Tuesday, May 1, 2012

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை
உணவு
உடல்நலம் உடுதுணி 
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்

பிள்ளைக்கு
அது வாங்கினிங்களா இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்

நமக்கு
வயசுக்கு வந்த பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்புஇரண்டானது
என் நாற்பதுகளில்

மருமகன்
மருமகள் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்

நாளத்தில்
குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்

ஆசை
அறுபது நாள் மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும் சுன்டாத உணர்ச்சிகளும்
என்  எழுபதிலும்


உடல்
மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும் துடிக்கிறது
ஆண்மைக்குள்வயதுகளின்
பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்


/ மீள் பதிவு //

17 comments:

 1. கவிதை நல்ல இருக்கு அண்ணா ...எப்போதும் போலவே ...

  மே தின வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 2. //மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
  இருவதாம் பருவத்தின் அதே
  உணர்வுகளும் உணர்சிகளும் துடிக்கிறது
  ஆண்மைக்குள்//

  உணர்வு பூர்வமாக - மனதை கவர்ந்தது

  ReplyDelete
 3. 20,30,40,50,60 & 70 அந்த அந்த பருவ காலத்தில் சொன்ன விதம் பிடிச்சிருக்கு

  ReplyDelete
 4. பருவத்தைப் பலவாறு பிரித்த தன்மை
  பகிர்ந்திட்ட அனைத்துமே உண்மை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. வயதுகளின்
  பேதம் சொல்லி
  ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்//
  யதார்த்த வரிகள் வாழ்வின் உண்மை நிலையை உணர்த்திப் போகும் வரிகள் அருமை .

  ReplyDelete
 6. “மீசை நரைத்தாலும்
  ஆசை நரைக்காது...“

  “சாண் பிள்ளையானாலும்
  ஆண்பிள்ளை இல்லையா...“

  ம்ம்ம்... பெண்களுக்கு அதெல்லாம்
  என்ன தெரியப்போவுது....

  உங்கள் கருத்து அருமைங்க செய்தாலி.

  ReplyDelete
 7. /வயதுகளின்
  பேதம் சொல்லி
  ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்//உண்மை வயதானவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு

  ReplyDelete
 8. அருமையான படைப்பு
  பத்தினி பெயர் நான்கு சொல்லு எனச் சொன்னவுடன்
  புராண காலத்து பெண்களின் பெயரையெல்லாம் சொல்லி
  தன் மனைவி மற்றும் சகோதரிகளின் பெயர் சொல்ல மறந்த கதையை
  அனைவரும் கேட்டிருக்கக் கூடும்
  அதே போல உலகத் தொழிலாளர்களின் அருமையை பெருமையை
  கொண்டாடும் இந்த நாளில் எதையும் எதிர்பாராது
  நமக்காவே வாழ்ந்து சாகும் ஒரு ஜீவன் குறித்து எத்தனை பேர்
  அக்கறை கொண்டிருக்கிறோம்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை

  ReplyDelete
 9. வாழ்க்கை முழுவதும் துணையிருப்பேன் என்று சொல்லிவிட்டு, வாழும்போதே பிரிந்திருப்பது என்ன நியாயம்? குடும்பம், பிள்ளைகள், சுற்றம், சமுதாயம் என்று மற்றவர்க்காய் உற்ற துணை அருகிருந்தும் பிரிந்து வாடும் தன்மை மிகவும் வேதனைக்குரியது. ஆறுதலாய்க் கைப்பற்றவும் தேறுதலாய்த் தலை கோதவும் சில மணித்துளிகளாவது ஒதுக்கவேண்டும் இல்லறவாழ்வில் இணைக்கென. அது எந்த வயதானபோதிலும். அருமையான கருத்தை முன்வைக்கும் கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 10. @கலை

  மிக்க நன்றி கலை

  ReplyDelete
 11. @மனசாட்சி™

  (:
  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 12. @புலவர் சா இராமாநுசம்

  உங்கள் வருகைக்கும் நல் கருத்திற்கும்
  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 13. @சசிகலா

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 14. @AROUNA SELVAME

  (:
  மிக்க நன்றி

  ReplyDelete
 15. PREM.S

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 16. @Ramani

  உங்கள் வருகைக்கும் நல் கருத்திற்கும்
  மிக்க நன்றி சார்

  ReplyDelete
 17. @கீதமஞ்சரி

  உங்கள் வருகைக்கும்
  உணர்ந்து எழுதிய விரிவான
  நல் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...