Thursday, May 31, 2012

இரவின் சுவை

இரவின் 
சுவைகளை 
பகலில் மெல்லுகிறது சில இதழ்கள் 


முழு இரவில் 
அவர்களின் அறைநாழித் தேடல்
கிட்டா கனி புளிப்பு (நரி )


கள்ள விழிப்பு 
பொய்த் தூக்கங்கள் கனக்கும்
இரவுகள் 


ருசிக்கப்படாத சுவையில் 
கீழ்மேல் அடுக்குகிறார்கள் இ(ய)ல்லாக்
குறைகளை 


சீ ...
ஈன  ஜென்மங்கள்
திகட்டும் ஒவ்வாமை


அதாதி அவசரங்கள்
விரிசல் தேடி ....மன்ற வாசலில்
நெரிசல் 


''ருசி'' 
செத்த நாவிற்கு சபிக்கப்பட்டது 
வீதியில் கொட்டி கிடக்குது 
பச்சை வாந்திகள் 

Wednesday, May 30, 2012

சபிக்கப்ட்ட கண்ணீர்
முந்திய 
இரவின்  அரட்டைக் கிடையில் 
அறை நண்பர்  சொன்ன 
கதை 

இது 
கதையல்ல ''நிஜம்''
தொண்டை அடைத்த துக்கத்தில் 
கனத்த கரகர குரலில் இழுபட்டு உதிர்ந்தது 
சொற்கள் 

அங்கு வடக்கே''  
பாரில் கேட்டுதுண்டு இந்நாள்வரை 
கண்டிடாத நகரம் 

பதினெட்டை 
எட்டாத பதின் வயதுடயவளாம்
விரல் தும்பில் மாதங்கள்முன்   நடக்கப்பழகிய குழந்தை 
முதுகை சுற்றிய துணித்தொட்டிலில் உறங்குகிறது 
ஐந்து மாதம் கடக்காத மற்றொரு குழந்தை 

 இதில் 
வியப்பதற்கு என்னவென்க
 முடித்தபின் இடைபுகு என்றார் 
கடுத்த முகத்தில் நண்பர் 

மூன்று குழந்தைகள் 
நவ நாகரிகத்தில் வளர்ந்தது 
அறிவா ...? காமமா ...?
செவிடனைபோல் 
மௌனித்து  வேகமாய் நடக்குகிறது 
காலம் 

வினா 
எழுப்பலில்  
சற்றென அறையை ஆக்கிரமித்தது 
சிறு மௌனம் 

வஞ்சகன் 
ஒருவனின் காதல் மாயையில் விழுந்து 
தாலிச் சிறைக்குள் அகப்பட்டு ரத்த உறவுதுறந்து 
தெற்கிலிருந்து வடக்கே போனவள் 

ஆசை தீர்த்து 
பின் ஊருக்கு காட்சி வைத்தவன் 
கூவி விற்றான்
மனித அடிமைச் சந்தையில் 

விலை 
பொருளாய் ஆதரவற்ற 
அனாதைகள்  

விலைக்கு 
எடுப்பது சமூக மாநியனின் 
கறுத்த முகம் 

அந்த நகரில் 
பிச்சை கரம் நீட்ட சொல்கிறான் 
இல்லையேல் அரங்கேறுகிறது 
அடி உதை ரணவலிகள்

நான் கடவுள் 
படக்கதைபோல் இருக்கே 
என் நையாண்டியும் நண்பரின் 
கடுத்த புன்னையும் 

சதிக்குழி 
வீழ்ச்சியும் பெராழமும் 
விழித்தெழ சறுக்கல் தடுமாற்றமும் 
எழுதலில் வீழ்ந்தபடியே அவள் 

வேகமாய் 
ஓடிய கால நாழிகைகளில் 
ரணங்களை சுமந்து இழைந்தபடி அவள் 

பிச்சை 
பாத்திரம் நிரப்பியும் 
கால்வயிறு மூடாத பசியும் 

வற்றிய  வயிறு 
தளிராத மார்பில் 
சுரக்கத பாலுக்காக ஒப்பரிவைக்கும் 
கைக் குழந்தை 

இல்லா சுவற்றில் 
அவள் எழுதிய தன் 
விதி கவிதை ?

