Wednesday, May 2, 2012

அடையாள தர்க்கம்




அவர் 
இவர் அது.. இது.. 
அற்ப தர்க்கங்களில் மனிதனின்  
சொல் யுத்தம் 


எல்லை 
மீறும் தர்க்கங்களில் 
அகத்திலிருந்து உதிர்கிறது 
புறச்  சாயங்கள் 


மழையாய் 
கொட்டிய  தர்க்கங்கள் வெரித்தபின்
நல் உறவுகளில் படிக்கிறது 
விரிசல் கறை
  

பிற 
அடையாள செருகலில் 
தூக்கில் ஏற்றப்படுகிறது 
சுயம் 



> இதையும் வாசிக்கலாமே 
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அடையாளம் காண்கிற தற்காப்பு 

16 comments:

  1. //பிற
    அடையாள செருகலில்
    தூக்கில் ஏற்றப்படுகிறது
    சுயம்//

    உண்மை தான் நண்பா - என்ன செய்ய இந்த தர்க்கத்தை?

    ReplyDelete
  2. அடையாள தர்க்கம்
    அருமையான சொற்பிரயோகம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அடையாள தர்க்கம்
    அருமையான சொற்பிரயோகம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பிற
    அடையாள செருகலில்
    தூக்கில் ஏற்றப்படுகிறது
    சுயம்

    உண்மை நண்பா.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பரே..
    கவியில் உங்களின் சொல் விளையாடல்
    மிகவும் ஈர்ப்புடையது..
    "அகம் உமிழும் புறச் சாயங்கள்..."
    அருமையான சொல்லாடல்...
    அழகிய கவிதை...

    ReplyDelete
  6. அண்ணா கவிதை சூப்பர் ....

    உங்கள் கவிதையில் சின்னதா இன்னைக்கு தான் படிக்கிறேன் ..சூப்பர்

    ReplyDelete
  7. அடையாள செருகல் இல்லாத மனிதன்....கஸ்டம்தான் !

    ReplyDelete
  8. உலகத்தையே படம் பிடிப்பதாய் அழகிய கவிதை ... என் நன்றிகள

    ReplyDelete
  9. @மனசாட்சி™

    உங்கள்
    தொடர் வருகைக்கும் நல் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  10. @Ramani

    உங்கள்
    கருத்துக்கும் பாராட்டிற்கும்
    மிக்க நன்றி சார்

    ReplyDelete
  11. guna thamizh

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி நண்பாரே

    ReplyDelete
  12. @மகேந்திரன்

    உங்கள் வருகைக்கும்
    நல் உற்ச்சாக கருத்திற்கும்
    மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  13. @கலை

    மிக்க நன்றி கலை
    ஆரமத்தில் சின்னதா தான் எழுதி வந்தேன்
    எழுதுகிற தீம் இன்
    சூழல் சார்ந்து சொல்ல முயலும்போது
    எழுதுவது நீண்டு போகிறது கலை

    இனி சின்னதா சொல்ல முயல்கிறேன்

    உன் அன்பிற்கு நன்றி கலை

    ReplyDelete
  14. @ஹேமா

    இங்கு
    எல்லாருக்கும் அவசியப்படுகிறது
    அடையாளம்

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  15. @அரசன் சே

    ம்ம்ம் (:
    உங்கள் அன்பிற்கு கருத்திற்கு
    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  16. சுயமற்றதே வாழ்வு நண்பா.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...