளை பண்பாடு பாழ்படும் நேரம் பாதுகாப்பை தவறவிட்டு எச்சில்களை உணவாய் கொள்ளும் கோழைகளின் தீய உலகம் ...சாட்டையடி வரிகள் -

    ReplyDelete
  8. @ரெவெரி

    ....(:

    வருகைக்கும் கருத்திகும் நன்றி

    ReplyDelete
  9. @ஹேமா

    சீர் கெடுக்கும் நவதொழில்
    என்ன செய்ய தோழி .....

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. @சத்ரியன்


    ....புரிதலுக்கு .... நண்பா

    ReplyDelete
  11. @அரசன் சே

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  12. @சசிகலா

    .....புரிதலுக்கு .....தோழி

    ReplyDelete
  13. @மனசாட்சி™

    நன்றி நண்பா

    ReplyDelete
  14. @மாலதி

    அனல் வரிகள்
    .....சுடுகிறது தோழி

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  15. ஆடையற்ற வார்த்தைகளுக்கு
    அழகு கூட்டி இருக்கிறீர்கள் செய்தாலி!

    ReplyDelete
  16. @AROUNA SELVAME

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...