சிறை 
மீள் உறுதி மனமுமாய் 
தக்க தருணம் தேடி 
காலம் கடத்தி அவள் 

கயவக் கூட்டம் 
மதி மயங்கியதருணம் 
இருச் சுமையுமாய் சிறை உடைத்தாள்

ரயிலேறினாள்
விழித்த கயவர்களோ 
எட்டுத் திசை தேடியோடி ..

பசியில் 
நீண்டநேரம் ஒப்பாரிவைத்த 
கைக்குழந்தை மூர்ச்சையாகி  மௌனிக்க
 ஆள் கூடிய பயணச் சபையில் 
நெஞ்சடித்தழ இயலாதவளாய் அவள் 

இரவை 
விழுங்கிய நீண்ட ரயிலோட்டம் 
புலரில் கண்டு வியந்தாள் 
இறந்த கை குழந்தையின் நிறமாற்றம் 

அவளின் 
அக விதும்பலை உணர்ந்த பயணிகள் 
கேள்வி வினவ 
மனம் உடைத்தெறிந்து கொட்டினாள்
துக்கக் கதையை 


 வழிந்தொளுகிய
அவள் கண்ணீரை துடைக்க 
கரம் நீட்டினார்கள் 
நெஞ்சில் 
ஈரமுள்ள சிலமனிதர்கள் 

ரயில் 
நின்ற ஊரில் புதைத்தாள்
பசியில் இறந்த பச்சப் பிள்ளையை 

விரல் 
தும்பியில் தூங்கி நிற்கும் 
மீத குழந்தையுமாய் 
பிறந்த ஊருக்கு ரயிலேறினாள் 

எங்கோ 
உறங்கும் குழந்தையின் நினைவுமாய் 
சொந்த மண்ணில் உழைத்து மீத   குழந்தையுமாய் 
வாழ்கையை நகர்த்திகிறாள் 

உழைத்து 
வயிற்ருக்கு உணவு கொடுத்தாலும் 
வீதிக்கு வந்து பிச்சைக் கை நீட்டுதாம் 
பழக்கம் மறக்காத மூத்த குழந்தை 

நீண்ட பயணம் 
இறந்த பச்சக் குழந்தை 
நாள் முழுவது கண்ணீரை அடக்கிவைத்த 
பச்சிளம் தாய் 

அவளின் 
வலியும் உணர்வும் எப்படி இருந்திருக்கும் 
வினா முடிவில் முடிந்தது கதை .

கதையை 
சொல்லிவிட்டு உறங்க போய்விட்டார் நண்பர் 
என்னை இரவுமுழுக்க உறங்க விடாமல் செய்தது 
கதை 

நம்மை 
சுற்றிய எத்தனையோ கண்ணீர்கள் 
அதில் எத்தனையோ கதைகள் 

இந்த
கதையை ஏன் சொல்கிறேன் 
எனக்கு சொல்லத்தெரியவில்லை 
வாசித்து நீங்கள் சொல்லுங்கள் 
நான் ஏன் சொன்னேன் என்று .


Monday, May 28, 2012

வெளியேறியவன்
அவனை 
தேடி அலைகிறேன் 
அவனோ என்னிலிருந்து ஓடி ஒளிகிறான் 
நானும் விடாது துரத்திக்கொண்டு 

அந்தநாள் 
நினைவில் இல்லை இருப்பினும் 
சிந்தையின் ஒரு மூலையில் பதிந்திருந்தது 
அவன் இறங்கிச் சென்ற வடு 

ஒளிரும் 
சாயங்கள் பூசிக்கொண்டு வந்த  களங்கங்கள் 
பொய்யும்  வஞ்சனையும் ஆடைகழற்றிய தாண்டவம் 
தேங்கிய நஞ்சு சீழின் கொச்சை வாசம் 
திணறலில் அகம் புழுங்கி வெளியேறினான் 
அன்றுவரை என்னுள் இருந்தவன் 

பாலுக்கான 
யென்  கள்ளழுகையில் 
ஓ... பசி..குழந்தை என்றானோ... 

நினைவில் 
பதியாத மழலைப் பொய்யும்
...ம்மாவின் மிரட்டலும் தேம்பிய யென்   கண்ணீரும் 
பாவம் என்று இளகினானோ...

பால்யம் 
கடந்த பருவமும் பொடிக் கள்ளமும் 
மெல்ல பெருகிய நச்சு நீரூற்றும்

சிறைபட்டு 
உயிர் வதைபட்டு இருப்பானோ அவன் 
அகத்திலிருந்து  நழுவி ஒழுகிவிட்டானே 

அவன் 
என்னோக்கி மௌனிக்கிறான் 
யென் பொய்களோ என்னோக்கி அழுகிறது 

 ...ண்ணில்
யென்னுடல் சுமையாக 
வாழ்கையில் அகப்பொய் சுமைகள் 

...ப்பாவப் 
பொய்க் கறைகளை கழுவி கவிக்கிறேன் 
வாழ்வின் மோட்சமாய் 
மீண்டும் 
அவன் வருவான் என்ற நம்பிக்கையில் 

Monday, May 21, 2012

வலைச்சரத்தில் நான்

அன்பின் 
அழைப்பும் ஆசிரியர் 
மகுடமும் 
மகிழ்வில் தத்தளிக்கிறது 
'''மனம்''

 ஏழுநாள் 
வலைச்சர பணி 
சிறக்க சிறப்பிக்க வாழ்த்துங்கள் 
உறவுகளே 

 வாருங்கள் வலைச்சரத்திற்கு உங்களில் ஒரு(வன்)மலர் 

Sunday, May 20, 2012

அன்பின் பகிர்தல் (விருது )புன்னகை விதைப்பில்
 மறு புன்னகை நீருற்றலில்
தளிர்கிறது அன்பு 

அன்பு 
வழிந்தொழுகும் நெஞ்சில் 
உயிர் நீத்துப் மடிகிறது 
வெறுப்புக் கனல் 

குவிந்தும் 
பகிராத பொருட்கள் சீழ்வடியும் 
அகத்தில் கனமாய் தேங்குகிறது 
பகிரப்படாத அன்பு 

 பகிர்தல் 
உணர்வோ பொருளோ 
இலகுவாகிறது மனித உறவுகளின் 
வாழ்க்கை 

தங்கை 
''கலை'' யின் அன்புப் பரிசு 
அகத்தில் ஏந்தினேன் பகிர்கிறேன் 
நன் உறவுகளோடு 

சிறந்த 
படைப்புக்களால் வலையாழும் 
நன் தோழமைகளுக்கு சமர்ப்பிக்கிறேன் 
அன்பை (விருதை )


Wednesday, May 16, 2012

....லைக்கு பிறந்த நாள்
தளிர் 
பள்ளிப் பருவம் 
விடுமுறை நாட்களும் நூலக அறிவாலய 
தரிசனமும் 


நல் 
புத்தக நண்பகர்களும் 
ஆழ்ந்த வாசிப்பில் கழித்த 
அழகிய தருணங்கள் 
  
மதியை 
சூழ்ந்திருந்த இருளை
தன் ஒளிகளால் விரட்டியடித்தது
சில எழுத்து வரிகள்

எதோ எதோ 
படித்தேன் எண்ணத்தில் உதித்தவைகளை
கிறுக்கினேன்

இராத்திரிமுளுக்க
என்னதான் படிப்பானோ...
விடிஞ்சு பார்த்த தாள் குப்பையா கிடக்குது
அம்மாவின்  தினப் புராணம்

கவிதை 
போல் இருக்கே 
கிறுக்கி கசக்கி எறிந்த தாளை
வாசித்த பால்ய நண்பன் 

 ஆமா 
நாளைக்கு அதுதான்....
பசிக்கு சோறு போடப்போகுது
அப்பாவின் நகைப்பு

நல்லா 
எழுதிரிக்கியே ம்ம்ம் ..சபாஷ் 
பிழைகளை திருத்தி  தோள்தட்டிய 
தமிழ் ஆசிரியர் 

நல்ல 
புத்தகங்களை வாசிக்கையில்
அறிவுடன் மன மகிழ்ச்சியும்
 சுயம் உணர்ந்த வாழ்கையின்
புதிய கோட்பாடுகளும்

உண்மையை 
கிறுக்கி ஊருக்குச் சொல்கையில்
அகத்தில் சாந்தம் கொள்கிறது 
ஆன்மா 

குறிப்பேட்டில் 
கர்ப்பம் கொண்ட கிறுக்கல்கள் 
வலைகளில் பிரசவமான இரண்டாம் 
ஜென்ம நாள் 


வலையில் 
கிறுக்கலை விதைத்தேன் 
மனம் நிறைய சம்பாதித்தேன் 
நல் உறவுகளை 

அன்றும் 
இன்றும் என்றும் ஊக்கம் ஊட்(டிய)டும்  
நல் தோழமை உறவுகளுக்கு 
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் Monday, May 14, 2012

பழைய ....ப்பா கிறுக்கல்கள்
காத்திருப்பு

*இன்றும்
வரவில்லை அவள் பாதங்கள்
மூலையில் உறங்கும் செருப்பு

உள்குரல்

*அம்மா ...
உன் முகம் பார்க்காமல் போகிறேன்
கருவில் சிதையும் குழந்தை

தாசி

*சதைகளை
இரவலுக்கு எடுத்தவன் இறுதியில்
விட்டுச் சென்றான் காயங்களை


ஆத்மா
  
*பந்தங்களை
முறித்துக்கொண்டு நீ சென்றதால்
சுடுகாட்டில் எரிகிறது என் வெற்றுடல்


அந்திப்பொழுது

*யார் 
கிள்ளியது வானதேவதையின் 
கண்ணத்தை

கருவாட்டுகொழம்பு

*சந்தையிலே
காயிந்த பிணம்
வீட்டு சமையலில்

பைத்திக்கரன்  

*முகவரிமறந்து
உறவுகளை தொலைத்து வீதியில்
உலவும்உயிருள்ள பிணம்


கருணை பஞ்சம்

*வங்கியின்
வாசப்புரத்து வெற்றுத்
திருவோடுமாய் பிச்சைக்காரன்முதுமை

*நித்திரை
நாழிகை தருணங்களில் சிறு
ஐயத்தோடே இமைமூடுகிறது விழிகள் 
Sunday, May 13, 2012

தாய் மனசுஎன் 
பிறப்பில் 
பொருளும் சுகமும் குடும்பத்தில் 
தொலைந்ததாய் 
 உறவுகள் கூடிய சபையில் 
சொல்லிக் கொண்டிருந்தாள் 
பாட்டி 

(தாய் )
வடித்த கண்ணீரும் 
சுமந்த துக்கமும் 
இருந்த நோன்புகளும் 
பாட்டி சொல்லி முடிக்கும்முன் 
உடன் பிறப்புக்களின் விழிகளை நிரம்பியது 
கண்ணீர் 

 ம்மா... 
சள்ள பிள்ளை நான் 
பிழைக்காது செத்து போயிடும்ன்னு 
ஊரும் உறவும் சொல்லியும் 
அன்னைக்கே...ஏம்மா 
கொல்லல

அகம்
கனத்து 
விழியில் நீர் சொட்ட கேட்டேன் 
கொல்லவா சுமந்தேன் 
பத்துமாசம் 


தாய் 
சொல்
சபையில் வெறிக்காது கொட்டியது 
கண்ணீர் மழை 


*உதிரும் 
சருகுகள் முத்தமிடுகிறது 
தாய் காலடியை 

*அன்று 
இருமுறை உயிர் 
உடுத்திய  என் தாய்க்கும் தாய்மார்களுக்கும் 
அகம் கனிந்து சமர்ப்பிக்கிறேன் 

Thursday, May 10, 2012

என் (அப்பா ) தெவசம்
வீட்டு
முற்றத்தில் நிரம்பி வழிந்த
ஆள் கூட்டம்

கூடத்தின் நடுகே
மூடப்பட்ட வெள்ளைத் துனியரிகில்
அழுதுகொண்டிருந்தார்கள்
அம்மாவும் தம்பிகளும்

என் புள்ள
முகத்தை பாக்கணும்
அலறிக்கொண்டு ஓடி வந்த
சித்தப்பா


மௌனமாய் 
விழிகளில்  கண்ணீர் ஒழிக்கியபடி
உற்ற நண்பர்கள் 

ஏன்
அழுகிறீங்க சத்தம் போடுகிறேன் 
குரலை செவிமடுக்காமல் அழுதுகொண்டு 
அவர்கள் 

அவர்கள் 
அருகில் நான் நிற்கிறேன் 
என்னை கண்டுகொள்ளாமல் அவர்கள் 
அழுதபடி

விலக்கப்பட்ட துனியினுள்
அப்பா தெவசத்திற்கு
பெருட்கள் வாங்க கடைவீதிக்குபோன
என்முகம்

சற்றுன்னு 
சாலையை கடைக்கையில்
லாரிக்காரன் மோதி
இறந்துவிட்டான்


மூலையில்
ஒதுக்கப்பட்டிருந்த இரத்த கறைபடிந்த
சைக்கள் அருகில் யாரோ
பேசிக்கொண்டிருந்தார்கள்


சிதைந்த
உடலருகில் ஒப்பாரி வைக்கும்
உறவுகளிடம் எப்படி சொல்வேன்
நாளைக்கு அப்பாகூட
வருகிறேன் என்று .....

Tuesday, May 8, 2012

கசையடிச் சத்தம்ஆள்கூடும் 
முச்சந்தி வீதிகளில் காணப்படலாம் 
அவனும் அவன் கூட்டத்தார்களையும் 

வீதி 
மனிதர்களின் கவனத்தை சிதறடித்தது 
அவன் கால் சலங்கையின்
 துள்ளல் சத்தம் 

முறுக்கேறிய 
சாட்டையால் வெற்றுடலில் 
அடித்துக் கொள்கிறான் தன்னை தானே 
அவன் 

சலங்கை ஒலி
சாட்டை அடிச் சத்தமும் 
கீறல்களும் அதில் ஒழுகும் பச்சைக் 
குருதியும் 

வீதியின் நடுகே 
கிடத்தப்படும் சிறுகுழந்தையும்
இரும்பு வளையத்தால் கீறலிட்டு 
பலவந்தமாய் ஒழுக்கும் குருதித் 
துளிகளும் 

கூடிநின்று 
வேடிக்கை பார்க்கும் மனிதர்களும் 
அவர்களிடையே பிச்சை  பாத்திரமேந்தி 
இவனும் 

தன்னை அடித்து 
சுய அடிமைத்தனத்தை ஊருக்கு வெளிச்ச்மிட்டும் 
உடல் வலுவிருந்தும் பிச்சையேந்தும் 
குல பாரம்பரிய அடிமை 

ஓடும் காலத்தில் 
 பாழ் குல சம்ராதய பாரம்பரியங்களிலிருந்து 
வெளியே வந்து வாழ்கிறார்கள் எத்தனையோ 
மனிதர்கள் 

நவ உலகில் 
குலப் பாரம்பரிய அடிமையால் 
 இன்றும்  எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிறது 
கசையடிச் சத்தம் 


Monday, May 7, 2012

அந்த வெட்கை

 மரங்கள் 
 கொலையுண்ட வீதியில் 
தணலின்றி வெட்கையில் துவளும் 
உயிர்கள் 

 அன்பு 
அறுந்த மனதில் வெட்கை 
தணலற்று வாழ்கையில் ரணப்படும்  
உறவுகள் 

நீரில் 
மிதக்கும் நிலம் 
வெட்கை  சாபம் கானலாய் 
ஈரம் 

நீருடல் 
மனித நெஞ்சு 
சுயநல வெட்கை உலர்ந்த 
ஈரப்பதம்

பகலவனை 
சுற்றும்  பூமா பெண் 
கால வரமாய்... (சாபமாய்)... 
வெட்கை 

ஜனனமரண 
சக்கரத்தில் ஓடும் மனிதன் 
வாழ்க்கை வரமாய்... சாபமாய்...  
வெட்கை 

வெட்கை
உடலில்  உள்ளத்தில் 
பலவந்தமாய் உதிர்க்கிறது 
...ண்ணீர்

மரத்தை வெட்டி 
நிழலுக்காக ஓடுபவர்களை போல் 
உறவுகளில் அன்பை அறுத்து ஓடுகிறார்கள் 
....தேடி 

இயற்கையின் 
வெட்கை இறை  (வரம்) 
மனிதனின் செயற்கை வெட்கை 
சாபம்.

Thursday, May 3, 2012

மூன்றாம் பால்
சின சொல் 
வெட்கையில் வாடியது 
மலர்முகம் 

தாழ்ந்த கருவிழி 
உலர் கனியிதழில் மௌன 
மொழி 

பகல் 
நாழிகைகளில் நோயுற்று இழையும் 
நித்த கடமைகள் 

பசி 
பரிமறபட்டும் உண்ணப்படாமல்
பொங்கிய சோறு 

நித்திரை 
மஞ்சத்தின் இடைவெளியில் தஞ்சத்தில் 
தலையணை 

முகம் 
சுவர்பார்க்க பின்முதுகுகாட்டிய 
கள்ள உறக்கம் 

மௌன யாசிப்பில் 
இனங்கலும் ஐவிரு  விரல்களின் 
சேட்டைகளும் 

பிணக்கம் 
ஓட இணக்கம் பின்துரத்தும் 
ஊடல் விளையாட்டு 

சிணுங்கல்
அலுத்து களைப்பார உணரும் 
கள்ளப் பார்வை 

அவளின் 
திரும்பல் இவனின் கள்ளக் 
குழையல்

 மறுபடியும் 
சில நொடிகள்  நீண்டது 
தொடக்கம் 

ம்ம்ம் ......(:

 இரவு
குளிரில் துடிதுடித்து இறந்தது 
பகல் வெட்கை


Wednesday, May 2, 2012

அடையாள தர்க்கம்
அவர் 
இவர் அது.. இது.. 
அற்ப தர்க்கங்களில் மனிதனின்  
சொல் யுத்தம் 


எல்லை 
மீறும் தர்க்கங்களில் 
அகத்திலிருந்து உதிர்கிறது 
புறச்  சாயங்கள் 


மழையாய் 
கொட்டிய  தர்க்கங்கள் வெரித்தபின்
நல் உறவுகளில் படிக்கிறது 
விரிசல் கறை
  

பிற 
அடையாள செருகலில் 
தூக்கில் ஏற்றப்படுகிறது 
சுயம் > இதையும் வாசிக்கலாமே 
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அடையாளம் காண்கிற தற்காப்பு 

Tuesday, May 1, 2012

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை
உணவு
உடல்நலம் உடுதுணி 
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்

பிள்ளைக்கு
அது வாங்கினிங்களா இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்

நமக்கு
வயசுக்கு வந்த பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்புஇரண்டானது
என் நாற்பதுகளில்

மருமகன்
மருமகள் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்

நாளத்தில்
குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்

ஆசை
அறுபது நாள் மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும் சுன்டாத உணர்ச்சிகளும்
என்  எழுபதிலும்


உடல்
மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும் துடிக்கிறது
ஆண்மைக்குள்வயதுகளின்
பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்


/ மீள் பதிவு //

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...